Divisions
பொது சேவைகள் மறுசீரமைப்பு பிரிவு
அறிமுகம்
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப அரச நிர்வாகப் பொறிமுறையொன்றை நிறுவுதல் இந்த அமைச்சின் முதன்மையான மற்றும் காலத்தின் தேவையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி, இந்த அமைச்சின் பொது நிர்வாகப் பிரிவின் பிரதான பொறுப்பாகிய பொதுச் சேவையில் மனித வளத்தின் முறையான முகாமைத்துவத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், மனித வள முகாமைத்துவத்திற்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள் மற்றும் நிகழ்நிலைத் தளங்களைத் தயாரித்தல் (Online Platform), தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலாவதியான செயன்முறைகளுக்குப் பதிலாக தேவையற்ற பணிப் நடவடிக்கைகள் மற்றும் தாமதங்களை இயன்றளவு குறைக்கும் வகையில் செயன்முறைகளை மீளாக்கம்செய்தல் (Process Reengineering), டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கான மற்றும் நவீன உலகப் போக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற பொது நிர்வாக பொறிமுறையை உருவாக்குவதற்குத் தேவையான நவீனமயமாக்கல்கள் மற்றும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக இப்பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது.
இங்கு, பொது மனித வள முகாமைத்துவத்தின் காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு வினைத்திறன், விளைதிறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்களை மையமாகக் கொண்டு முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு, புதிய பொது முகாமைத்துவச் செயன்முறைகள்(New Public Management) மற்றும் டிஜிட்டல் - பொது நிர்வாகச் செயன்முறைகளைப்(Digital – Government) பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்ட இலக்குகளை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கு
“நவீனமயமாக்கத்தின் மூலம் பொது சேவையில் விஷேடத்துவத்தை அடைந்துகொள்ளுதல்”
பணி
“பொதுச் சேவையை நவீனமயமாக்குவதன் மூலம், பொது சேவையில் விஷேடத்துவத்தை அடைந்துகொள்வதற்காக, சேவைகளை டிஜிட்டல் மயமாக்கம், மெய்நிகராக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி இந்த அமைச்சின் செயற்பாடுகளை நவீனமயமாக்குதல் நவீன முகாமைத்துவச் செயன்முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் செயற்பாடுகளை மீளாக்கம் செய்வதன் மூலம் நோக்கங்கள் அடைதல் மேற்கொள்ளப்படுகின்றது”
நோக்கங்கள்
- பொதுச் சேவையை வினைத்திறன் மற்றும் விளைதிறன் உள்ள விதத்தில் வழங்குவதற்குத் தேவையான மாற்றங்களை அறிமுகப்படுத்துதல்.
- சேவைத் திருப்தியை அதிகரிப்பதற்குத் தேவையான நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- குறைந்த செலவில் சிறந்த சேவையை வழங்குவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்தல்.
- மனித வள முகாமைத்துவக் கட்டமைப்பு மூலம் பொதுச் சேவையின் பணிகளை எளிதாக்குதல்.
- டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுச் சேவையில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல்.
- செயற்பாடுகளை மீளாக்கம் செய்வதன் மூலம் பொதுச் சேவையின் பணிப் படிமுறைகளை எளிதாக்குதல்.
- நவீனமயமாக்கல் மூலம் எதிர்கால சந்ததியினர் மற்றும் நவீன உலகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமான பொதுச் சேவையை உருவாக்குதல்.
செயற்பாடுகள்
- அமைச்சின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மெய்நிகராக்குவதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்தல்.
- பொதுத்துறையில் மனித வள முகாமைத்துவத்துக்கான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பொன்றினை உருவாக்குதல்.
- அமைச்சின் ஆவணங்கள் மற்றும் தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆவண முகாமைத்துவக் கட்டமைப்பொன்றினை நிறுவுதல்.
- அமைச்சின் செயற்பாடுகளை மீளாக்கம் செய்யும் திட்டமொன்றினைத் தயாரித்தல்.
அழைப்புக்களுக்கான தகவல்கள்
செல்வி. ஆர்.எம்.ஜே.சி. ராமநாயக்க சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பொது சேவைகள் மறுசீரமைப்பு)
|
திருமதி. ஆர்.டி.யூ.சி.வீரரத்ன உதவிச் செயலாளர் (பொது சேவைகள் மறுசீரமைப்பு)
|
||||||||||||||||||
பெயர் - திட்டமிடல் பிரிவு
அறிமுகம்
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் திட்டமிடல் பணிகளுக்கு உட்படும் செயற்பாடுளை திட்டமிடல், வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்களைத் தயாரித்தல், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்கள், திட்டமிடல்கள், அமுல்நடாத்தல், செயற்படுத்துதல், மதிப்பீடு செய்தலைப் போன்றே அதனுடன் தொடர்பான சேவைகளை நிறைவேற்றுவதற்காக திட்டமிடல் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
தொலைநோக்கு
"மனித வளத்தை திறன் வாய்ந்ததாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தமான, வினைத்திறனானதும் தனித்துவமானதுமான அரச சேவையை உறுதிப்படுத்தல்."
பணிக்கூற்று
"அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டமிடல் விடயப் பரப்பிற்குரியதான பணிகளையும் செயற்பாடுகளையும் சிறப்பாக திட்டமிடல், அமுல்நடாத்தல், செயற்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்."
" அமைச்சின் நோக்கங்களை நிறைவேற்ற தேவையான மூலோபாயங்களையும் கொள்கைகளையும் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல்."
நோக்கங்கள்
- “தேசத்திற்கான சிறந்ததோர் அரச சேவை” ஏற்படுத்திக் கொடுப்பதற்கான இலக்கினை அடைய உசிதமான திட்டமிடல் வழிகாட்டல்கள் மற்றும் மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தல்.”.
- அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இணக்கமான முறையில் அமைச்சின் மூலோபாயத் திட்டங்களைத் தயாரித்தல்.
பணிகள்
- அமைச்சின் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் செயலாற்றுகை அறிக்கையைத் தயாரித்தல்.
- அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் தொடர்பான நடவடிக்கைகள்.
- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மறுசீரமைப்புத் திட்டம், முன்னேற்ற அறிக்கைகள், வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த மதிப்பீடுகளை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்தல் மற்றும் அவற்றை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- அமைச்சுக்குத் தேவையான தரவுத் தளத்தைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல்.
- அமைச்சின் மற்றைய பிரிவுகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல்.
- மேலதிகச் செயலாளரின் ( மனித வள அபிவிருத்தி) கீழ் மேற்பார்வை செய்யப்படும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவசியப்படும் வகையிலும் செயலாளரின் ஆலோசனையின் பேரிலும் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளல்.
- அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வெளிநாட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் தொடர் நடவடிக்கை எடுத்தல்.
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பாடல் தகவல்கள்
திருமதி. எஸ்.கே. தயானந்தபணிப்பாளர் ( திட்டமிடல்) கடமையை ஆற்றுதல்
|
திருமதி. இ.ஏ.சி.யு. எதிரிசிங்கேபிரதி / உதவிப் பணிப்பாளர் ( திட்டமிடல்)
|
திரு. எஸ்.எம்.பி.கே. சேனாநாயகபிரதி / உதவிப் பணிப்பாளர் ( திட்டமிடல்)
|
| தொலைபேசி | : | (நீட்சி - 118) |
| தொலைநகல் | : | +94 0112662301 |
| மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
அரசாங்க சேவைகள் மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவு
தொடர்பு விபரங்கள்
|
|
|||||||||
கனேடிய உயர் ஸ்தானிகர், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருடனான சந்திப்பு...
A meeting between the Canadian High Commissioner to Sri Lanka David McKinnon and the Minister of Public Service Provincial Councils and Local Government Janaka Bandara Tennakoon took place at the Ministry today (09). During the meeting, the High Commissioner shared the pleasure of the Canadian Government with the Minister over the Government's victory in the last election. He also stated that his government is willing to provide assistance for a language promotion campaign at the provincial level to provide solutions to the communication problems of the people of this country. The Minister and the High Commissioner also exchanged views on the potential of the small scale tourism industry for the empowerment of women in the country.
Mr. J.J. Ratnasiri, Secretary of the Ministry and Mr. Mahinda Madihahewa, Adviser to the Ministry were also present on the occasion.
உள்ளக கணக்காய்வுப் பிரிவு
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், பொது நிருவாக பிரிவுக்குரிய உள்ளக கணக்காய்வுப் பிரிவு, நி.பி. 133 இன் பிரகாரம், அமைச்சின் செயலாளருக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான உள்ளக கணக்காய்வாளர் ஒருவரின் கீழ் இயங்கி வருகின்றது. அக்கிளைத் தலைவர் உட்பட 12 உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களையும், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் சாரதி ஒருவரையும் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பணியாட்தொகுதியினரைக் தன்னகத்தே கொண்டுள்ளது.
தொலைநோக்கு
“தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் தூய்மையான ஆட்சியை ஏற்படுத்தவும் பயனுறுதி மிக்க மனித வளம் கொண்ட அரச சேவையை தோற்றுவித்தல்”
பணிக்கூற்று
"அமைச்சினதும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பாக நிலவுகின்ற உள்ளகக் கட்டுப்பாட்டு முறையில் பங்கேற்று, அந்நடவடிக்கைகளில் ஏற்படும் தவறுகள் மற்றும் மோசடிகளைத் தடுத்தல். அத்துடன் அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பிரயோகிக்கப்படும் உள்ளக பரிசோதனைகளின் ஒழுங்குமுறை மற்றும் நியமங்கள் குறித்து தொடர்ந்தேர்ச்சியான கணிப்பாய்வு மற்றும் சுயாதீன மதிப்பீட்டினை மேற்கொண்டு பயனுறுதிமிக்க மனித வளத்தின் ஊடாக அரச வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்"
பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பொது நிருவாக பிரிவின் கீழ் காணப்படும் பிரிவுகள், திணைக்களங்கள் மற்றும் தாபனங்கள்.
பிரிவுகள்
- பொது நிர்வாக பிரிவுகள் கீழ் காணப்படும் அனைத்து பிரிவுகள்
திணைக்களங்கள்
- ஓய்வூதிய திணைக்களம்
நிறுவனங்கள்
- இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம்.
- தொலைக் கல்வி நிலையம்.
- தேசிய மனித வள அபிவிருத்திச் சபை.
- அரசாங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம்.
உள்ளக கணக்காய்வுப் பிரிவின் பணிகள்
- தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38 (ஆ) மற்றும் (ஈ) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்புகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, அச்சட்டத்தின் 40 ஆம் பிரிவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனம் மற்றும் நிதி ஒழுங்குவிதிகளின் 133, 134 ஆம் பிரிவுகளின் பிரகாரம் உள்ளக கணக்காய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் இலக்கம் 01/2025 மற்றும் 2025.04.28 ஆந் திகதிய சுற்றறிக்கையின் நிபந்தனைகளின் பிரகாரம் அமைச்சினதும் அமைச்சின் கீழ் மேற்பார்வை செய்யப்படும் தாபனங்களினதும் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் பின்வருமாறு நடாத்தப்படுகின்றன.
- தவறுகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக திணைக்களம் / நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளக பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள், திட்டங்களைப் போன்றே உண்மையான செயற்பாடுகள் ரீதியாகவும் வெற்றிகரமாக உள்ளதா எனக் கண்டறிதல்.
- கணக்கு மற்றும் ஏனைய அறிக்கைகளில் நம்பிக்கைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக கையாளப்பட்டுள்ள கணக்கியல் ஒழுங்கு முறைகளின் மூலம் பிழையற்ற நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்காக அவசியப்படும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை கண்டறிதல்.
- நிறுவனத்தின் பணியாட்தொகுதியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு அவர்களின் செயலாற்றுகைத் தரத்தை மதிப்பீ செய்தல்.
- திணைக்களம் / நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்கள், சகல விதத்திலும் நட்டங்களிலிருந்து எவ்வளவு துாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டறிதல்.
- அரசாங்க தாபன விதிக்கோவை , அரசாங்க நிதிப் பிரமாணம் மற்றும் பொது நிருவாக விடயப் பொறுப்பு அமைச்சினால் மற்றும் பொதுத் திறைசேரியினால் அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய குறைநிரப்பு ஆலோசனைகள் என்பன பின்பற்றப்படுகின்றனவா என கண்டறிதல்.
- வீண்விரயம், செயற்பாடற்ற மற்றும் அளவினை விஞ்சிய வகையில் செலவு செய்வதனைத் தடுப்பது போன்றே, அவற்றைக் கண்டறியப்படுவதற்கு கையாளப்படுகின்ற உள்ளக கட்டுப்பாட்டு முறையின் தர நியமங்களையும் ஆராய்தல்.
- திணைக்களத்தின் கணக்கு நடைமுறைகள் மற்றும் ஏதேனுமொரு வகையில் நிதி செலவாவதற்கு காரணமாக அமையும் செயற்பாடுகளை பரீட்சித்துப் பார்த்தல் மற்றும் திணைக்களத்தின் சொத்துக்கள் மற்றும் வளங்களைப் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் முறைசார்ந்தவாறு பிரயோகிக்கப்படுகின்றா என்பதனை ஆராய்தல்.
- தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளல்.
- உற்பத்தித்திறன் வாய்ந்த செயற்திறனிற்காக தொகுதி ரீதியான பகுப்பாய்வு மற்றும் செயற்திறனை பகுப்பாய்வு செய்தல்.
- முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தினால் அவ்வப்போது பிரசுரிக்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படுவதும், அந்தந்த வருடங்களின் சகல காலாண்டுக்கும் ஒரு முறை அமைச்சின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டங்களை நடாத்துதல், அக்கூட்டங்களில் எட்டப்படும் முடிவுகளை செயற்படுத்துகையினால் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பது இப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றொரு பணியாகும்.
- ஓய்வூதியம் செலுத்துதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம் ஓய்வூதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள ஊழல், மோசடி மற்றும் ஒழுங்கின்மை குறித்து அவதானம் செலுத்துவதும், ஓய்வூதியம் செலுத்துதல் சம்பந்தமான விபரங்களை தரவுத் தளத்தில் மற்றும் ஓய்வூதிய கடிதக் கோப்புக்களில் உள்ள பிணக்குகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது முடிவுகளை எடுக்கப் பிரயோகிக்கும் ஆவணங்கள்
- தாபன விதிக்கோவை
- நிதிப் பிரமாணம்
- அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை
- முகாமைத்துவ கணக்காய்வுச் சுற்றறிக்கை
- உள்ளக கணக்காய்வு வழிகாட்டல்
தொடர்பு விபரங்கள்
![]() பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்
|
||||||||||
உள்ளக கணக்காய்வுப் பிரிவு
|
|||||||
|
சுதந்திர சதுக்கம், கொழும்பு 07 இல் அமைந்துள்ள பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான கட்டிடத்தை அடுத்துள்ள கட்டிடத்தின் முதலாவது மாடியில் தாபிக்கப்பட்டுள்ளது. |
|||||||







மாண்புமிகு (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 
செல்வி. ஆர்.எம்.ஜே.சி. ராமநாயக்க
திருமதி. ஆர்.டி.யூ.சி.வீரரத்ன 
திருமதி. எஸ்.கே. தயானந்த
திரு. எஸ்.எம்.பி.கே. சேனாநாயக
திரு. எஸ்.வீரசிங்க 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண