பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஐக்கிய ஓய்வூதியர் அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே (2023.10.09) பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன-
எங்கள் நாட்டை நடத்தி, நாட்டைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைத்த மரியாதைக்குரிய பெரியவர்களாக நாங்கள் உங்களைப் பார்க்கிறோம். உங்கள் காலத்தில் பல்வேறு சேவைகள் மற்றும் துறைகளில் உங்கள் சேவையை ஆற்றி, சவால்களை கடந்து வந்ததற்காக நீங்கள் அனைவரும் மிகவும் பாராட்டப்படுகிறீர்கள், மேலும் அரசாங்கம் உட்பட எங்கள் அனைவரதும் சிறப்பு மரியாதை உரித்தாகிறது. ஓய்வூதியம் இல்லாத இலட்சக்கணக்கான முதியவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அந்த சகோதர சமக்களுக்கு நிவாரணமொன்றை வழங்குவது தொடர்பில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பிட்ட சில துறைகளுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரிப்பதன் மூலம், அந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயல்முறைக்கு அந்த கலந்துரையாடலை வழிநடத்தியுள்ளோம்.
அரசுகளை திட்டுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் தாழ்மையுடன் சொல்கிறேன். நிதி ஒதுக்கீடுகளில் சிக்கல்களை எதிர்நோக்கும் மக்களது பிரச்சினைகளுக்கு நிவாரணமளிக்கும் சூழ்நிலையை உருவாக்க நாங்கள் எப்போதும் தலையீடுகளை மேற்கொள்கிறோம்.
பொருட்களின் விலை அதிகமாக இருப்பதை நான் ஒரு போதும் மறுக்கவில்லை. மக்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்ற முறையில் என்னால் அவ்வாறு கூற முடியாது. பொருட்களின் விலையை குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளை நாம் மறுக்க முடியாது. நாம் பழகிய பொதுநல அரசு இன்று மாறி வருகிறது.
நலன்புரி அரசுக்குப் பதிலாக, நாம் வேறு பாதையில் செல்கிறோம். கடந்த காலத்தில் பிள்பற்றிய கொள்கைகளில் மக்கள் பக்கம் இருந்த பல சாதனைகள் இப்போது மாற்றத்துக்குள்ளாகியுள்ளன..
அவற்றை முடிந்தவரை பாதுகாக்க உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களோடு நான் தொழிலாளர் துறை அமைச்சர் என்ற முறையில் போராடினேன்.. அக்ரஹார காப்பீட்டு முறையைப் பார்த்தால், அந்தக் காலக்கட்டத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக கலந்துரையாடி அந்த இடைவெளியை சரிசெய்வதற்கான, தொழிலாளர் துறை அமைச்சின் பத்திரமாகவே நான் அன்று பத்திரத்தை முன்வைத்தேன் அப்போது அமைச்சரவை அதை ஏற்க வேண்டியிருந்தது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் குறைபாடுகள் இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது நமது நாட்டு காப்பீட்டு சட்டங்களின்படி குறிப்பிட்ட வயதுக்கு மேல் காப்பீடு வழங்க முடியாது என ட்ட வல்லுனர்கள் கூறினார்கள். பல விளக்கங்களுக்குப் பிறகு, அக்ரஹாரவுக்காக அந்த காப்பீட்டுச் சட்டத்தை மாற்றினார்கள்.
அதைச் செயல்படுத்தும் முயற்சியின் போது, ஏதோ தவறான வழியில் மக்களிடம் முன்வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. ஆட்சிக்கும் உங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்தை சரியாக ஏற்படுத்த முடியாததால் அந்த இடைவெளி இன்னும் உள்ளது. அக்ரஹாரவில் உள்ள குறைபாடுகள் மற்றும் முந்தைய குழுவுக்கு அக்ரஹார இல்லாத சூழ்நிலையை மாற்றுவோம். அது முடியும். இதை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உங்களுக்காக எப்போதும் எழுப்பப்பட்ட குரலை நாங்கள் மறக்கவில்லை. நமது நாட்டின் ஓய்வு பெற்ற தலைமுறையினர் தங்கள் ஓய்வூதிய ஆண்டுகளை மிகவும் நம்பிக்கையோடு அர்ப்பணிக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்நிகழ்வில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் அசோக உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.