Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

රටක් සංවර්ධනය කීරීමේ කාර්යය පැවරෙන්නේ රාජ්‍ය සේවයේ ඉන්න පිරිසට.

පාකිස්තානු දූත පිරිසක් රාජ්‍ය පරිපාලන හා කළමනාකරණ අමාත්‍යවරයා මුණගැසේ.....

අනෙක් සේවාවන් සමග සසඳන විට තාක්ෂණික සේවාවන් සඳහා ගෙවන වැටුප ප්‍රමානවත් නෑ, නව වැටුප් ව්‍යුහයක් සැකසීමේදී විෂමතා ඉවත් කිරීමට පියවර ගන්නවා....

දේශපාලන පලිගැනීම් වලට ලක්වූවන්ට අමාත්‍ය මණ්ඩල අනුමැතියට අනුව කටයුතු කරන්න

ලොව දියුණුවූ හැම රටක්ම දියුණු වුණේ යහපත් නායකයෙකු රට පාළනය කරන විටයි.....

වර්තමානයේ රටේ ක්‍රියාත්මක සංහිඳියාව නිසා අපේ රටට ජාත්‍යන්තරයේ පැසසුම් ලැබෙනවා.

රටට අහිමි වූ ජාත්‍යන්තර පිළිගැනීමත් ජනතාවට අහිමි වූ ප්‍රජාතන්ත්‍රවාදයත් යලි දිනාදීමට පසුගිය වසර තුල අපේ රජයට හැකි වුනා

ජගත් සම්මානයෙන් පිදුම් ලද ප්‍රවීන ලේඛක චූලානන්ද සමරණායක මහතාට රාජ්‍ය සේවයේ මහගෙදරින් හරසර.

ජාතික ක්‍රීඩා හා ශරීර සුවතා සතියට සමගාමීව රාජ්‍ය සේවකයින් අතර ශරීර සුවතා වැඩසටහන් ප්‍රචලිත කිරීමේ වැඩසටහන

රාජ්‍ය කළමනාකරණ සහකාර සේවයේ III ශ්‍රේණියට පත් කරන ලද පත්වීම්ලාභීන්ගේ සේවාරම්භක පුහුණුව 2015-09-15 දින සිට.. වැඩි විස්තර සඳහා විශේෂ නිවේදන වෙත පිවිසෙන්න..

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் அரசாங்க நிர்வாகம் ஓய்வூதியம் மற்றும் வீடமைப்பு

ஓய்வூதிய மற்றும் வீடமைப்புப் பிரிவு

ஓய்வூதியம் மற்றும் வீடமைப்புப் பிரிவு ஓய்வூதியத்துடன் தொடர்புடைய கொள்கை விடயங்களைக் கையாள்கின்றது. அத்துடன், பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டங்களின் இணைப்புப் பணிகளையும் மேற்கொள்வதோடு, அமைச்சுக்குச் சொந்தமான ஒவ்வொரு வகையான தங்கு விடுதிகளையும் முகாமைப்படுத்துகிறது.

நிறுவன வரைபடம்

 

நோக்கு

திருப்திகரமான ஓய்வூதியம் பெறும் சமூகம்

செயல்

ஓய்வூதியம் பெறுகின்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவைப்படுமிடத்தில் ஓய்வூதிய விடயத்தோடு தொடர்புடைய புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துதல், தற்போதுள்ள கொள்கைகளை மீளத் திருத்துதல் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் திருத்தியமைப்பதை உறுதி செய்தல்.

நோக்கம்

 • ஓய்வூதியம் பெறுகின்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஓய்வூதிய முரண்பாடுகளைத் திருத்துதல்.
 • தேவைப்படும்போது, ஓய்வூதியத் திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு வசதியேற்படுத்துதல்.
 • ஓய்வூதியக் கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துவதற்குத் தேவைப்படும் பட்சத்தில் கொள்கைகளை மீள்திருத்தம் செய்து காலத்திருத்தம் செய்தல்.

பிரதான நடவடிக்கைகள்

 • ஓய்வூதிய அறிக்கையுடனும் ஓய்வூதியத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய சட்டங்களுடனும் தொடர்புடைய நியதிச்சட்டச் செயற்பாடுகளை அமுலாக்குதல்.
 • ஓய்வூதியத் திணைக்களத்தின் நிர்வாகச் செயற்பாடுகளையும் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் இணைத்தல்.
 • ஓய்வூதியம் பெறுகின்றவர்களும் அவர்களுடைய தொழிற்சங்கங்களும் முன்வைக்கின்ற முறைப்பாடுகளையும் துயரச் செய்திகளையும் புலனாய்வு செய்தல்.
 • வெளிநாட்டில் இருக்கின்ற, ஓய்வூதியம் பெறுகின்றவர்களின் ஓய்வூதிய நிலுவைகள், ஓய்வூதியத்தை மாற்றுதல், கோரப்படாத ஓய்வூதியம் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் ஆகியவற்றில் ஈடுபடுதல்.
 • ஓய்வூதிய அறிக்கையின் 2:12, 2:15 ஆகிய பிரிவுகளின் கீழ் ஓய்வுபெறச் செய்த அரசாங்க அலுவலர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக அனுமதி பெறும் நோக்கில் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அவதானிப்புகளையும் கிடைக்கக்கூடியதாகச் செய்தல்.
 • ஓய்வூதியச் செயலாளரின் அறிக்கையின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்ட ஏற்பாடுகளை அமுலாக்குதல்.
 • ஓய்வூதிய அறிக்கைகளையும் ஓய்வூதியத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய சட்டங்களையும் திருத்துதல்.

சம்பந்தப்பட்ட ஓய்வூதியச் சட்டங்களும் சுற்றுநிருபங்களும்

 1. 28-11-1983 திகதியிட்ட (பொது நிருவாக சுற்றுநிருபம் 231) 1983ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியச் சட்டத்தை அமுலாக்கல்.
 2. 1985-05-21ஆம் திகதியிட்ட (பொது நிருவாக சுற்றுநிருபம் 291) 1985ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம் - பெண் உத்தியோகத்தர்களின் விருப்புக்குரியது.
 3. 2001ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம். (பொ.நி.சுற்றுநிருபம் இல.13/2001)
 4. 2001ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம். (பொ.நி.சுற்றுநிருபம் இல.13/2001-(II)) 2004-02-10ஆம் திகதியிடப்பட்டது.
 5. 2001ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம். (பொ.நி.சுற்றுநிருபம் இல 13/2001-(III) 2005-07-29ஆம் திகதியிடப்பட்டது.
 6. 2001ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம். (பொ.நி.சுற்றுநிருபம் இல. 13/2001-(IV) 2006-06-08ஆம் திகதியிடப்பட்டது
 7. 2001ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம். (பொ.நி.சுற்றுநிருபம் இல. 13/2001-(V) 2007-03-26ஆம் திகதியிடப்பட்டது
 8. 2001ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம். (பொ.நி.சுற்றுநிருபம் இல. 13/2001-(VI) 2009-01-30ஆம் திகதியிடப்பட்டது
 9. 2001ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க  விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்டம். (பொ.நி.சுற்றுநிருபம் இல.13/2001-(VII) 2010-02-10ஆம் திகதியிடப்பட்டது
 10. 2010ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் திருத்தச் சட்டம் 2010-08-17ஆம் திகதியிடப்பட்டது.
 11. 2010ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியம் (திருத்தச்) சட்டம் 2010-08-17ஆம் திகதியிடப்பட்டது.
 12. ஓய்வூதிய விருது வழங்கலைத் துரிதப்படுத்தல் (பொது நிருவாக சுற்றுநிருபம் 29/90) 1990-06-15 ஆம் திகதியிடப்பட்டது.

நோக்கு

வீடற்ற அரச ஊழியர்களுக்கு வீடுகள்.

செயல்

மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரச ஊழியர்களுக்குமான வீடமைப்பு வசதிகளை நியாயமாக வழங்குவதுடன், சிறந்த பராமரிப்பையும் தகுந்த பயன்பாட்டையும் உறுதிப்படுத்துவதாகும்.

நோக்கம்

 • அமைச்சின்கீழ் வருகின்ற வீடமைப்பு அலகை முகாமைப்படுத்துவதற்குக் கொள்கைகளையும் ஒழுங்கு விதிகளையும் தயாரித்தல்.
 • வீடமைப்பு அலகுகளையும் அவற்றின் சூழலையும் சிறந்த முறையில் பராமரித்தல்.
 • வீடமைப்புத் தேவைகளுக்காக அரச வளங்களையும் தனியார் வளங்களையும் பயன்படுத்துதல்.
 • அத்துமீறிய குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
 • அரசாங்க ஊழியர்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்குவதற்கு வீடமைப்புக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்குப் பயன்படக்கூடிய செயல்திறனை அடையாளம் காணுதல்.

பிரதான நடவடிக்கைகள்

 • முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை ஒதுக்குதல்.
 • இன்று வரையிலான வாடகையைச் சேகரித்தல் மற்றும் ஏனைய அரச  நிறுவனங்களால் சேகரிக்கப்படுகின்ற வாடகையை ஒருங்கிணைத்தல்.
 • அரசாங்க விடுதிகளைப் பழுதுபார்ப்பதையும் வருடாந்த பராமரிப்புப் பணிகளையும் மேற்பார்வை செய்தல் மற்றும் செயலாற்றுதல்.
 • அத்துமீறிய நடவடிக்கைகள் அல்லது சட்ட நடவடிக்கைகளைப் பரிசோதித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
 • அரசாங்க வீடுகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு 1969ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க உடைமைகளை மீளப்பெறும் சட்டத்தின்கீழ் சட்ட நடவடிக்கை எடுத்தல்.
 • காலத்துக்குக் காலம் வீடமைப்புத் தேவைகளை வழங்குமுகமாக வீடமைப்புக் கருத்திட்டங்களை அமுலாக்குதல்.

அரசுக்குச் சொந்தமான அரசாங்க விடுதிகளின் அமைவிடங்கள்


 • விஜேராம மாவத்தை
 • பௌத்தலோக்க மாவத்தை
 • கெப்பெற்றிபொல மாவத்தை
 • மெக்கென்சி வீதி
 • பெஜட் வீதி ஜயவர்தனகம
 • கிறகரி மாவத்தை
 • மலலசேகர மாவத்தை
 • ஸ்கெல்டன் வீதி
 • ஸ்டென்மோர் கிறசன்ட்
 • கொட்டா வீதி

அரசாங்க விடுதிகள் என்றால் என்ன?

'அரசாங்க விடுதிகள்' என்ற சொல்லில் அரசாங்கம் விற்பனை செய்கின்ற மற்றும் குடியிருப்பு நோக்கத்துக்காக ஒதுக்கப்படுகின்ற எந்தவிதமான தங்குமிடமும் அடங்குகின்றது. அனைத்து அரசாங்க விடுதிகளும் 'கால ஒதுக்கீடு செய்யப்பட்ட விடுதிகள்' அல்லது 'பொதுவான சேவை விடுதிகள்' என்ற வகைப்படுத்தலின்கீழ் வருகின்றன.

 • கால ஒதுக்கீடு செய்யப்பட்ட விடுதிகள் - 'அமைச்சுக்குள்' அல்லது ஒரு திணைக்களத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு அல்லது தரத்துக்கு ஒதுக்கிக் கொடுக்கப்படுகின்ற உறைவிடமாகும்.
 • பொதுவான சேவை விடுதிகள் - இவை கால ஒதுக்கீடு செய்யப்படாத விடுதிகளாகும்.

அரசாங்க விடுதிகளுக்கான ஒழுங்குவிதிகள்

அரசாங்க இல்லங்கள் சம்பந்தமான காலவரையறைகளும் நிபந்தனைகளும் தாபனக்கோப்பின்  XIX அத்தியாயத்திலும்  19/2001, 19/2001(i), 22/2006, 27/2010 இலக்கமுடைய பொதுநிருவாகச் சுற்றுநிருபத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க வீடுகளை ஒதுக்குதல்.

 1. அரசாங்க வீடுகளை ஒதுக்குகின்றபோது காத்திருப்போர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் மாத்திரம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
 2. தாபனக் கோப்பின் XIX ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்குக் காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் பின்வரும் தேவைகளையும் திருத்திகரமாகப் பூர்த்திசெய்தல் வேண்டும்.
  • அரச சேவையில் நிரந்தரப் பதவியை வகிக்க வேண்டும்.
  • அவருடைய அலுவலகம் அமைந்துள்ள இடத்திலிருந்து 20கி.மீ. தூரத்துக்குள் வீடொன்றுக்கு உரிமையாளராக இருத்தலாகாது அல்லது விண்ணப்பதாரியின் பெயரில், அவருடைய துணைவரின் அல்லது அவர் மீது தங்கியுள்ள பிள்ளையின் பெயரில் ஒரு வீட்டைக் கொள்வனவு செய்ய/நிர்மாணிக்க அல்லது சொத்தொன்றை வாங்க அரசாங்கத்திடமிருந்து அல்லது ஏனைய அங்கீகரிக்கப்பட்ட வங்கியிடமிருந்து கடன் பெற்றிருத்தலாகாது.
  • விண்ணப்பதாரி அரசாங்க பங்களாவைக் கோருகின்ற குறித்த அமைச்சின் செயலாளரின் பரிந்துரையைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓய்வுபெறும் வயதெல்லையை (55 வருடங்கள்) அடைந்திருத்தலாகாது.
 3. அரசாங்க வீடொன்று அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆகக்கூடியது 05 வருடங்களுக்கு ஒதுக்கிக்கொடுக்கப்படும்.

அரசாங்க வீடுகளின் வாடகை

 • குடியிருப்பாளரின் மாதச் சம்பளத்தில் 12 1/2 %.

அரசாங்க வீடுகளின் பராமரிப்புப் பணிகள்:

 • அரசாங்க வீடுகளின் பராமரிப்புப் பணிகள் கட்டிடத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும். அமைச்சுக்களுக்கு/திணைக்களங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற வீடுகளின் பராமரிப்புப் பணிகள் அமைச்சின்/திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும்.
 • கௌரவ அமைச்சருக்கு/பிரதி அமைச்சருக்கு ஒதுக்கப்படும் வீடுகள் குறித்த அமைச்சினால் பராமரிக்கப்படும்.

தண்டப்பணம்

 • சட்ட அதிகாரிகளினால் அறிவிக்கப்படும்போது அலுவலர் ஒருவர் விடுதியைக் காலி செய்யத் தவறினால் அவர், 1971ஆம் ஆண்டின் 3ஆம் இலக்கச் சட்டம், 1974ஆம் ஆண்டின் 40ஆம் இலக்கச் சட்டம், 1981ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டம், 1985ஆம் ஆண்டின் 45ஆம் இலக்கச் சட்டம் ஆகிய சட்டங்களினால் திருத்தப்பட்ட 1969ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க (உடைமைகளை மீளப்பெறும் சட்டம்) அரசாங்க விடுதிகள் சட்டத்தின் கீழும் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்படுகின்ற திருத்தங்களின் கீழும் அகற்றப்படுதல் வேண்டும.
 • குடியிருப்பாளர் குறிக்கப்பட்ட காலத்துக்கு மேலதிகமாகத் தங்கியிருக்கும்பட்சத்தில் தண்ட வாடகை அறவிடப்படும். தண்டவாடகை தற்போதைய திறந்த சந்தையிலுள்ள விடுதி வாடகைக்கு சமமானதாக பிரதான மதிப்பீட்டாளரால் மதிப்பிடப்பட்ட தொகையுடன் குறித்த அலுவலரின் சம்பளத்தில் எட்டு வீதத்தையும்  (8%) சேர்த்து அறவிடப்படும்.

புதிய வீடமைப்புக்கருத்திட்டங்கள் "நில செவன"

 • உடன்படிக்கையின் பிரகாரம் மாவட்ட ரீதியில் 25,000 வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 • அவற்றில்  70% மான வீடுகள் விற்பனை செய்யப்படும் மற்றும் 30% மான வீடுகள் வாடகை அடிப்படையில் ஒதுக்கப்படும்

 • நான்குமாடி வீடமைப்புத் தொகுதி – 192 அலகுகள்.
 • 12 மாடி வீடமைப்புத் தொகுதி – 320 அலகுகள்.
 • முன்னேற்றம் 80%
 • பயன்படுத்தப்பட்ட காணிகள் ஏக்கர்.

வீடுகளின் கிரயம்

வீடுகளின் வகை விலை (அலகொன்றுக்கு)
அரச அலுவலர்களுக்கு அரச அலுவலர் அல்லாதோருக்கு
குறைந்த கிரயம் ரூ. 1,980,000.00 ரூ. 2,102,787.00
நடுத்தர கிரயம் ரூ. 3,550,000.00 ரூ. 3,749,022.00

 • நான்குமாடி வீடமைப்புத் தொகுதி – 192 அலகுகள்.
 • 12 மாடி வீடமைப்புத் தொகுதி – 384 அலகுகள்.
 • முன்னேற்றம் -  95%
 • பயன்படுத்தப்பட்ட காணிகள் ஏக்கர்- 13.5

வீடுகளின் கிரயம்

வீடுகளின் வகை விலை (அலகொன்றுக்கு)
அரச அலுவலர்களுக்கு அரச அலுவலர் அல்லாதோருக்கு
நடுத்தர கிரயம் ரூ. 3,550,000.00 ரூ. 3,675,079.00
உயர் கிரயம் ரூ. 4,300,000.00 ரூ. 4,451,828.00

 • நான்குமாடி வீடமைப்புத் தொகுதி – 288 அலகுகள்.
 • 12 மாடி வீடமைப்புத் தொகுதி – 576 அலகுகள்.
 • நிர்மாணப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
 • உத்தேச காணிப் பயன்பாடு ஏக்கர் 10.71

 • இப்பொழுதுள்ள பழைய வீடுகளை இடித்துவிட்டுப் புதிய வீடமைப்புத் தொகுதியொன்றை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
 • முன்மொழியப்பட்ட வீடுகள் 132 (20 மாடிகளைக் கொண்டவை) நிர்மாணப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட சுற்றுநிருபங்கள்

 1. 2001-07-26ஆம் திகதியிட்ட கொழும்பு மாவட்டத்தில் அரசாங்க பங்களாக்களுக்கான கொள்கை (19/2001)
 2. 2001-11-15ஆம் திகதியிட்ட கொழும்பு மாவட்டத்தில் அரசாங்க பங்களாக்களுக்கான கொள்கை (19/2001) (1).
 3. 2007-04-26ஆம் திகதியிட்ட கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க விடுதிகளுக்கான வாடகைகளை அறவிடுதல். (22/2006).
 4. 2007-05-09ஆம் திகதியிட்ட கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க விடுதிகளுக்கான வாடகைகளை அறவிடுதல். (10/2007)
 5. 2009-02-26ஆம் திகதியிட்ட அரசாங்கக் குடியிருப்பு வழங்கப்படாத கௌரவ அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் குடியிருப்பு வசதிகளை வழங்குவதற்கான ஒதுக்கீடு. (10/2007(i))
 6. 2010-12-27ஆம் திகதியிடப்பட்ட கௌரவ அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க விடுதிகளின் பராமரிப்புப் பணிகளை ஒப்படைத்தல். (27/2010)
அமைச்சின்கீழ் வருகின்ற வீடமைப்பு அலகை முகாமைப்படுத்துவதற்குக் கொள்கைகளையும் ஒழுங்கு விதிகளையும் தயாரித்தல்.
வீடமைப்பு அலகுகளையும் அவற்றின் சூழலையும் சிறந்த முறையில் பராமரித்தல்.
வீடமைப்புத் தேவைகளுக்காக அரச வளங்களையும் தனியார் வளங்களையும் பயன்படுத்துதல்.
அத்துமீறிய குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
அரசாங்க ஊழியர்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்குவதற்கு வீடமைப்புக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்குப் பயன்படக்கூடிய செயல்திறனை அடையாளம் காணுதல்.

இற்றைப்படுத்தப்பட்டது 22-02-2017.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter