2024 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் உயர்மட்ட திறன்களை வெளிக்காட்டிய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகச் சேவை, திட்டமிடல் சேவை மற்றும் கணக்காளர் சேவையின் புதிய உத்தியோகத்தர்களுக்கான சேவை ஆரம்ப நிகழ்வு பயிற்சி பாடநெறிகள் கடந்த 01ஆம் திகதி இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் ஆரம்பமாகியது
மேற்படி போட்டி பரீட்சையில் இலங்கை நிர்வாகச் சேவைக்காக 155 உத்தியோகத்தர்களும், திட்டமிடல் சேவைக்காக 105 உத்தியோகத்தர்களும் மற்றும் கணக்காளர் சேவைக்காக 121 உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்பட்டனர். திட்டமிடல் சேவைக்கு மற்றும் கணக்காளர் சேவைக்கு புதிதாக நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்காக 6 மாதகால பயிற்சியொன்று வழங்கப்படுவதுடன் இலங்கை நிர்வாகச் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக ஒரு வருட பயிற்சியொன்றும் வழங்கப்படவுள்ளது. அரச கொள்கைகள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தேவையான அறிவு, திறமை மற்றும் நடத்தைசார் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு இவ் பயிற்சி வழங்கப்படுகின்றது. அரசாங்க சேவைக்கு தேவையான கோட்பாட்டு ரீதியான அறிவு மற்றும் பொதுமக்களுக்கான சேவையை மிகவும் விளைதிறனாக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரயோக நடைமுறைகளை இவ் பயிற்சி கொண்டுள்ளது.
இவ் பயிற்சி செயற்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியதுடன் இவ் சந்தர்ப்பத்திற்கு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.வீ. ஜனாதர போன்ற உத்தியோகத்தர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கூடியிருந்தனர்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண