தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற டிஜிட்டல் ஆளுகைக் கொள்கையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில், பொது நிருவாக அமைச்சின் கீழுள்ள சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுமுறை விடுதிகளை ஆன்லைன் (Online) முறைமையினூடாக முன்பதிவு செய்யும் வசதியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஷந்தன அபயரத்ன அவர்களின் தலைமையில் 29 ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
www.pubad.gov.lk ஊடாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், தமது கையில் உள்ள தொலைபேசியின் ஊடாக விடுமுறை விடுதியொன்றை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே அமைச்சின் எதிர்பார்ப்பாக அமைந்தது எனவும், எதிர்காலத்தில் மக்களின் பிரதிபலிப்புகள் மற்றும் தேவைகளுக்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் செயன்முறையை வலுப்படுத்தி மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோகபண்டார உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண