இலங்கைக்கான கொரியத் தூதுவர் திரு. வூன்ஜின் ஜியோங் அவர்களுக்கும் அரசாங்க சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. ஜன பண்டாக தென்னகோன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. கொரிய அரசாங்கத்தின் கடன் மற்றும் உதவிகளின் கீழ் உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சிகளின் முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் எதிர்காலத்தில் கொரிய அரசு இத்துறையின் முன்னேற்றத்திற்காக வழங்கவுள்ள உதவிகள் தொடர்பிலும் கொரியத் தூதுவர் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.