அறிமுகம்
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு என்ற பெயரினைக் கொண்ட அரசாங்க சேவையின் மஹகெதர இனுள் தனிச் சிறப்பு வாய்ந்ததாக எடுத்துக் காட்டும் பணிகளை நிறைவேற்றும் பிரிவாக விளங்கும் உள்ளக நிர்வாகத்திடம் அமைச்சின் அலுவலர்களுக்கு மற்றும் பணியாட்தொகுதியினருக்கு வசதி வாய்ப்புக்களை வழங்குகின்ற வகிபாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு அவ் அந்த பிரிவுகளுக்கிடையில் சிறந்த தொடர்பினை கட்டியெழுப்புவதுடன் அவர்களின் பணியாட்தொகுதியினருக்கு அவசியப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறுவன வளாகத்தின் சிறப்பான பராமரிப்பினையும் ஏற்படுத்தி அமைச்சின் மூலம் பொதுமக்களுக்கு மற்றும் சேவைகளை எதிர்பார்த்து வருகை தரும் தரப்பினர்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் உத்துழைப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கு முடியுமான சூழலினைத் தயார்படுத்துதல் இப் பிரிவின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது.
அமைச்சுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் வழிகாட்டலுடன் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெறும் தலைமைத்துவத்தின் மீது மேலதிகச் செயலாளர் ஒருவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்படுத்தப்படும் உள்ளக நிர்வாகப் பிரிவிற்கு உரிய கடமைகளை நிறைவேற்ற மிகச் சிறந்த அனுபவம் மற்றும் அறிவினைக் கொண்ட சிரேஷ்ட அலுவலர்கள் மற்றும் பணியாட்தொகுதியினரை உள்ளடக்கியுள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் இன்றைய தினம் இந்த அமைச்சினுள் ஏற்பட்டுள்ள மனப்பாங்கு ரீதியான மாற்றங்கள் அரச சேவைக்கான எடுத்துக் காட்டினை வழங்குவதற்கு முற்பட்டுள்ளது.
தொலைநோக்கு
"இலங்கையில் அரச துறையில் முன்மாதிரியான, அதி சிறந்த நிர்வாக அலகாக இருத்தல்"
பணிக்கூற்று
"அமைச்சின் அனைத்து செயற்பாடுகளையும் உயர்ந்த தரத்தில் முன்னெடுப்பதற்குத் தேவையான பணியாட்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆகக் கூடிய அளவிலும் உற்பத்தித்திறன் மிக்க வகையிலும் வழங்குவதன் மூலமும், அதற்குத் தேவையான இணைப்புப் பணிகள், நெறிப்படுத்தல் மற்றும் நிர்வாகம் என்பவற்றைச் சிறந்த முறையில் முன்னெடுப்பதன் மூலமும் நிர்வாகப் பிரிவின் சேவை தரமான முறையில் வழங்கப்படுகிறது என்பதற்கு வகைப்பொறுப்புக் கூறல்"
நோக்கங்கள்
- அமைச்சின் தரத்தை மேம்படுத்தக்கூடிய பௌதீகச் சூழலொன்றினை உருவாக்குதல் மற்றும் பேணுதல்.
- அமைச்சுடன் தொடர்புடைய நோக்கங்களுக்கும் பணிகளுக்கும் பொருத்தமான உயர்ந்த, மிகச் சிறந்த பணியாட்தொகுதியொன்றினை நடாத்துதல்.
- பயன்பாட்டுச் சேவைகளை ( பாதுகாப்பு, துப்புரவேற்பாடு) தொடர்ச்சியாகவும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் வழங்குதல் மற்றும் பேணுதல்.
- அமைச்சின் உட்கட்டமைப்பு வசதிகளை ( போக்குவரத்து, மின்சாரம். நீர்வழங்கல், தொலைபேசி) வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மிக்கதாக வழங்குதல், பராமரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
- நிறுவனத்துடன் உயர்ந்த வகையில் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளல் மற்றும் பேணுதல்.
- பணியாட்தொகுதியினரின் நலனோம்பலை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருதல்.
- அமைச்சின் ஒட்டுமொத்த நிர்வாகம், நெறிப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் என்பனவற்றினை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருதல்.
பணிகள்
- அங்கீகரிக்கப்பட்ட பணியாட்தொகுதியினரை நாளதுவரைப்படுத்தல்.
- அமைச்சின் ஒட்டுமொத்த பணியாட்தொகுதியினரையும் நியமனம் செய்தல், பதவியுயர்த்துதல், இடமாற்றங்கள் செய்தல் உட்பட சகல நிறுவன நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
- புதிய பதவிகளை ஏற்படுத்துதல்.
- பயன்பாட்டுச் சேவைகள் ( பாதுகாப்பு, துப்புரவேற்பாடு) பெற்றுக் கொள்வதற்காக அவசியப்படும் கேள்விப் பத்திரங்கள் மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளை கண்காணித்தல்.
- அமைச்சின் உட்கட்டமைப்பு வசதிகள் ( கட்டிடங்கள், நீர் வழங்கல், மின்சாரம், தொலைபேசி) வழங்குவதற்கு உரிய மதிப்பீடுகளைத் தயாரித்தல், கேள்வி மனுக் கோரல்கள், வழங்கல்கள், பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் செலவினைக் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
- அமைச்சின் அனைத்து வாகனங்களையும் பதிவு செய்தல், இணைத்துக் கொள்ளல், காப்புறுதி, பராமரிப்பு, எரிபொருள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் குழு ரீதியாக வாகனங்களை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- கௌரவ அமைச்சர்களின் தற்காலிக பணியாட்தொகுதியினர் மற்றும் ஆலோசகர்களை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- பாராளுமன்ற செயற்குழு, பொதுமனுக் குழு, மனித உரிமைகள், அரசியல் பழிவாங்கல்கள் போன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.
- தபாலினை முறைமை சார்ந்த வகையில் பேணிச் செல்லல்.
- பதவி நிலை அலுவலர்களின் கூட்டங்களை நடாத்துதல், நடாத்திச் செல்லல் மற்றும் கேட்போர் கூடங்களை நிர்வாகிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- பதிவேற்பறையினை பேணிச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- அமைச்சின் விசாரணைக் கருமபீடம் மற்றும் தொலைபேசி பரிமாற்றங்களை முறையாக பேணிச் செல்லல்.
- மொழிபெயர்ப்பிற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திரு. ஜே.எம்.ஜே.கே. ஜயசுந்தர மேலதிகச் செயலாளர் (உள்ளக நிர்வாகம்)
|
|||||||||
திரு. சீ. பி. யூ. ஹெட்டியாரச்சி சிரேஷ்ட உதவிச் செயலாளர் (உள்ளக நிர்வாகம்)
|
|||||||||
உதவிச் செயலாளர்
திரு. என்.டி.டி. பிரதீப உதவிச் செயலாளர்(பதில் கடமை) (நிர்வாகம்)
|
திரு. என்.டி.டி. பிரதீப உதவிச் செயலாளர் (தாபன)
|
||||||||||||||||||
சட்ட அலுவலர் ஊடகம் பிரிவு
செல்வி. பீ.ஈ.எம்.டீ.கே. பலிபான சட்ட அலுவலர்
|
திரு. ஆர்.எஸ்.ஆர். ரணவக உதவிப் பணிப்பாளர் - ஊடகம்
|
||||||||||||||||||
நிர்வாக அலுவலர்
திருமதி. எம்.டி.பி.எஸ்.ஆர். பதிரன நிர்வாக அலுவலர் (நிர்வாகம்)
|
வெற்றிடம் நிர்வாக அலுவலர் (தாபன)
|
||||||||||||||||||
கிளைத் தலைவர் திருமதி. ஷாந்தி வீரசிங்க
|
|||||||