இன்றைய நாளில் கொண்டாடப்படுகின்ற உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு மற்றும் அரசினால் அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் வாரத்துடன் இணைந்து, சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சித்திட்டமொன்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மனிதவள அபிவிருத்தி பிரிவினூடாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் பயன்பாட்டை இல்லாமற் செய்வோம் என்பது உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் என்பதுடன் அக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தின் வளப் பங்களிப்புடன் இவ் நிகழ்ச்சித்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இங்கு பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ள ஆபத்துக்களைப் போன்றே பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைப்பதற்கு குடிமக்களாக அரசாங்க உத்தியோகத்தர்களினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.