அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை : 20/2022 ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கைக்கு (பொது நிருவாக விடயப் பொறுப்பான அமைச்சின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் அரசாங்க பொதுச் சேவை உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதற்குத் தகுதியான பதவிநிலை உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்கள்) இணங்க உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக இணைய வழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அந்த விண்ணப்பங்களின் வன் பிரதியை பொது நிருவாக விடயப் பொறுப்பு அமைச்சின் வீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவில் ஒப்படைத்த அனைத்து உத்தியோகத்தர்களினதும் "தற்காலிக புள்ளிப் பட்டியல் - 2023" இந்த அமைச்சின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
02. அதன் பின்னர், விண்ணப்பதாரர்கள் முன்வைத்த மேன்முறையீடுகளையும் ஏனைய கடித ஆவணங்களையும் பரீட்சித்ததன் பின்னர் அதிக புள்ளிகளைப் பெறும் விண்ணப்பதாரர்களில், காலியாகவுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கங்களின் எண்ணிக்கையைப் போன்று இரண்டு மடங்கு விண்ணப்பதாரர்கள் 2022.12.20, 2022.12.21 ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டார்கள்.
03. பின்னர், "சமிட் இல்லங்களைப் பெறுவதற்கு தகுதி பெறும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் - 2023” பொது நிர்வாக விடயப் பொறுப்பு அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், இந்த அமைச்சின் இணையத்தளத்தில் வீடமைப்பு அபிவிருத்திப் பிரிவுக்கு அனுப்பி கொழும்பு 05, கெப்படிபொல மாவத்தை சமிட் இல்லங்களின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. (இணைய இணைப்பு: 2023 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்ளவுள்ள விண்ணப்பதாரிகளின்பெயர் பட்டியல் )
04. "சமிட் இல்லங்களைப் பெறுவதற்கு தகுதி பெறும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் - 2023 - முதற் கட்டத்தில் ” பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளுக்கு 2023.02.23 மற்றும் 2023.02.24 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் தமக்கு வசிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறித்த சமிட் இல்லங்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பளிக்க முடியும். அவ்வாறு உத்தியோகபூர்வ இல்லங்களை பரீட்சித்துப் பார்ததன் பின்னர் விண்ணப்பதாரிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட குறித்த சமிட் இல்லங்களில் வசிப்பதற்கு உடன்பாட்டினை தெரிவிக்காது விடின் மாத்திரம் அதுபற்றி மேற்படித் தினங்களில் (2023.02.23 மற்றும் 2023.02.24) இந்த அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி), வீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவுக்கு தங்களால் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு தமக்கு ஒதுக்கப்பட்ட குறித்த சமிட் இல்லங்களில் குடியிருப்பதற்கு உடன்பாடில்லாத விண்ணப்பதாரிகள்தவிர "சமிட் இல்லங்களைப் பெறுவதற்கு தகுதி பெறும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் - 2023” - முதலாம் கட்டத்தின்" பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிற விண்ணப்பதாரிகளுக்கு 2023.03.01 ஆந் திகதி முதல் குடியிருக்க முடியுமான வகையில் முறைப்படி உத்தியோகபூர்வ இல்லங்களை ஒதுக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.