துருக்கி தூதுவருக்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு...
இலங்கைக்கான துருக்கி தூதுவர் கலாநிதி செமி லுட்பு துர்குட் (Dr. Semih Lutfu Turgut) மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்தகிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திட்வா சூறாவளியினால் பாதிப்படைந்த புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக துருக்கி அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்த தூதுவர், உரிய பாடசாலைகளை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு துருக்கி அரசாங்கத்தின் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்ததுடன், பாதிப்படைந்த பாடசாலைகளை அவதானிப்பதற்காக எதிர்வரும் காலத்தில் உரிய பிரதேசங்களுக்கு செல்வதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கும் பிரதேச மக்களின் உரிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக துருக்கி அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையில் கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு நாட்டு கல்வி நிறுவனங்களுக்கிடையிலான இணைந்த வேலைத்திட்டமொன்று தொடர்பாகவும் இரு தரப்பினருக்குமிடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், இரு நாடுகளினதும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்திக்காக ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்தர்ப்பத்திற்கு துருக்கி தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் செல்வி ருமெய்சா அக்சின் (Rumeysa Akcin) அவர்களும் கலந்துகொண்டார்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண