தொலைநோக்கு
"உத்தியோகபூர்வ விடுதி வசதிகனை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் உற்பத்தித்திறன் வாய்ந்த அரச சேவையொன்றினை ஏற்படுத்துதல்"
பணிக்கூற்று
"அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் சகல அரசாங்க உத்தியோகபூர்வ விடுதிகளை, சேவைத் தேவைப்பாட்டிற்கு ஏற்ப அரச அலுவலர்களுக்குப் பெற்றுக்கொடுத்தல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்படுத்தலினைப் போன்றே அமைச்சின் கீழ்க் காணப்படும் நில பியச, நில செவண வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பான சகல பணிகளையும் நிறைவேற்றுவதன் மூலம் உற்பத்தித்திறன் மிக்க அரச சேவைக்கு அவசியப்படும் பின்னணியினைத் தோற்றுவித்தல்"
நோக்கம்
- அரச அலுவலர்களுக்கு உத்தியோகபூர்வ விடுதிகளை ஒதுக்குதல், அவ் விடுதிகளின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய சகல முகாமைத்துவ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் நிறைவேற்றல் மற்றும் உரிய தரப்புக்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளல்.
- அரச அலுவலர்களின் சேவைத் தேவைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தற்காலிக வதிவிற்காக வழங்கப்பட்ட அரசிற்கு உரித்தான எந்தவொரு விடுதியும் “நில நிவாச” இன் கீழ் கொள்ளப்படுவதோடு அரசின் பொதுச் சேவை விடுதிகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
இப்பிரிவின் கீழ் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு என்ற வகையில் இரு அலகுகளாக செயற்படுத்தப்படுவதோடு அதன் பணிகள் பின்வருமாறு அமையப்பெற்றுள்ளது.
அபிவிருத்திப் பிரிவின் பணிகள் | வீடமைப்புப் பிரிவின் பணிகள் |
அரச அலுவலர்களுக்காக மாவட்ட மட்டத்தில் உத்தியோகபூர்வ விடுதி வசதிகளை வழங்குவதற்காக “நில பியச” உட்பட ஏனைய செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துதல். | முன்னுரிமை அடிப்படையில் விடுதிகளை வழங்குதல். |
அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையினைத் தயாரித்தல். | குறித்த திகதிக்கு விடுதி வாடகையினைச் சேகரித்தல் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் மூலம் விடுதி வாடகையினைச் சேகரிக்கும் நடவடிக்கையினை ஒருங்கிணைத்தல். |
சனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், கருத்திட்ட முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நிதி அமைச்சுக்கள் தொடர்பாக செயற்திட்டங்களின் முன்னேற்றத்தினைக் காட்டும் அறிக்கையினைத் தயாரித்தல். | அரசாங்க விடுதிகளின் வருடாந்த பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளல் மற்றும் அவற்றினை மேற்பார்வை செய்தல். |
தகவலறியும் சட்டத்தின் கீழ் அரையாண்டு அறிக்கையினைத் தயாரித்தல். | அரச விடுதிகளைச் சட்டவிரோதமாக பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு 1969 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க உடைமைகள் மீளப்பெறும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்தல். |
அரச அலுவலர்களின் தற்கால விடுதிக்கான அவசியத்தினை இனங்கண்டு அதற்கிணங்க கருத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல். | அரச மற்றும் தனியார்ப் பிரிவின் ஒத்துழைப்புடன் “நில செவண” செயற்திட்டத்தினைச் செயற்படுத்துதல். |
“நில பியச” அரச அலுவலர்களின் உத்தியோகபூர்வ விடுதி செயற்திட்டம்
அரச அலுவலர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஒன்று என்ற விகிதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இவ் விடுதி செயற்திட்டம் ஐந்து வருடங்களினுள் நிறைவு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதோடு ஒரு வருடத்தினுள் ஐந்து மாவட்டங்களில் கட்டிட நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக பின்வரும் மாவட்டங்களில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசின் உத்தியோகபூர்வ விடுதிகள்
அரச அலுவலரொருவரின் சேவைத்தேவைப்பாட்டின் அடிப்படையில் தற்காலிக வதிவிற்காக வழங்கப்படும் அரசிற்கு உரித்தான எந்தவொரு விடுதியும் “ அரசின் உத்தியோகபூர்வ விடுதி” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றது. அவ்வாறான சகல விடுதிகளும் பின்வருமாறு இரு வகுதியினுள் உள்ளடங்குகின்றது.
- அட்டவணைப்படுத்தப்பட்ட விடுதிகள் – அமைச்சொன்றின் அல்லது திணைக்களமொன்றின் குறித்த பதவியொன்றுக்கு அல்லது தரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிகள்.
- பொது விடுதிகள் – அட்டவணைப்படுத்தப்பட்ட விடுதி உரித்துடையதாகும் பதவிகளுக்கு அல்லது தரங்களுக்கு உட்படாத சகல அலுவலர்களினதும் விடுதித் தேவைக்காக காணப்படும் விடுதிகள்.
அதற்கிணங்க அரசின் பொதுச் சேவை விடுதிகளுக்கு உரித்தான நடவடிக்கைகளை மேற்கொள்வது வீடமைப்புப் பிரிவின் பணியாகும்.
"நில செவண" அரச மற்றும் தனியார் கூட்டாண்மைத் திட்டம் (Public Private Partnership Project)
Apllications for booking Public Administration Bungalows & Rests
- Nuwaraeliya, Diyathalawa & Bandarawela
- Jaffna, Katharagama, Mahiyanganaya, Mihintalaya, Mullaithivu and Polonnaruwa (for Public Officials)
தொடர்பு விபரங்கள்
![]() சிரேஷ்ட உதவிச் செயலாளர்
|
![]() உதவிப் பணிப்பாளர் (வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி)
|
||||||||||||||||||
![]() பிரதிப் செயலாளர் (Planning)
|
|||||||||||||||||||
பொறியியல் பிரிவு
![]() தலைமை பொறியியளாலர்
|
![]() சிவில் பொறியியளாலர்
|
||||||||||||||||||