Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News headline The Commonwealth Secretary- General meets the Minister of Public Administration, Management and Law & Order……

The Commonwealth Secretary- General meets the Minister of Public Administration, Management and Law & Order……

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் திருமதி பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் அவர்கள், கடந்த (03 ஆந் திகதி) முற்பகல் அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களை அவரது அமைச்சில் சந்திந்தார். இச் சந்திப்பின் போது, பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்தல், கண்டறியப்படாத சொத்துக்கள் தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் போன்று காலநிலை மாற்றங்கள் சம்பந்தமாக ஒரு அமைப்பாக இணைந்து செயலாற்ற வேண்டிய விதம் ஆகிய பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அது போன்றே தற்போது இந்நாடு சனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆளுகை என்பனவற்றை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் சம்பந்தமாக மத்துமபண்டார அமைச்சர் அவர்கள் பொதுச் செயலாளருக்கு விளக்கிக் கூறியதுடன், இலங்கை இத்துறைகளில் அடைந்துள்ள சாதனைகளின் மேம்பாடு குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக திருமதி ஸ்கொன்லன்ட் அவர்கள் தெரிவித்தார். இச் சந்தர்ப்பத்தில் அமைச்சின் செயலாளர் திரு. பத்மசிறி ஜயமான்ன அவர்களும் கலந்துகொண்டார்.

 

இற்றைப்படுத்தப்பட்டது 17-08-2018.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter