சமூகத்தின் நாளாந்த தேவைகள் பூர்த்தியாகும், வாழும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மறுமலர்ச்சி நகரமொன்றை உருவாக்கும் நோக்கத்தினைக் கொண்டு இம்முறை நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூராட்சி வாரம் 2025 செப்டம்பர் மாதம் 15 ஆந் தினத்திலிருந்து 21 ஆந் தினம் வரையில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
செப்டம்பர் 15 ஆந் தினம் நடமாடும் சேவைத் தினம் என்பதுடன், இரண்டாம் தினமான 16ஆந் தினம் சுற்றாடல் மற்றும் மரநடுகை தினத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தினம் சுகாதாரம் மற்றும் துப்பரவு தினம் என்பதுடன், செப்டம்பர் 18ஆந் தினம் வருமான மேம்படுத்தல் தினத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 ஆந் தினம் இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20ஆந் தினம் பொதுப் பயன்பாடுகள் தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், சான்றிதழ் வழங்குவதற்காக இறுதித் தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பீ. ருவன் செனரத் மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார ஆகியோரின் தலைமையில் விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக செய்தியாளர் கலந்துரையாடலொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08ஆந் தினம்) நடாத்தப்பட்டது.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண