கடந்த 14 தினத்தன்று கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விசேட தைப்பொங்கல் விழாவொன்று பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. இந்து மதச் சடங்குகளுக்கு முன்னூரிமை வழங்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விழாவிற்கு அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன, அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இங்கு இந்து மதச் சடங்குகளை கலாநிதி சிவஸ்ரீ கே. வீ. கே. வைத்தீஸ்வர குருக்கள் மூலமாக நடைபெற்றதுடன் அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்விற்கு கலந்து கொண்டிருந்தார்கள்.