இலங்கை விஞ்ஞான சேவை தமது இரண்டாவது வருடாந்த சம்மேளனத்தினை கொழும்பு நில மதுர கேட்போர்கூடத்தில் கடந்த (25ஆம் நாளன்று) அதி விமரிசையாக நடாத்தியது. இரு தினங்களாக நடைபெற்ற இச்சம்மேளத்தின் கருப்பொருள், இணைந்த ஆய்வுகளின் ஊடாக தேசத்தை கட்யெழுப்புதல் என்பதாகும். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விஞ்ஞான சேவைப் பிரிவின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இச்சம்மேளனத்திற்கு நாடளாவிய மட்டத்திலிருந்து விஞ்ஞான சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இச்சம்மேளனத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்து இலங்கை விஞ்ஞான சேவையின் உத்தியோகத்தர்களுக்கான ஆய்வுகள் முறைமைகள் தொடர்பில் பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்வதற்கு பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கு இணைந்த வகையில் உரிய உத்தியோகத்தர்கள் தமது தொழில் நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வறிக்கைகளை தயாரித்தல் வேண்டும். தாம் சேவையாற்றும் நிறுவனங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வுகளை மேற்கொள்வதும் விசேடமாகும். விஞ்ஞான சேவையின் உத்தியோகத்தர்கள் 55 பேர்கள் ஆய்வுகளுக்காக இவ் ஆண்டில் முன்வந்ததுடன், இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களினால் அமையப் பெற்ற குழுவின் மூலம் மதிப்பிடப்பட்டது. இத்தடவை அவ் மதிப்பீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 37 ஆய்வுகளை மட்டும் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டதுடன், பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் அவை வெளியிடப்பட்டுள்ளன.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண