உள்ளூராட்சித் தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வுகளை முன்வைப்பதற்காக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்களினால் கடந்த ஜனவரி மாதத்தில் காணி அமைச்சின் செயலாளர் திரு. ஆர்.ஏ.ஏ.கே. ரணவக அவர்களின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே, அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயலத் ரவீ திஸாநாயக ஆகியோரைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை அண்மையில் (13 ஆம் திகதி) அமைச்சில் வைத்து அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது..
இச்சந்தர்ப்பத்தில் குழுவின் செயலாளர் சட்டதரணி கயனி பிரேமதிலக, அமைச்சின் ஆலோசகர் மஹிந்த மடிஹேவா ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.