திரு. கே.டி.என். ரஞ்சித் அசோக
செயலாளர்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
தொலைபேசி | : | +94 11 2695738 |
தொலைநகல் | : | +94 11 2695279 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் செய்தி
மனித வளத்தை திறம்பட நிர்வகித்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் அதற்குத் தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்ததாகவும் மாற்றுவது எமது அமைச்சின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். நாட்டில் ஏற்பட்ட COVID-19 தொற்றுநோய் நிலைமை மற்றும் இன்னும் பல காரணங்களினால் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் வினைத்திறன் மற்றும் பயனுறுதித் தன்மை சரிவு கண்டுள்ள பின்னணியில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தினால் எதிர்பார்க்கப்படும் இலக்குகளையும் திட்டங்களையும் அடைவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பது முக்கிய விடயமாகும்.
இந்த ஆண்டில் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்களின் படி, அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இடம்பெறுகிறது. மேலும் நாட்டுக்கு அன்னியச் செலாவணியைப் பெறுவதற்கு சேவை மூப்புநிலைக்கும் ஓய்வூதியத்திற்கும் பாதிப்பில்லாதவாறு அரச உத்தியோகத்தர்களுக்கு 5 வருட சம்பளமற்ற உள்நாட்டு / வெளிநாட்டு விடுமுறைகளை வழங்குதல் மற்றும் அதனூடாக நிறுவனங்களின் பணியாட்தொகுதியினரை ஓரளவு மட்டுப்படுத்தி அவர்களிடமிருந்து அதிகபட்ச வேலைகளை நிறைவேற்றிக் கொள்ளல் மற்றும் அவர்களிடமிருந்து அதிக பலனைப் பெற நடவடிக்கை எடுப்பது ஒரு நேர்மறையான செயற்பாடாகும். இந்த தொழில்முறை திறன்களால் அரச சேவைக்கு வெளியே அமைந்துள்ள சேவைகளுக்குப் பிரவேசித்து தமது வருமான நிலையை மேம்படுத்திக் கொள்வதும், புதிய அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவதும், அவர்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வாகவும் மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்கான அவகாசமும் வழங்கப்படுகிறது. அத்தோடு, விதவைகள் அநாதைகள் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு விரைவாகவும், தொடர்ச்சியாகவும் ஓய்வூதிய நலன்களை வழங்க நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் இருந்தாலும் அதற்கான முன்னுரிமையை அரசு வழங்கியுள்ளது. அவ்வாறே, அரச சேவையின் ஆரம்ப நிலை தரங்களில் மேற்கொள்ளப்படும் புதிய ஆட்சேர்ப்புக்களை மட்டுப்படுத்தி, பல்நோக்குத் திணைக்களத்தின் ஊழியர்களை அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்கு நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு திருப்திகரமான அரச சேவையை உறுதி செய்ய, சமத்துவம், சீரான தன்மை, பயனுறுதி, செயல்திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தொழில்முறை அபிவிருத்தி உட்பட நீண்டகால மனித வளத் திட்டங்களைத் தயாரிப்பதற்கான பணிகளைத் தொடங்குதல், அதற்காக Online Platform இனைத் தயாரிப்பதும் இந்த அமைச்சினால் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இலக்குகளில் மிக முக்கியமானதாகும். அவ்வாறே, அடிக்கடி அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வழிகாட்டல்களுக்கு உரிய கொள்கை வகுப்புகள், சேவைப் பிரமாணங்கள், ஆட்சேர்ப்புக்கள், சுற்றறிக்கைகளை வெளியிடல் மற்றும் தேவைப்படும் போது திருத்தங்களைச் செய்வதும் ஒரு நிலையான நேர்மறையான செயலாக அமைந்துள்ளது.
குறிப்பாக, அரச ஊழியர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கினை நவீன உலகப் போக்கிற்கு ஏற்ப வடிவமைக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் காணப்படுகிறது. அத்துடன் நின்றுவிடாமல், அரச சேவையை விரிவான மறுசீரமைப்புச் செயல்முறைக்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு, அது "Whole of Government" என்ற கோட்பாட்டின் படி வலையமைப்புச் செய்யப்பட்டு, செயல்திறனை அதிகரிக்கும் நோக்குடன், பணிகளை நிறைவேற்றுகின்ற முழு ஆக்கபூர்வமான அரச சேவையை உருவாக்கவும், பேணிச் செல்லவும் முன்னெடுக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் உங்கள் அனைவரினது ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
இந்த செயல்முறைகளுக்கும் புதியதொரு இலக்காக, அபிவிருத்தியடைந்த பல நாடுகளைப் போல தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பல காலாவதியான முறைமைகளுக்குப் பதிலாக பொது நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்க முடிந்தால் (Digitalize Public Administration) அது எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும். இது பெரும் சவாலாக உள்ளது. அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்கள், இந்த அமைச்சுக்குப் பொறுப்பான கெளரவ பிரதமர் மற்றும் கெளரவ இராஜாங்க அமைச்சர்கள் இருவரினதும் தலைமைத்துவத்தின் கீழ் தேவைப்படும் ஒத்துழைப்பைப் பெற்று இந்த இலக்குகளை அடைய முடியம் என்பது எனது அதீத நம்பிக்கை!