அரசாங்க சேவைக்குள் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான எச்சந்தர்ப்பத்திலும் அதற்கு உதவி புரியும் நோக்குடன் இந்நாட்டின் அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று காலை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களுடன் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கனடாவின் கியுபெக் பிராந்தியத்தில் பிரதானமாக பயன்படுத்தப்படுவது பிரெஞ்சு மொழியாக இருப்பினும் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது சேவை பெறுநர்களுக்காக ஆங்கில மொழியும் பயன்படுத்தக்கூடிய வகையில் அந்நாட்டில் சேவை வழங்கல் செயற்படுகின்றது. பல்மொழி பயன்பாட்டினைக் கொண்ட இந்நாட்டிலும், விசேடமாக அரசாங்க சேவை வழங்கலின் போது அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இங்கு இரு திறத்தவரினதும் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டது.
அங்கு, அரசாங்க சேவைகள் மற்றும் மாகாண சேவைகளை வழங்கும் போது சேவை பெறுநர்களுக்கு, தமக்கு இலகுவான மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அரசகரும மொழிக் கொள்கையினைப் பின்பற்றி அவ் செயன்முறையை மேலும் இலகுவான மற்றும் விரிவான செயன்முறையாக மாற்றுவதற்காக அமைச்சின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் குறிப்பிட்டார். அவர்கள் குறிப்பிட்டதாவது அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் விசேட மத்தியஸ்தம் நிலவுகின்றதெனவாகும். அதன்படி எதிர்காலத்தில் மொழிப் பிரச்சினையற்ற, வினைத்திறனான அரசாங்க சேவையொன்று வழங்கப்படுமெனவும் கௌரவ அமைச்சர் உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் அவர்களுக்கு தெரிவித்தார். மேலும், அரசாங்க சேவையினை டிஜிட்டல்மயமாக்கும் செயற்திட்டத்தின் ஊடாகவும் அரசகரும மொழிக் கொள்கையினை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வன்முறையற்ற சுதந்திரமான தேர்தல் முறையொன்றினை கட்டியெழுப்புவது தொடர்பிலும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்பட்டது. நடாத்தப்பட்ட அனைத்து தேர்தல்களும் வன்முறையற்று நடாத்துவதற்கு தேவையான பின்புலத்தினை வழங்கியமைக்காக கனேடிய அரசாங்கத்தின் பாராட்டினை சேர்ப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். மாகாண சபை நிறுவனங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவதானத்திற்கு உட்படுத்தினார். இவ் நாட்டின் நிர்வாக பொறிமுறையை முறைமைப்படுத்துவதை போன்றே அபிவிருத்தி செயன்முறையிலும் அது மிக முக்கியமானதொரு உதவியாக இருக்குமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, அரசகரும மொழிக் கொள்கையை செயற்படுத்தும் போதும் வன்முறையற்ற தேர்தல் முறைமையொன்றை கட்டியெழுப்பும் பணியிலும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு காட்டும் நேர்நிலையான மத்தியஸ்தத்தினை உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் அவர்களின் பாராட்டிற்கு உட்பட்டது.
இச் சந்தர்ப்பத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார அவர்கள் மற்றும் இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.