அரச தாபனங்களுக்குள் கடமைகளை நிறைவேற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தமது கடமைகளை முறையான வகையில் சுதந்திரமாக நிறைவேற்றுவதற்காக ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதோடு மிகவும் ஆரோக்கியமான சூழலுக்குள் தமது சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வரும் பயனாளர்களின் உரிமையை அடைந்து கொள்வதற்கான செய்ரி வாரம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் செப்டம்பர் 01ஆம் நாளன்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் ஆரம்பமாகியது.
இவ் வாரம் முழுவதும் முழு நாடும் உள்ளடங்கும் வகையில் அனைத்து அரச தாபனங்களிலும் வெளியக சூழலை போன்று அலுவலக வளாகத்திற்குள்ளும் தேவையற்ற விடயங்களை அகற்றி தேவையானவற்றை முறையான முகாமைத்துவத்துடன் தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கான மனப்பாங்கினை ஏற்படுத்துவதற்கான தூண்டுதலை ஏற்படுத்துவது அரசின் எதிர்பார்ப்பாகும்.
இவ் ஆரம்ப நிகழ்விற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார அவர்கள், கிளின் ஸ்ரீலங்கா செயற்திட்டம் தொடர்பாக சனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பீ.சீ. சுகிஷ்வர அவர்கள் உட்பட அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண