எமது நாட்டு இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் திரு. விநோத் கே. ஜேகப் அவர்களுக்கும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கெளரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த நாட்களில் அமைச்சில் இடம்பெற்றது. அதன்போது எமது நாட்டின் அரச சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கு இந்தியாவினால் வழங்க முடியுமான ஒத்துழைப்பு தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் நீண்ட நேரக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. ஜே.ஜே. ரத்னசிரி அவர்கள், அமைச்சின் ஆலோசகர் மஹிந்த மடிகஹேவா அவர்கள் உள்ளடங்களாக ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.