ஆறு (6) இலட்சத்தை தாண்டியுள்ள அரச சேவை ஓய்வூதியர்களின், வருடாந்தம் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் முறைமையை டிஜிட்டல்மயப்படுத்தல் திட்டம் இவ்வருடத்தின் ஆரம்பப்பகுதியில் ஓய்வூதியத் திணைக்களத்தினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த நாட்களில் தேசிய சேமிப்பு வங்கியும் உத்தியோகபூர்வமாக உடன்படிக்கையில் கைச்சாத்திடல் மூலமாக இணைந்து கொண்டது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையின் கீழ் இந்நிகழ்வு உத்தியோகபூர்வமாக இடம்பெற்றதுடன், இச்சந்தர்ப்பத்திற்கு தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கேஷலா ஜயவர்தன, ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ், அமைச்சின் ஆலோசகர் மஹிந்த மடிஹஹேவா போன்றோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.