உள் விவகார அலகின்
உள் விவகார அலகின் முக்கிய நோக்கங்கள்
සஒவ்வொரு நிறுவனத்தினதும் உள் விவகார அலகின் மூலம் பின்வரும் நோக்கங்கள் அடையப்படல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது:
I. நிறுவனத்தின் ஊழலை தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாசாரத்தை வளர்த்தலும்.
II. நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் நிறுவன நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல்.
III. நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகையை மேம்படுத்தல்.
IV. தவறான நடத்தைகளை அறிக்கையிடுவதை ஊக்குவித்தல், விசாரணையாளர்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் தகவல்களை வெளியிடுவோரை பாதுகாத்தல் மற்றும் இரகசியத்தன்மையினை கொண்டுச் செல்வதற்காக பாதுகாப்பான மற்றும் அனுகக்கூடிய வழிமுறைகளை தயார் செய்தல்.
V. சட்டத்தினை செயற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்தல்.
உள் விவகார அலகின் பொறுப்புக்கள் மற்றும் தொழிற்பாடுகள்
நிறுவன ஒருமைப்பாட்டின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டு செயலூக்கமான, தெளிவான மற்றும் மையப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை உறுதி செய்ய பின்வரும் குறிப்பிட்ட பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் உள் விவகார அலகிடம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
I. நிறுவனத்திற்குள் காணப்படும் பொறிமுறைசார் தடைகளை (systemic bottlenecks) அடையாளம் காண்பதற்காக தற்போதைய நடபடிமுறை மற்றும் சுற்றறிக்கைகளை பரீட்சித்தல் மற்றும் செயற்பாட்டு செயற்திறனை மேம்படுவத்துவதற்காக அவற்றை எளிமைப்படுத்தல்.
II. ஊழல் அவதான மதிப்பீடு (Corruption Risk Assessment) செய்வதினூடாக நிறுவனத்திற்குள் ஊழலுக்கு மற்றும் ஒழுக்க கேடான நடத்தைகளுக்கு ஆளாகக்கூடிய துறைகளை அடையாளம் காணல் மற்றும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
III. நிறுவனத்தின் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்ட நிச்சியமான ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் உத்திகள் உள்ளடங்கலாக நிறுவன செயற்பாட்டு திட்டத்தினை தயார் செய்து செயற்படுத்தல்.
IV. தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்திட்டத்துடன் நிறுவன ரீதியான கொள்கைகள் மற்றும் பயன்பாட்டினை ஒழுங்குபடுத்தி தேசிய ஊழல் எதிர்ப்பு உத்திகளுக்கு இணங்குதல்
V. த2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உட்பட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சட்டங்களுடன் நிறுவனத்தின் இணக்க மதிப்பீட்டிற்காக இணக்க மதிப்பீட்டினை (Compliance Assessments) செய்தல் மற்றும் மேம்படுத்த வேண்டிய முறைகளை அடையாளம் காணல்.
VI. அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சொத்து பிரகடன தேவைகள் இயைபாகுவதை உறுதிப்படுத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் கட்டளைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு அமைவாக தொடர்புகளுக்கிடையில் மோதல் முகாமைத்துவம் செய்தல்.
VII. தாபனத்திற்குள் ஊழல் மற்றும் ஒழுக்கமற்ற நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான பாதுகாப்பான பொறிமுறையை ஸ்தாபித்தல், அத்தகைய அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் உரிய உத்தியோகத்தர்கள் அல்லது அலகினூடாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி விசாரணை செய்யும் உரிய திறத்தவர்களிடம் அடிக்கடி இற்றைப்படுத்தல்களை வழங்குதல். தேவையானபடி ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி விசாரணைக்கான உரிய விடயங்கள், கண்டுபிடிப்புக்கள் அல்லது தகவல்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தல்.
VIII. நிறுவனத்தினூடாக வழங்கப்படும் விபரங்களை விளக்கும் பிரஜைகளின் பிரகடமொன்றை அபிவிருத்தி செய்து வெளியிடல்.
IX. அரசாங்க உத்தியோகத்தர்களினால் பின்பற்ற வேண்டிய தரநிர்ணய ஒழுக்ககோவை உட்பட ஒழுக்கக் கட்டுப்பாட்டினை மேம்படுத்தும் கொள்கைகளை ஸ்தாபித்தல் மற்றும் செயற்படுத்தல்.
X. ஊழல் எதிர் மூலதத்துவங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதற்கான ஊக்குவிப்பாக அலுவலக பணியாட்தொகுதியை பயிற்சிவித்தல் மற்றும் அறிவுறுத்தல் உட்பட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
XI. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு ஒருமைப்பாட்டுடனான மதிப்பீட்டு செயன்முறைக்காக நிறுவனம் பங்குபற்றும் மற்றும் அதனுடன் சட்டகத்தின் மூலம் இணங்கியொழுகும் என உறுதிப்படுத்தி, தேசிய ஊழல் எதிர்ப்பு ஒருமைப்பாட்டு (National Anti-Corruption Integrity Assessment) மதிப்பீட்டிற்கான நிறுவன ரீதியான மையமாக செயற்படல்.
XII. அலகின் கடமைகளை செயற்படுத்தும் போது தொடச்சியான வழிகாட்டல் மற்றும் உதவியை பெற்றுக் கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் தொடர்புகளை பேணுதல்.
XIII. உள் விவகார அலகின் செயற்பாடுகள், ஊழல் எதிர்ப்பு ஆரம்பங்களுக்கான முன்னேற்றம், முகம்கொடுக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்காக பரிந்துரைகளை சுருக்கி, காலத்திற்கு தகுந்த வகையில் மற்றும் வருடாந்த அறிக்கைகளை தயாரித்தல்.
XIV. පුதனிப்பட்ட பிரிவிலுள்ள திறத்தவர்களின் பங்குபற்றலுடன் ஒருமைப்பாட்டினை விருத்தி செய்வதற்கான திட்டங்களை தயார் செய்தல் மற்றும் செயற்படுத்தல்.