Home
தேசிய மொழிகள் பிரிவு
அறிமுகம்
அரசியலமைப்பு ஏற்பாடுகள்
அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல் தொடர்பாக இலங்கை ஜனநாயக சோஸலிச குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியமைப்பு உறுப்ரையின் iv அத்தியாயத்தில் உள்ளடங்கப்பட்டுள்ளது. இது iv அத்தியாயத்தின் 27உறுப்புரையின் (05, 06, 10) பிரிவில் காட்டப்பட்டுள்ளது. அதற்கேற்ப 1978 ஆம் ஆண்டு உறுப்புரையின் அடிப்படை சட்டமானது 1987 ஆம் ஆண்டு 13 ஆம் திருத்தம் மூலமாகவும் 1988 ஆம் ஆண்டு 16 ஆம் திருத்த சட்டம் மூலமாகவும் மொழி உரிமைகளின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மொழி உரிமையானது மனித உரிமையாக பாதுகாக்கப்பட வேண்டிய நிலமை அரசியலமைப்பு உறுப்புரையின் iii வது அத்தியாயத்தில் 12(2) மற்றும் 12(3) பிரிவில் காட்டப்பட்டுள்ளது.
மொழி உரிமையானது மனித உரிமையாக பாதுகாக்கப்பட வேண்டிய நிலமை அரசியலமைப்பு உறுப்புரையின் iii வது அத்தியாயத்தில் 12(2) மற்றும் 12(3) பிரிவில் காட்டப்பட்டுள்ளது.
‘’ இவ் அத்தியாயத்தில் மொழி பாவனை தொடர்பாக போதுமான வசதிகள் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (25 ஆம் பிரிவு )’’
நிர்வாக விதிமுறைகள்
இலங்கை பூராகவும் அமுல்படுத்தப்படும் அரசகரும மொழிக்கொள்கையை மேம்படுத்தும் நோக்கில் அரச வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சுற்றறிக்கைகள் போதுமான அளவு வெளியிடப்பட்டுள்ளது.
அரசகரும மொழி
iசிங்களம் மற்றும் தமிழ்மொழி இலங்கையின் அரசகரும மொழிகளாகும்.-(அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான 18(1) மற்றும் 18(2) உறுப்புரைகள்)
தேசியமொழி
சிங்களம் மற்றும் தமிழ்மொழி இலங்கையின் தேசிய மொழிகளாகும்.- 19 ஆம் உறுப்புரை
இணைப்பு மொழி
ஆங்கில மொழி இணைப்பு மொழியாதல் வேண்டும் (அரசியலமைப்புக்கான 13 வது திருத்ததினால் திருத்தப்பட்டவாறான 18(3)உறுப்புரை)
1978 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோக்ஷலிச குடியரசின் அரசியல் யாப்பு
இலங்கையின் மொழிதொடர்பான அடிப்படை சட்டம் அரசியலமைப்பின் நான்காவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலுள்ள சட்ட ஏற்பாடுகள் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினாலும் (1987) 16 வது அரசியலமைப்பு திருத்தத்தினாலும் 1988 திருத்தப்பட்டுள்ளது. இந்த அத்தியாயங்களில் அடங்கப்பட்டுள்ள விடயங்களில் மொழி உரிமையானது பிரதானமாகும்.
மொழி உரிமையானது அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்படும் தன்மை அரசியலமைப்பின் III வது அத்தியாயத்தில் 12(2)வது உறுப்புரையில் வெ ளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் “இனம், மொழி , மதம், சாதி, பால், அரசியல்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தப் பிரஜைக்கும் பாரபட்சம் காட்டுதல் ஆகாது என கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த உரிமையானது இதே அரசியலமைப்பு உறுப்புரையலேயே இதன் கீழ் கூறப்பட்டுள்ள விசேட ஏற்பாடுகளுக்கு உட்படல் வேண்டும்.
“• ஆயினும் பகிரங்க சேவையில் , நீதிச்சேவை, மாகாண பகிரங்க சேவை உள்ளூராட்சி சேவையில் அல்லது ஏதேனும் பகிரங்க கூட்டுத்தாபனத்தின் சேவையில் உள்ள ஏதேனும் ஊழியத்திற்காக அல்லது பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏதேனும் மொழியை அறிந்திருத்தல் நியாயமாக அவசியமாக உள்ளவிடத்து அத்தகைய ஏதேனும் ஊழியத்திற்காக அல்லது பதவிக்கான தகைமையாக அம்மொழியில் போதிய அறிவை நியாயமான காலத்தினுள் பெறுதல் வேண்டும் என ஆளொருவர் தேவைப்படுத்தப்படுவது சட்டமுறையானதாதல் வேண்டும் :
• ஆயினும் அத்தகைய ஊழியத்திற்கான அல்லது பதவிக்கான பணிகளுள் எவற்றையும் ஏதேனும் மொழியை அறிந்திருத்தல் தவிர வேறு விதத்தில் நிறைவேற்ற முடியாமலிருக்குமிடத்து அத்தகைய ஏதேனும் ஊழியத்திற்கு அல்லது பதவிக்கு சேர்த்துக்கொள்வதற்கான தகைமையாக அம்மொழியில் போதிய அறிவை உடையராக இருத்தல் வேண்டும் என ஆளொருவர் தேவைப்படுத்தப்படுவது சட்ட முறையானதாதல் வேண்டும்.”
மேலும் 12(3) உறுப்புரையின் பிரகாரம் எந்வொரு ஆளும் இனம் , மதம்,மொழி,சாதி, பால் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுல் எந்த ஒன்று காரணமாகவும் கடைகள் பொது உணவுச்சாலைகள் விடுதிகள் பொது களியாட்டங்கள் தனது மதத்திற்குறிய பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றிக்கு செல்லுதல்தொடர்பில் ஏதேனும் தகுதியீனத்துக்கு, பொறுப்புக்கு, மட்டுப்பாட்டிற்கு அல்லது நிபந்தனைக்கு உட்பட்டவராகலாகாது. ”
பின்னணி
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதிய 1651/20 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு (MNLSI) உருவாக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு திசெம்பர் 18 ஆம் திகதி 1945/40 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசகரும மொழிகள் தொடர்பான விடயப்பரப்பு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ்கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி 2070/56 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேசிய ஒருமைப்பாட்டு, மறுசீமைப்பு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு உள்ளடக்கப்பட்டு அதன் பின்னர் அவ் அமைச்சு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் அமைச்சாக திருத்தப்பட்டது.பின்னர் 2018 ஆம் ஆண்டுதிசெம்பர் 28 ஆம் திகதி 2103/33 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் ,சமூகமேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சாக மீண்டும் திருத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் என்ற விடயம்பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி 2187/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2020செப்டம்பர் மாதம் அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் என்ற விடயம் அரசசேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் 2022மே மாதம் 27 ஆம் திகதிய 2281/4127 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசகரும மொழிகள் தொடர்பான விடயம்பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
பொது மக்கள் மத்தியில் சகவாழ்வை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அரசகரும மொழிக்கொள்கையை வினைத்திறனான முறையில் அமுல்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்படும் ஒரு பிரிவாக தேசிய மொழிகள் பிரிவு (NLD) செயற்பட்டு வருகின்றது. அரசகரும மொழிக்கொள்கையை(OLP) வினைத்திறனான முறையில் அமுல்படுத்துவதற்காக இனங்கானப்பட்டுள்ள பல நிகழ்ச்சித்திட்டங்ளை பலவேறுபட்ட முறைகளில் பல்வேறுபட்ட பொறிமுறைகளில் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மொழிகள் பிரிவானது அரசகரும மொழிகள் திணைக்களம்(DOL), அரசகரும மொழிகள் ஆணைக்குழு(OLC), தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்(NILET) போன்ற மொழியை ஊக்குவிக்கும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றது. மொழி வளத்தை கட்டயெழுப்புதல், சேவை வழங்கள் மற்றும் இருமொழி மும்மொழிசேவை வழங்கள் மற்றும் தேவை நிமித்தம் சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்களை ஊக்குவிப்பதற்கான பொறுப்புமிக்கவர்கள்.
1956 மொழி அழைப்பு மத்திய நிலையம் மற்றும் மொழி மத்திய நிலையங்கள் ஊடாக பிரதேச மட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு நடாத்துவதற்து வசதிகள் ஏற்படுத்தல். திறைசேரி நிதிகளுக்கு மேலதிகமாக கனேடிய அரசு மற்றும்ஐரோப்பிய யூனியன் (EU) நிதியுதவியுடன் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு கருத்திட்டம் (NLEAP) மற்றும் மறுசீரமைப்பு வலுப்படுத்தும் கருத்திட்டம் ( SRP) ஊடாக நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நோக்கம்
"அரசகரும மொழிக்கொள்கை ஊடாக இலங்கை பிரஜைகளுக்கு மகிழ்ச்சிகரமான சேவை "
பணிக்கூற்று
அரசகரும மொழிக்கொள்கைக்கு அமைவாக பிரஜைகளை திருப்திபடுத்தும் முகமாக சேவை வழங்கும்போது இருமொழிகளில் சேவை வழங்குவதற்கான சிறந்த சூழலை உருவாக்குதல்
தேசிய மொழிகள் பிரிவின் நோக்கம்
- அரசகரும மொழிக்கொள்கையை அமுல்படுத்துவதற்கு அமைவான திட்டம் தயாரித்தல். நடைமுறைப்படுத்துதல். மேற்பார்வை செய்தல்
- அரச நிறுவனங்களில் இருமொழிச் சூழலை உருவாக்குவதற்கு அவசியமான சிறந்த சூழலை கட்டியெழுப்புதல்
- அரசகரும மொழிக்கொள்கை தொடர்பாக பொதுமக்களை வலுப்படுத்துதல்
தேசிய மொழிகள் பிரிவின் செயற்பாடுகள்
- அரச நிறுவனங்கள் மத்தியில் இருமொழிச் சூழலை வலுப்படுத்துதல்
- இருமொழிகளில் சேவை வழங்குவதற்காக அரச உத்தியோகத்தர்ளை வலுவூட்டல்
- பொது மக்கள் மத்தியில் அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தலை மேம்படுத்துதல்
- அரச நிறுவனங்கள் மத்தியில் அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் தொடர்பாக வரவேற்பினை ஏற்படுத்தல்
- அரச நிறுவனங்கள் மத்தியில் அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் தொடர்பாக மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு
மொழி அழைப்பு நிலையம்
1956
அரசகரும மொழிக்கொள்கை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் பெற்றுக்கொள்வதற்கும் மும்மொழி மொழி பெயர்ப்புகள் செய்வதற்கும் மொழி தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் மொழி அழைப்பு மத்திய நிலையமானது தாபிக்கப்பட்டது. மொழி வகுப்புகள் பயிற்சிநெறிகள் நிகழ்ச்சித்திட்டங்கள், பரீட்சை சொற்களின் கருத்து , சரியான கருத்து மொழி அழைப்பு நிலையங்கள் மொழி முரண்பாடுகள் மற்றும் முறைப்பாடுகள் அனுப்புவதற்காக இல 0702001956 மற்றும் துரித அழைப்பு 1956 வழங்கப்பட்டுள்ளது., இதற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழு. அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியன ஒருங்கணைப்பிணை வழங்குகின்றது.
மொழி மத்திய நிலையம்
வட மாகாண மத்திய நிலையம் (கிளிநொச்சி ) மற்றும் கிழக்கு மாகாண மத்திய நிலையம் (மட்டக்களப்பு) தாபிக்கப்பட்டதன் மூலம் அரச உத்தியோகத்தர்களுக்கு இந்த நிலையம் மூலம் இரண்டாம்மொழி கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச நிறுவனங்களில் இருமொழிகளில் அமுல்படுத்தல் செயற்பாடு தொடர்பாக செயற்பாடு மேம்படுத்தல் இடம்பெறுகின்றன.
- தொலைபேசி இல கிளிநொச்சி – 021-2283656
- மின்னசல் முகவரி- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- தொலைபேசி இல (மட்டக்களப்பு) - 065-2050140
அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தும் ஒன்றிணைந்த நிறுவனங்கள்
அரசகரும மொழிகள் ஆணைக்குழு
அரசகரும மொழிகள் ஆணைக்குழுவானது 1991 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழு சட்ட மூலம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஆணைக்குழு ஆகும் இவ் ஆணைக்குழு ஜனாதிபதி மூலம் நியமிக்கப்படும் ஆறு அங்கத்தவர்களை கொண்டதாகும். இதில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். உத்தியோகபூர்வமாக ஆணைக்குழுவின் செயலாளராக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் தலைவராக ஆணையாளர் நாயகம் இருப்பார். அரசியமைப்பு IV வது அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்ட சட்டத்தின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை செய்தல் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் கடமையாகும். தொடர் நடவடிக்கைகள் சிறந்த முறையில் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர் குழாம் உண்டு.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு மூலம் இடம்பெறும் பிரதான செயற்பாடுகள்
- அரசகரும மொழி தொடர்பான முறைப்பாடுளை ஆய்வுசெய்தல்
- அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்ளை விழிப்புணர்வூட்டல்
- பாடசாலை நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்
- பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடை முறைபடுத்துதல்
அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் இணையத்தள முகவரி- : https://www.olc.gov.lk/
அரசகரும மொழிகள் திணைக்களம்
சிங்களம் மற்றும் தமிழ்மொழிகள் தாய் மொழியாக அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் திட்டமிடுவதற்காக நிதி அமைச்சின் விசேட அலகான அரசகரும மொழிகள் பணியகம் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நிதி அமைச்சின் கீழ் நிரந்தர வேறு திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்றுதொட்டு அது அரசகரும மொழிகள் திணைக்களமாக விளங்கியது. பின்னர் 1956 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதுடன் அரசு முகம்கொடுத்த முக்கிய பிரச்சினையாக ஆங்கிலமொழியில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் சிங்கள மொழியில் எவ்வாறு மேற்கொள்வது என்பதுதான் . இதன் பிரதிபலனாக 1956 ஒக்டோபர் முதலாம் திகதி விசேட ஆணையாளரின் மேற்பார்வையின் கீழ் அரசகரும மொழிகள் திணைகளத்தின் நடவடிக்கைகள் மறுசீரமைக்கப்பட்டதுடன் அன்றுதொட்டு சிங்களமொழி அரசகருமமொழியாக உபயோகப்படுத்துவதற்கு தேவையான முறையில் எல்லா வழிகளிலும் ஆரம்பிப்பதற்கான பொறுப்பளிக்கப்பட்ட அரச நிறுவனமாக அரசகரும மொழிகள் திணைக்களம் விளங்குகின்றது.
அரசகரும மொழிகள் திணைக்களம் மூலம் செயற்படுத்தப்படும் பிரதான செயற்பாடுகள்
- சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலமொழி மற்றும் வெளிநாட்டு மொழி கற்கை தொடர்பான பயிற்சிநெறிளை நடாத்துதல்
- அரச உத்தியோகத்தர்களுக்கான மொழிதேர்ச்சி பரீட்சை நடாத்துதல்
- மொழி தகைமையுடைய சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கான மொழிமேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடாத்துதல்
- மொழி பாடப்புத்தகங்கள் மற்றும் அகராதிகளை தொகுத்தல்
DOL website: https://www.languagesdept.gov.lk/
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் சிறந்த பொறிமுறையினை நோக்காக கொண்டு இனங்களுக்கு மத்தியில் சகவாழ்வினை மேம்படுத்தி அரசகரும மொழிக்கொள்கையை சிறந்த முறையில் அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2007 /26 ஆம் இலக்க சட்டமூலத்தின் மூலம் தாபிக்கப்பட்டது . சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலமொழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமைகளை மேம்படுத்துதல். மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குதல், மொழி கற்பித்தல் தொடர்பான பிரதான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல் , இருமொழி மும்மொழி திறமைளை கட்டியெழுப்புதல் மற்றும் இருமொழி மும் மொழிசேவை வழங்குவதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இடம்பெறும் பிரதான செயற்பாடுகள்
- சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலமொழி அறிவினை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி கற்பிப்பதற்கு அதி திறமை உள்ளவர்களை உருவாக்குவதற்காக சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலமொழி தொடர்பான நீண்ட பயிற்சியினை வழங்குதல்
- பொருத்தமானவர்களுக்கு மொழி பயிற்சி மற்றும் கல்வி வழங்குதல் மற்றும் மொழிப்பயிற்சியினை பூரணப்படுத்துபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் டிப்ளோமா வழங்குதல்
- மொழி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு பயிற்சியாளர்களை உள்ளடக்கிய குழாமை உருவாக்குதல்
- மொழிகளுக்கு அமைவான காரணங்கள் தொடர்பான தகவல்களை சேர்த்து வைப்பதற்கு ஓர் இடத்தினை அமைத்தல்
தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் : https://www.nilet.gov.lk/
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்பாட்டுத்திட்டம்
இலங்கை அரசு மூலம் ((gosl)2016 வருடம் முதல் 4.5 வருட காலங்கள் கனேடிய டொலர் 10.85 மில்லியன் நன்கொடையில் தேசியமொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்பாட் டுத்திட்டம் என்ற பெயரில் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இக்கருத்திட்டமானது தேசிய சகவாழ்வு, கலந்துறையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் அரசகரும மொழிக்கொள்கையை வலுப்படுத்தும் முகமாக கனடா (GAC) மூலம் நிதி வழங்கப்பட்டு Alinea International மூலம் செயற்படுத்தப்படும் பிரதான கருத்திட்டமாகும். அரச செயற்பாட்டாளர்கள் மூலம் இலங்கையின் அரசகரும மொழிக்கொள்கையை(OLP) வலுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். NLEAP ற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்(MOU) 2016 வருடத்தில் GOSL மற்றும் GOC இடையில் கையொப்பம் இடப்பட்டதுடன் 2023 ஆகும் போது செயற்பாடுகள் முடிவுறுத்தப்படவுள்ளது.
ஆரம்ப கருத்திட்ட பங்குதாரர்கள்:
- o அரசகரும மொழிக் கொள்கை அமுல்படுத்தல் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அமைச்சு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசியமொழிகள் பிரிவு அரசகரும மொழிக் கொள்கயை அமுல்படுத்துதல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு உள்ள ஏனைய இணைப்பு நிறுவனங்களாவது.;
- தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்(NILET),
- அரசகரும மொழிகள் திணைக்களம்(DOL)
- அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC)
- o யாழ்ப்பாணம், களனி, சப்ரகமுவ மற்றும் கிழக்கு பல்கழைகழகங்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ( UGC ) மற்றும்
- o தேசிய மொழிகள் நிதியம்( NLF) ஊடாக சிவில் சமூக சங்கங்கள்
NLEAP Website : https://www.nleap.lk/
தொடர்பு விபரங்கள்
திரு. எம்.எல்.கம்மம்பில மேலதிகச் செயலாளர் (தேசிய மொழிகள்)
|
|||||||||
திரு. பீ. என். தம்மிந்த குமார சிரேஷ்ட உதவிச் செயலாளர் (தேசிய மொழிகள்)
|
வெற்றிடம் உதவிச் செயலாளர் (தேசிய மொழிகள்)
|
நிர்வாக அலுவலர்
திருமதி. ஏ.ஏ.எப். நதிமியா நிர்வாக அலுவலர் (தேசிய மொழிகள்)
|
||||||||||
Branch
|
|||||||
பிரிவின் பெயர் - பாராளுமன்ற விவகாரப் பிரிவு
பிரிவின் பெயர் - பாராளுமன்ற விவகாரப் பிரிவு
இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமானது, பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனானதும் பயனுறுதி வாய்ந்ததுமான சேவைகளை வழங்க முடியுமான வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். அலுவலக உபகரணங்கள், வாகன உரிமங்கள் வழங்குதல் மற்றும் காப்புறுதி வசதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரத்தியேக ஊழியர் குழாத்தை நியமனம் செய்தல், சேவையை முடிவுறுத்தல், அந்த ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பணிக்கொடை வழங்குதல் மேலும் அவர்களுக்கு பயிற்சியளித்தல் என்பன இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்படும் முக்கிய பணிகளாகும்.
தொலைநோக்கு
"வினைத்திறன் மற்றும் பயனுறுதி மிக்க மக்கள் சேவைக்காக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களை வலுவூட்டல்.
பணிக்கூற்று
கெளர பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொது மக்களுக்கான சேவையை உகந்த அளவில் வழங்க ஆதரவு சேவைகளை வழங்குதல்.
நோக்கமும் பணிகளும்
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக பணியாட்தொகுதியினரை நியமித்தலும், சேவையை முடிவுறுத்தலும்.
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக பணியாட்தொகுதியினருக்கு சம்பளம் வழங்குதல்
- சேவையை முடிவுறுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேகப் பணியாட்தொகுதியினருக்கு பணிக்கொடை செலுத்துதல்.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக உபகரணங்களை வழங்குதல்
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களிடமும் செல்வதற்கு முடியுமான வகையில் போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் தீர்வை வரியற்ற வாகன உரிமங்களை வழங்குதல்.
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பணியாட்தொகுதியினருக்கான பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
அமைப்பின் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஆர்.எம்.என்.இ.கே. ரணசிங்க மேலதிகச் செயலாளர்
|
திரு. டி.எம்.சி. நாலக சிரேஷ்ட உதவிச் செயலாளர்
|
||||||||||||||||||
திரு எல்.எல்.எஸ். சஞ்ஜீவ கணக்காளர்
|
|||||||||
பொதுவான விடயங்கள்
|
|||||||||
முகவரி: பாராளுமன்ற விவகாரப் பிரிவு, 18 ஆம் மாடி, ‘“நில மெதுர”,எல்விடிகல மாவத்தை, நாரஹேன்பிட, கொழும்பு 05. |
ප්රතික්ෂේපිත අයදුම්කරුවන්ගේ සංශෝධිත ලේඛනය / Revised Rejected Lists
Covering Letter / ආවරණ ලිපිය |
ID Verification
Name | : | |
Designation | : | |
NIC | : | |
Fingerprint Number | : | |
Issued Date | : | |
Address | : | |
Status | : |