Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News headline
News

The Commonwealth Secretary- General meets the Minister of Public Administration, Management and Law & Order……

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் திருமதி பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் அவர்கள், கடந்த (03 ஆந் திகதி) முற்பகல் அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களை அவரது அமைச்சில் சந்திந்தார். இச் சந்திப்பின் போது, பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்தல், கண்டறியப்படாத சொத்துக்கள் தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் போன்று காலநிலை மாற்றங்கள் சம்பந்தமாக ஒரு அமைப்பாக இணைந்து செயலாற்ற வேண்டிய விதம் ஆகிய பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அது போன்றே தற்போது இந்நாடு சனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆளுகை என்பனவற்றை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் சம்பந்தமாக மத்துமபண்டார அமைச்சர் அவர்கள் பொதுச் செயலாளருக்கு விளக்கிக் கூறியதுடன், இலங்கை இத்துறைகளில் அடைந்துள்ள சாதனைகளின் மேம்பாடு குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக திருமதி ஸ்கொன்லன்ட் அவர்கள் தெரிவித்தார். இச் சந்தர்ப்பத்தில் அமைச்சின் செயலாளர் திரு. பத்மசிறி ஜயமான்ன அவர்களும் கலந்துகொண்டார்.

Last Updated on Wednesday, 08 August 2018 04:01
 

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....

மேலும் தாமதமின்றி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரிடமிருந்து செயலாளருக்கு ஆலோசனை....

கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அனைவருக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் சலுவை வழங்கும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக எழுத்தாவண ரீதியான ஆலோசனை எதிர்வரும் தினங்களினுள் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். நிருவாக அமைச்சினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வினவுவதற்காக அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் அலுவலர்களை (12 ஆந் திகதி) அமைச்சர் சந்தித்த போது இக் கருத்தினைத் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிடுகையில் இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கள் எமது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அரசியல் பழிவாங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கப்படுதல் வேண்டும் எனக் கூறினார். இங்கு அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுக்கு உரிய அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பொலிஸ் திணைக்களம் தொடர்பான 562 முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதனை துரிதப்படுத்துமாறும் இத் தீர்மானத்தினை காலம் தாழ்த்தாது இருக்குமாறும் உரிய அலுவலர்களுக்கு அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு இணையாக ஏனைய அமைச்சுக்களிலும் அரசியல் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இசைந்து குறித்த தீர்மானத்தினை உடனடியாக செயற்பாட்டிற்கு கொண்டுவருமாறு ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உரித்தான எழுத்து மூல ஆலோசனை எதிர்வரும் தினங்களினுள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 08 August 2018 04:03
 

அரச ஊழியரின் திருப்பதிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய சகல பணிளையும் எவ்வித தாமதங்களுமின்றி மேற்கொள்வதற்கு எமது அரசு நடவடிக்கை எடுக்கின்றது .................

 

““நில செவன” உத்தேச வீடமைப்புத் திட்டத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் கூறியுள்ளார்கள்.

“ இந் நாட்டு அரச ஊழியர்கள் நிமித்தம் அதிக பணிகளை நிறைவேற்றுகின்ற ஓர் அரசாக சனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் இவ் அரசாங்கம் வரலாற்றில் இடம்பதிக்கின்றது. இப் பணிகளுக்கிடையே அரச ஊழியர்களின் வீடின்றிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் வகையில் நாம் பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந் நடவடிக்கைகளின் மற்றோர் அங்கமாகத் தான் இன்று கண்டி மற்றும் குண்டசாலையில் நிர்மாணிக்கப்படும் நிலசெவன உத்தேச வீடமைப்புத் திட்டத்தினை நாம் ஆரம்பிக்கின்றோம். இந் நிகழ்ச்சித்திட்டத்தினை நாம் தனியார்ப் பிரிவுடன் இணைந்து மேற்கொள்ளும் ஓர் நிகழ்ச்சித்திட்டமாகும். இதன் முதற் உத்தேச வீடமைப்புத் திட்டத்தினை காலியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாம் இன்று தொடங்கும் நிலசெவன உத்தேச வீடமைப்புத் திட்டமானது தற்போதைக்கு பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்படவிருந்தும் அதனை மேற்கொள்ள முடியாமற் போன நிகழ்ச்சித்திட்டமாகும். எவ்வாறாயினும் நிலவிய தடைகள் அனைத்தையும் களைந்து நாம் தற்போது தயாராகுவது இப்பூமியில் வீடமைப்பு அலகுகள் 546 இனை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இவையனைத்தும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகையின் அடிப்படையின் கீழ் வழங்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந் நிகழ்ச்சித்திட்டத்தின் போது காணியின் பெறுமதியினை முழுமையாக அரசு ஏற்று வீட்டின் பெறுமதியினை மாத்திரம் அறவிடுகின்றது. நாம் ஒர் அரசாக திருப்திகரமான அரச ஊழியருக்கு நிறைவேற்ற வேண்டிய சகல பணிகளையும் தாமதங்கள் இன்றி நிறைவேற்றுகின்றோம்”. என்று அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் குறிப்பிடுவது அரச ஊழியர்களுக்காக கண்டி மற்றும் குண்டசாலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் “நில செவன” உத்தேச வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதான விருந்தினராக கலந்துகொண்ட போதே இவ்வாறு கூறினார்.

இச் நிகழ்விற்கு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம் பற்றிய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, மத்திய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சானக அய்லப்பெரும, அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் செயலாளர் பத்மசிரி ஜயமான்ன ஆகியோர் உட்பட அதிகமானோர் கலந்து சிறப்பித்தார்கள்

Last Updated on Wednesday, 08 August 2018 04:02
 

கொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...

 

கொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராயும் பொருட்டு விசேட கலந்துரையாடலொன்று அரசாங்க நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களின் தலைமையில் இன்று (21 ஆந் திகதி) அவரது அமைச்சில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாரச்சி அவர்கள், மொரட்டுவ பல்கலைக்கழக்கத்தின் விரிவுரைரயாளர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட மோட்டார் வாகன பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலின் போது, கொழும்பு மோட்டார் வாகன கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் 350 மோட்டார் வாகன பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையாக உள்ளமை பற்றி அவதானம் செலுத்திய அமைச்சர் அவர்கள், உடனடியாக இப் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதற்கு தாம் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதாக குறிப்பிட்டார். ஒரு நாளைக்கு கொழும்பு மாநகருக்குள் சுமார் 2000 ரிப்பர் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதுடன், பெருந்தொகையான கன்டேனர்களும் ஒருகொடவத்தை பிரதேசத்தை மையமாக கொண்டு செயற்படுத்தப்படுவதன் காரணமாக விசேடமாக பேஸ்லைன் வீதி, இங்குரு கடே சந்தி, நீர்கொழும்பு வீதி போன்றே கண்டி வீதி, கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களிலும் நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட, சிரேஷ்ட மோட்டார் வாகன பொலிஸ் உத்தியோகத்தர்கள் அது சம்பந்தமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்பையும் கோரினர். அதற்கான முன்மொழிவுகள் கோரப்பட்ட போது, நீர்கொழும்பு வீதிக்கான மாற்றீடாக எலகந்த ஊடாக செல்லும் வத்தளை போபிட்டிய வீதியும், கண்டி வீதியின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மாகொலை, பியகம வீதியும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினர். இம் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அவ் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தான் எடுப்பதாக கூறினார். அவ்வாறே ஒழுக்க நெறிமுறை வழுவாத சாரதிகளை உருவாக்கும் பொருட்டு முன்மொழியப்பட்ட புள்ளிகளை குறைக்கும் செயன்முறை இதுவரை அமுல்படுத்தப்படாமை குறித்து அமைச்சர் அவர்கள் பொலிஸாரிடம் வினவிய போது, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுக்கிடையே காணப்படுகின்ற கணனிமய குறைபாடுகள் பிரதானமாக தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரியவந்தது. இக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து குறித்த செயன்முறையை வலுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் குறித்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். எனினும் கடந்த ஆண்டுகளில் மோட்டார் வாகன குற்றங்கள் தொடர்பாக கொழும்பு நகரில் மாத்திரம் அறவிடப்பட்ட தண்டப்பணம் ரூபா 278 மில்லியன் ஆக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், தண்டப் பணம் சேகரிப்பதல்ல, ஒழுக்க நெறிமுறை வழுவாத சாரதிகளையும், முறைசார் போக்குவரத்து செயன்முறையொன்றையும் உருவாக்க வேண்டியதே அவசிமானதென குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், மத்தியகால மற்றும் நீண்டகால முன்மொழிவுகளை கூடிய சீக்கிரம் வழங்கும்படி குறித்த அலுவலர்களிடம் தெரிவித்தார். அது போன்று, இந் நடவடிக்கைகளின் போது, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதுடன், போக்குவரத்து அமைச்சர், மாநகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருடன் உடனடியாக தான் இதுபற்றி கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

Last Updated on Wednesday, 08 August 2018 04:02
 

“வெல்லஸ்ஸ அபிமன்” (அபிமானமிகு வெல்லஸ்ஸ) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டு மீளாய்வு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறந்து வைக்கப்படுகின்றது....

 

1818 களில் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட வெல்லஸ்ஸ விடுதலைப் போராட்டத்தின் 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட “வெல்லஸ்ஸ அபிமன் 200” (அபிமானமிகு வெல்லஸ்ஸ) நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டு மீளாய்வு கடந்த தினம் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில், அரசாங்க நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 05 ஆந் திகதி கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும் இத் தேசிய கண்காட்சி செப்தெம்பர் 08 ஆந் திகதி அதிமேதகு சனாதிபதி அவர்களின் தலைமையில் நிறவுபெறவுள்ளது. வெல்லஸ்ஸ வீரர்கள் தொடர்பாக மக்களுக்கு மீண்டும் நினைவூட்டும் பொருட்டு கௌரவ அமைச்சரின் எண்ணக்கருவினை அடிப்படையாக கொண்டு இத் தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இது தொடர்பாக அனைத்து அமைச்சுக்களினதும், அரசாங்க நிறுவனங்களினதும் பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற மேம்பாட்டு மீளாய்வுக் கூட்டத்திற்கு நிகராக வெல்லஸ்ஸ 200 இணையத்தளமான www.Uwa wellassa.lk இணையத்தளமும் அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டது.

இச் சந்தர்ப்பத்திற்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, கல்வி அமைச்சின் செயலாளரான சுனில் ஹெட்டியாராச்சி, மின்வலு அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேந்திரன் படகொட ஆகியோருடன் அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 08 August 2018 04:03
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 2

இற்றைப்படுத்தப்பட்டது 14-06-2019.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter