Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News headline பொலிஸ் சேவையை தொழிநுட்பத்துடன் கூடியதாகவும், முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்குமான ஆஸ்திரியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...

பொலிஸ் சேவையை தொழிநுட்பத்துடன் கூடியதாகவும், முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்குமான ஆஸ்திரியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...

 

இலங்கை பொலிஸ் சேவையை நவீன தொழிநுட்பத்துடன் கூடியதாக மாற்றியமைப்பதனூடாக, முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் பொருட்டு ஆஸ்திரியா அரசாங்கம் தனது ஒத்துழைப்பினைத் தெரிவித்தது. இவ் ஒத்துழைப்பினை வியிட்டது புதுடில்லியின் ஆஸ்திரியா பிரதி கன்சியூலர் திரு. கிரிஸ்டோப் மெயன்பர்க் அவர்கள் அரசாங்க நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் திரு. ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் கடந்த (23) ஆந் திகதி அவரது அமைச்சில் வைத்து சந்தித்த வேளையிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆஸ்திரியாவில் மேற்கொண்ட விஜயத்தின் போது இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் வலியுறுத்திக் கூறினார். அவ் வேண்டுகோளுக்கு அமையவே இச் சந்திப்பு நிகழ்ந்தது. உத்தேச சலுகைக் கடன் திட்டமொன்றாக இந் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், கட்டம் கட்டமாக இக் கடன் தொகையை வழங்குவதற்கு ஆஸ்திரியா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மத்துமபண்டார அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் முதற் கட்டமாக 10 யூரோ மில்லியன் தொகையை வழங்குவதற்கு அவ் அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததுடனூடாக முழுமொத்த மேல் மாகாணமும் உள்ளடக்கப்படும் வகையில் சீசீரிவி கெமரா முறைமையொன்றைத் தாபிப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதனூடாக கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான வாய்ப்பு பரந்துபட்டதாக அமையும். அதன் இரண்டாவது கட்டத்தின் போது இன்னும் 10 யூரோ மில்லியன் தொகையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் அத் தொகையில் இருந்து 119 அவசர அழைப்பு சேவையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு மேலதிகமாக ஆஸ்திரியா அரசாங்கத்துடன் இணைந்து இன்னும் 30 யூரோ மில்லியன் சலுகைக் கடனை ஸ்பானிய அரசாங்கம் வழங்குதவதற்கு எதிர்பார்த்துள்ளதாக திரு. கிரிஸ்ரோபர் மெயன்பர்க் அவர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டார். அத் தொகையினூடாக பொலிஸ் தொடர்பாடல் பிரிவினை மேம்படுத்துவது ஆஸ்திரிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

சர்வதேச தொடர்பாடல் துறையில் வலிமைமிக்க நாடாக ஆஸ்திரியா இனங்காணப்பட்டுள்ளதுடன், உலகின் முதற்தர வரிசையிலுள்ள பல நாடுகளின் பாதுகாப்பு தொடர்பாடல் தொடர்பான உதவியாளராகவும் ஆஸ்திரியா அரசாங்கமே திகழ்கின்றது. இச் சாத்தியப்பாட்டின் அடிப்படையில் அவ் உத்தேச சலுகைக்கடன் திட்டத்தை இந்நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இவ்விரு நாடுகளினதும் அரசாங்கங்களுக்கிடையே இக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன.

இச் சந்தர்ப்பத்தில், ஆஸ்திரியாவின் க்லோபல் சேல்ஸ் குரூப்பின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி பர்ன்ட் நொவக், அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 08 August 2018 04:03  

இற்றைப்படுத்தப்பட்டது 14-12-2018.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter