நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை வள அபிவிருத்திக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தவிசாளர்களது விஷேட கலந்துரையாடலொன்று பிரதமர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. தினேஷ் குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் 16.11.2023 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கால்நடை வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஆகியோர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தவிசாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.