அமைச்சரிடமிருந்து உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை.
அரசை பிரதிநிதித்துவப்படுத்தி கிராமத்திற்குள் கடமையாற்றுகின்ற பிரதான உத்தியோகத்தர் கிராம சேவகர் என்பதினால் அவரை பலப்படுத்துவதற்கு அமைச்சரவையாக துரித வழிமுறைகள் செய்தல் அவசியம் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் குறிப்பிட்டார். அரசாக அரச சேவையின் நவீனமயமாக்கல் செய்வது தொடர்பில் கடுமையான அவதானமொன்று ஏற்பட்டுள்ள இவ் நேரத்தில் கிராம சேவகர் மட்டத்தில் டிஜிட்டல்மயமாக்க நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் தற்போது வரை இது தொடர்பிலான கருமங்கள் குறிப்பிட்டளவுக்கு நடைபெறும் களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ் நிகழ்ச்சிதிட்டத்தை செயற்படுத்த அறிவுரை வழங்கினார். அமைச்சர் இவ் கருத்துக்களை 24ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சுடன் தொடர்புடைய துறைத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த போது அமைச்சர் குறிப்பிட்டது அஸ்வெஸ்ம நிகழ்ச்சித்திட்டத்திற்கு மேலாக சரியாக செய்வதற்காக பிரதேச செயலாளர்களுக்கு சரியான அதிகாரத்தினை வழங்குவதற்கு செய்ய வேண்டியுள்ளதாகும். அத்தோடு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பெற வேண்டிய முத்திரைக் கட்டணங்கள் சரியான முறையில் கிடைக்கப் பெறுகின்றனவா தொடர்பில் அமைச்சாக காணப்படும் எல்லையிலிருந்து அப்பாற் சென்று கருமமாற்ற வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர் தினேஷ் 341வது உள்ளூராட்சி நிறுவனங்களின் வரிப்பணக் கட்டணங்கள் தொடர்பில் திருத்தமொன்று வர வேண்டுமெனவும் குறிப்பிட்டார். பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல்மயமாக்க நிகழ்ச்சித்திட்டம் உள்ளூராட்சி நிறுவனங்களிலும் துரிதமாக உள்வாங்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவூரை வழங்கப்பட்டது.
இவ் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்ட மற்றுமொரு காரணி என்னவெனில், முஸ்லிம்களின் இறப்பு தொடர்பில் மரணச் சான்றிதழ் வழங்கும் போது ஏற்படுகின்ற பிரச்சினை பற்றியாகும். முஸ்லிம் மரணமொன்று நடைபெற்று 24 மணித்தியாலத்திற்குள் மரணச் சடங்குகள் செய்யப்பட வேண்டியதாக இருப்பினும் தொடர்புடைய மரணச் சான்றிதழை வழங்கும் போது ஏற்படும் காலதாமதம் காரணமாக அவ் கருமங்களை ஆற்றுவதற்கு தடைகள் ஏற்படுவதாக குறிப்பிடப்படும் புகார்களுக்கு அவதானத்தை செலுத்திய பிரதமர் அது தொடர்பில் காரணங்களைக் கண்டறிந்து உத்தியோகஸ்தர்களுக்கு அறிவுரை வழங்கிய போது குறிப்பிட்டதாவது, எதேனும் நோய் நிலைமையின் போது அரச வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது இறந்து போகும் முஸ்லிம் இனத்தவரின் மரணமொன்று நிகழும் போது குறிப்பிட்ட வைத்தியரின் வைத்திய பரிந்துரையின் மீது இறுதிச் சடங்குகள் செய்வதற்கு வர்த்தமானி அறிவித்தல் இன்று பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவாகும்.
இவ் கலந்துரையாடலில் இணைந்த இராஜங்க அமைச்சர் ஜானக வக்கும்புர அவர்கள் தோட்டத் தொழிலாளர் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினையான தமக்கேயுரிய விலாசமொன்று இல்லாமை தொடர்பான பிரச்சினை பற்றி அவதானம் செலுத்தப்பட்டது. தாம் வசிக்கும் தோட்ட இல்லத்தின் இலக்கத்தின் மீது அமைந்த தொடர்புடைய விலாசத்தினை வழங்குவதற்கு தேவையான கருமங்கள் ஆற்றுவதற்கென இராஜங்க அமைச்சர் இங்கு பரிந்துரை செய்ததோடு அது தொடர்பில் எதிர்காலத்தில் கருமமாற்றுவதற்கு பிரதமர் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் இணைந்து கொண்ட அமைச்சரவை செயலாளர் ரஞ்சித் அசோக அவர்கள் குறிப்பிட்டதாவது, நாடு முகம் கொடுத்திருக்கும் நிலைமையின் மீதமைந்து அனைத்து அரச உத்தியோகத்தர்களும் செலவழிக்கும் அனைத்து ரூபாய்க்கும் பெறுமதி ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும் எனவாகும்.