நிர்வாகச் சேவையில் சிரேஸ்ட உத்தியோகத்தரான திரு. எஸ்.ஆலோகபண்டார அவர்கள் புதிதாக பதவியேற்ற அரசாங்கத்தில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடந்த (19ஆம் திகதி) நியமனம் பெற்றதுடன், அன்றைய தினமே அவ் அமைச்சில் தமது கடமையை ஆரம்பித்தார். இதற்கு முனனர் இவர் நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சின் செயலாளராக தமது கடமையை புரிந்துள்ளார்.
இவர் 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாகச் சேவைக்குள் இணைந்து 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்ட சிரேஸ்ட நிர்வாக அதிகாரியாவார்.