ஓய்வு பெற்ற 730,000இனையும் தாண்டிய அரச உத்தியோகத்தர்கள் கடந்த 08ஆம் திகதி தேசிய ஓய்வூதிய தினத்தை வெகு விமரிசையான முறையில் கொண்டாடினார்கள். களனி வெதமுல்லையில் அமைந்துள்ள ஓய்வூதியர்களுக்கான விடுமுறை இல்லத்தில் இவ் தேசிய நிகழ்வு நடைபெற்றது. இது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஓய்வூதிய திணைக்களத்தின் மூலம் இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலாநிதி ஏ.எச்.எம்.எச். சந்தன அபேரத்ன அவர்கள் நிகழ்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது, ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள் நவீன நாட்டை கட்டியெழுப்புதற்காக செய்த பணி ஒருநாளில் குறிப்பிட்டு கூறி முடிக்க இயலாத ஒன்றாகும். அத்தோடு அன்று அரச உத்தியோகத்தர்களாக செய்த பணி இல்லையெனில் தற்போது நாம் வாழும் இந்நாடு எமக்கு உரிமையற்றிருக்கும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு ஓய்வூதியம் பெறும் சமூகம் முகம் கொடுக்கும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு எதிர்காலத்தில் அரசாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், 2025 வரவு செலவுத்திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாத ஓய்வு பெற்ற சமூகம் தொடர்பாக கட்டாயமாக 2026 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இச்சந்தர்ப்பத்திற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி, அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண