இலங்கை திட்டமிடல் சேவையின் உத்தியோகத்தர்கள் சகலரினதும் நிர்வாக நடவடிக்கைகள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் திட்டமிடல் சேவைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின், 1985 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிய 345/40 இலக்கத்தையுடைய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை திட்டமிடல் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய உருவாக்கப்பட்ட இலங்கை திட்டமிடல் சேவையானது நாடு தழுவிய சேவைகளில் ஒன்றாகும்.
இலங்கையினுள் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக்க் கொண்டு அதற்குரிய நிகழ்ச்சித்திட்டங்கள் / கருத்திட்டங்களை திட்டமிடல்,அமுல்நடாத்தல்,செயற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வளங்களின் பயன்பாடு, செயற்படுத்துதல் மேலும் தேசிய மற்றும் பிரதேச பொருளாதாரம் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைளினை மேற்கொள்ளல் இச்சேவையினுள் உற்படும் தொழிற்பாடுகளாகும்.
பிரதான நடவடிக்கைகள்
- ஆட்சேர்ப்பு செய்தல்
- சேவையினை நிரந்தரமாக்குதல்
- பதவியுயர்வுகளை பெற்றுக்கொடுத்தல்
- இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்தல்
- வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துதல்
- சேவையினை நீடித்தல் மற்றும் ஓய்வு பெறச்செய்தல்
தொடர்பு விபரங்கள்
திருமதி. யு.பி.ஏ.டி.டி. கருநாநாயக்க பணிப்பாளர்
|
||||||||||
திட்டமிடல் சேவை சபை
|
|||||||