முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை
ஆட்சேர்ப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரீசீலனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தகைமை பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 70% திறந்த அடிப்படையிலும், 30% இற்கு மேற்படாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.
சேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
திறந்த அடிப்படையிலானது
- இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாதவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
- க.பொ.த. (உ.த.) பரீட்சையில் பொது விடயப் பரீட்சை தவிர்ந்த சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்..
திறந்த அடிப்படையிலானது
- அரசாங்க சேவையின் நிரந்தர கனிஷ்ட ஊழியராக இருத்தல் வேண்டும்.
- உரிய திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனத்தின் கீழ் தொடர்ச்சியாக 5 வருட திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதாக உரிய திணைக்களத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும்.
- 2001.11.26 ஆம் திகதிக்கு பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள கனிஷ்ட ஊழியர்கள், மொழி / இலக்கியம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
சேவை பிரமாணக் குறிப்புகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
முன்னைய சேவைப் பிரமாணம் மற்றும் திருத்தங்கள்
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் தொடர்பான சுற்றறிக்கைகள்
வினைத்திறன் காண் தடைப்பரீட்சைகள் தொடர்பான சுற்றறிக்கைகள்
உள்ளீர்ப்புக்கள் தொடர்பான சுற்றறிக்கைகள்
தொடர்பு விபரங்கள்
திரு. எஸ். ஆலோக்கபண்டார இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்
|
திருமதி. பு(dh)த்தி என். லியனகே இணைந்த சேவைகள் பணிப்பாளர் I
|
||||||||||||||||||
வெற்றிடம் இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு I - மு.சே.உ.சே. தரம் I)
|
திருமதி. ரீ.கே. வண்ணியாராச்சி இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு II - மு.சே.உ.சே. தரம் II)
|
||||||||||||||||||
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு III - மு.சே.உ.சே. தரம் III)
|
திருமதி. கே.எம்.கே.கே. குலதுங்க இணைந்த சேவைகள் பிரதிப் பணிப்பாளர் (அலகு IV - மு.சே.உ.சே. இடமாற்றம், கொள்கைகள் கிளை மற்றும் விஷேட தரம்)
|
||||||||||||||||||