அரச மொழிகள் வாரமாக ஒவ்வொரு வருடமும் ஜீலை 01ஆம் திகதி ஆரம்பிக்கும் வாரம் பெயர் குறிக்கப்படும். அதன்படி, இத்தடவையும் இவ் வாரத்திற்காக பல நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அவ் அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு, அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனம் ஒன்றிணைந்து மொழிகள் வாரத்துடன் இணைந்த வகையில் நாடளாவிய மட்டத்தில் பல நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.
இதன் கீழ் தொலைக்காட்சி நாடக தயாரிப்பு போட்டியொன்று செயற்படுத்தப்பட்ட அதேவேளை பி.அஜித் முதுகுமார ஜெயரத்ன மூலம் நிர்மாணிக்கப்பட்ட வளைகாப்பு நாடகமானது சிறந்த நாடகம், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசை ஆகியவற்றிற்கான விருதினை பெற்றுக் கொண்டது. பேராசிரியர் இந்திக ப்ர்னாந்டோ, பேராசிரியர் சௌமிய லியனகே மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் சாமர அமரசிங்க ஆகிய தீர்ப்புக்குழாத்தின் மூலம் இவ் நாடகங்களின் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
அரச மொழிகள் தின நிறைவு விழாவில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தலைமையில் இலங்கை அபிவிருத்தி நிறுவனத்தில் நடைபெற்றதோடு, இவ் நிகழ்விற்கு அரசாங்க அமைச்சர் அசோக பியன்த, அமைச்சரவை செயலாளர் பிரதீப் யசரத்ன, விருது பெற்ற பேராசிரியர் ஜே.பி திசாநாயக்க அவர்கள் உட்பட அதிகளவிலான பேர் இணைந்திருந்தனர். பி. அஜித் முத்துகுமாரவினால் சிறந்த தொலைக்காட்சி நாடக தயாரிப்பிற்கான பரிசு மற்றும் சான்றிதழ்களை பிரதமரின் கையால் பெற்றுக் கொண்ட தருணமே புகைப்படத்தில் காணப்படுகின்றது. அமைச்சரவை செயலாளர் பிரதீப் யசரத்ன, விருது பெற்ற பேராசியர் ஜே.பி திசாநாயக்க, அரசாங்க அமைச்சர் அசோக பியன்த ஆகியோரும் புகைப்படத்தில் காட்சியளிக்கின்றனர்.