சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட துறைசார் மன்றத்துடன் இணைந்து, வெகுசன ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவுதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் 2026.08.14 ஆம் திகதி கொழும்பு NH Collection Hotel வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அரச சேவை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. சாந்தி வீரசிங்க உள்ளிட்ட அந்தப் பிரிவின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
துறைசார் மன்றங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன?
அரச அதிகாரிகளுக்காக பின்வரும் தலைப்புகள் தொடர்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன: நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துதல் சமூக உரையாடல் முறைமையில் நிர்வாகக் கட்டமைப்பு, உறுப்பினர்களின் பங்கு மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பு
பேச்சுவார்த்தை மற்றும் கூட்டு பேரம் பேசும் செயல்முறை ஒத்துழைப்பு மற்றும் முரண்பாடுகளைத் தடுக்கும் திறன்கள் கூட்டுறவு அடிப்படையிலான பிரச்சினைகளைத் தீர்த்தல், முறைப்பாடுகளைத் தடுப்பது மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்தல்
சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் முரண்பாடுகளைத் தடுப்பதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்து, சிறந்த தரமான அரச சேவையை உருவாக்குதல் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரச சேவை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல்) திரு. சாந்த வீரசிங்க, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திருமதி தீபா லியனகே, தபால் மா அதிபர் திரு. ருவன் சத்குமார, அரச அச்சக அதிபர் திரு. ஆர்.ஏ.பி.கே. ஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், வளவாளர்களாக திரு. உபாலி அதுகோரள, கலாநிதி மாரிங்க சுமனதாச, திருமதி பேர்லி வீரசிங்க, பேராசிரியர் எம். திலகசிறி உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.







மாண்புமிகு (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண