Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News headline கொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...

கொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...

 

கொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராயும் பொருட்டு விசேட கலந்துரையாடலொன்று அரசாங்க நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களின் தலைமையில் இன்று (21 ஆந் திகதி) அவரது அமைச்சில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாரச்சி அவர்கள், மொரட்டுவ பல்கலைக்கழக்கத்தின் விரிவுரைரயாளர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட மோட்டார் வாகன பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலின் போது, கொழும்பு மோட்டார் வாகன கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் 350 மோட்டார் வாகன பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையாக உள்ளமை பற்றி அவதானம் செலுத்திய அமைச்சர் அவர்கள், உடனடியாக இப் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதற்கு தாம் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதாக குறிப்பிட்டார். ஒரு நாளைக்கு கொழும்பு மாநகருக்குள் சுமார் 2000 ரிப்பர் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதுடன், பெருந்தொகையான கன்டேனர்களும் ஒருகொடவத்தை பிரதேசத்தை மையமாக கொண்டு செயற்படுத்தப்படுவதன் காரணமாக விசேடமாக பேஸ்லைன் வீதி, இங்குரு கடே சந்தி, நீர்கொழும்பு வீதி போன்றே கண்டி வீதி, கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களிலும் நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட, சிரேஷ்ட மோட்டார் வாகன பொலிஸ் உத்தியோகத்தர்கள் அது சம்பந்தமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்பையும் கோரினர். அதற்கான முன்மொழிவுகள் கோரப்பட்ட போது, நீர்கொழும்பு வீதிக்கான மாற்றீடாக எலகந்த ஊடாக செல்லும் வத்தளை போபிட்டிய வீதியும், கண்டி வீதியின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மாகொலை, பியகம வீதியும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினர். இம் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அவ் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தான் எடுப்பதாக கூறினார். அவ்வாறே ஒழுக்க நெறிமுறை வழுவாத சாரதிகளை உருவாக்கும் பொருட்டு முன்மொழியப்பட்ட புள்ளிகளை குறைக்கும் செயன்முறை இதுவரை அமுல்படுத்தப்படாமை குறித்து அமைச்சர் அவர்கள் பொலிஸாரிடம் வினவிய போது, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுக்கிடையே காணப்படுகின்ற கணனிமய குறைபாடுகள் பிரதானமாக தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரியவந்தது. இக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து குறித்த செயன்முறையை வலுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் குறித்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். எனினும் கடந்த ஆண்டுகளில் மோட்டார் வாகன குற்றங்கள் தொடர்பாக கொழும்பு நகரில் மாத்திரம் அறவிடப்பட்ட தண்டப்பணம் ரூபா 278 மில்லியன் ஆக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், தண்டப் பணம் சேகரிப்பதல்ல, ஒழுக்க நெறிமுறை வழுவாத சாரதிகளையும், முறைசார் போக்குவரத்து செயன்முறையொன்றையும் உருவாக்க வேண்டியதே அவசிமானதென குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், மத்தியகால மற்றும் நீண்டகால முன்மொழிவுகளை கூடிய சீக்கிரம் வழங்கும்படி குறித்த அலுவலர்களிடம் தெரிவித்தார். அது போன்று, இந் நடவடிக்கைகளின் போது, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதுடன், போக்குவரத்து அமைச்சர், மாநகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருடன் உடனடியாக தான் இதுபற்றி கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

Last Updated on Wednesday, 08 August 2018 04:02  

இற்றைப்படுத்தப்பட்டது 14-11-2018.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter