நேபாள அரசாங்க சேவையை பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்நாட்களில் இலங்கையின் அரசாங்க சேவை தொடர்பில் ஆய்வில் ஈடுபடுகின்றனர். நேற்றைய தினத்தில் அரசாங்க சேவையினை அதிக வினைத்திறனான சேவையொன்றாக ஆக்குவதற்காக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் மூலம் நடைபெறும் சேவைகள் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட இவ் உத்தியோகத்தர்கள் இன்று (23ஆம் நாளன்று) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு வருகை தந்தனர். இங்கு அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார அவர்களின் மூலம் நிர்வாக அமைச்சின் மூலம் வினைத்திறனான அரசாங்க சேவையொன்றை நிறைவேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உயர் மட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.