முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு உத்தியோகத்தர்கள் 1,252 பேர்கள் புதிதாகப் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதற்குரிய நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ அரச நிகழ்வு, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் அவர்களின் பங்கேற்புடன் இன்று (ஜூலை 07) தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.
2025 அக்டோபர் மாதம் 05 ஆம் திகதி நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சைக்கு ஏறத்தாழ 85,000 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்ததுடன், அதன் பெறுபேறுகள் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியிடப்பட்டன. அதன் பின்னர், 2026 மே மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை மற்றும் பரீட்சைப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு திறமையின் அடிப்படையிலேயே இக்குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நியமனங்களுக்கான அடிப்படைத் தகைமை உயர்தரம் என்ற போதிலும், இதற்காக பெருமளவிலான பட்டதாரிகளும் தகைமை பெற்றுள்ளனர். நியமனம் பெற்றோர் அனைவரும் 18-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகளாவர் என்பதுடன் சிங்கள மொழ மூலமாக 1,006 பேரும், தமிழ் மொழி மூலமாக 217 பேரும், ஆங்கில மொழி மூலமாக 29 பேரும் என மொத்தம் 1,252 உத்தியோகத்தர்கள் தகைமை பெற்றுள்ளனர்.
இந்நியமனங்கள் 2026 ஜூலை 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணைந்த சேவைகள் பிரிவின் மூலம் இவ் நிகழ்வு ஒழுங்கமைப்பு செய்யப்படவுள்ளது. தகைமை பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல் தற்போது அமைச்சின் இணையத்தளத்தில் (www.pubad.gov.lk) பிரசுரிக்கப்பட்டுள்ளது.







மாண்புமிகு (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண