பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் திருத்தம் எனும் பெயரில் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட தனி உறுப்பினர்களின் முன்மொழிவு, அரசாங்கம் முன்னிலை வகித்து செய்தவொன்று அல்ல எனவும் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு அரசாங்கம் எப்பொழுதும் மதிப்பளிக்கும் எனவும், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பாராளுமன்றத்தில் 2023.08.08 தினத்தில் குறிப்பிட்டார். சிரேஸ்ட உறுப்பினர்கள் என்ற வகையில் தனி உறுப்பினர்களின் முன்மொழிவை முன்வைப்பதற்கு இடம்கொடுத்து அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என குறிப்பிட்ட பிரதமர், எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தமக்கு தேவையான அனைத்தும் செய்ய முடியாதெனவும் குறிப்பிட்டார்.
அவ் தனி உறுப்பினர்களின் முன்மொழிவு தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு, சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு முன்வைத்த சந்தர்ப்பத்தில், எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரினால் எழுப்பப்பட்ட பிரச்சினையொன்றிற்கு பதில் அளித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டார். எதிர் கட்சியின் பிரதான அமைப்பாளர் வினவியது என்னவெனில், உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்ட தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இவ் தனி உறுப்பினரின் முன்மொழிவினை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு வாக்குகளும் மற்றும் மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்துவதற்கு அரசாங்கம் தயாரா எனவாகும்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் இவ்வாறும் குறிப்பிட்டார்.
“அரசாங்கம் எந்தவொரு நேரத்திலும் இவ் சட்டமூலத்தின் ஆரம்பகர்த்தாவல்ல. எனவே உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு அரசாங்கம் எப்பொழுதும் மதிப்பளிக்கும். சபாநாயகரே, பாராளுமன்றத்திலுள்ள தனி உறுப்பினர்களுக்கு எதுவேண்டுமென்றாலும் முன்வைக்கலாம். அது எந்த அரசாங்க காலத்திலும், அந்த காலத்திலும் நடைபெற்றதென எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளருக்கும் தெரியும். எங்கள் அத்தநாயக்க அமைச்சர் முன்வைத்து அரசியல் யாப்பிற்கு நடைபெற்ற விடயத்தையும் அறிவார். ஆகவே அதனால் நாங்கள் மிகப் பொறுப்புடன், சிரேஸ்ட உறுப்பினர்களாக தனி உறுப்பினர்களுக்கு இடம்கொடுத்து, அவர்களின் உரிமைகள் தொடர்பில் நடந்து கொள்ள முடியும். எனினும், அவர்களுக்கு தேவையானதை எல்லாம் செய்ய முடியாது.”