மேலும் தாமதமின்றி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரிடமிருந்து செயலாளருக்கு ஆலோசனை....
கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அனைவருக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் சலுவை வழங்கும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக எழுத்தாவண ரீதியான ஆலோசனை எதிர்வரும் தினங்களினுள் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். நிருவாக அமைச்சினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வினவுவதற்காக அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் அலுவலர்களை (12 ஆந் திகதி) அமைச்சர் சந்தித்த போது இக் கருத்தினைத் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிடுகையில் இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கள் எமது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அரசியல் பழிவாங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கப்படுதல் வேண்டும் எனக் கூறினார். இங்கு அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுக்கு உரிய அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பொலிஸ் திணைக்களம் தொடர்பான 562 முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதனை துரிதப்படுத்துமாறும் இத் தீர்மானத்தினை காலம் தாழ்த்தாது இருக்குமாறும் உரிய அலுவலர்களுக்கு அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு இணையாக ஏனைய அமைச்சுக்களிலும் அரசியல் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இசைந்து குறித்த தீர்மானத்தினை உடனடியாக செயற்பாட்டிற்கு கொண்டுவருமாறு ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உரித்தான எழுத்து மூல ஆலோசனை எதிர்வரும் தினங்களினுள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.