2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கட்டிடக்கலை சேவைக்கு புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த மேலும் பத்து விண்ணப்பதாரர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள இந்த உத்தியோகத்தர்கள் மாகாண அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு.ஜே.ஜே. ரத்னசிறி மற்றும் விஞ்ஞான சேவையின் பணிப்பாளர் ஜீ.ஐ.டீ.சீ. விஜேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.