அறிமுகம்
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் திட்டமிடல் பணிகளுக்கு உட்படும் செயற்பாடுளை திட்டமிடல், வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்களைத் தயாரித்தல், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்கள், திட்டமிடல்கள், அமுல்நடாத்தல், செயற்படுத்துதல், மதிப்பீடு செய்தலைப் போன்றே அதனுடன் தொடர்பான சேவைகளை நிறைவேற்றுவதற்காக திட்டமிடல் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
தொலைநோக்கு
"மனித வளத்தை திறன் வாய்ந்ததாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தமான, வினைத்திறனானதும் தனித்துவமானதுமான அரச சேவையை உறுதிப்படுத்தல்."
பணிக்கூற்று
"அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டமிடல் விடயப் பரப்பிற்குரியதான பணிகளையும் செயற்பாடுகளையும் சிறப்பாக திட்டமிடல், அமுல்நடாத்தல், செயற்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்."
" அமைச்சின் நோக்கங்களை நிறைவேற்ற தேவையான மூலோபாயங்களையும் கொள்கைகளையும் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல்."
நோக்கங்கள்
- “தேசத்திற்கான சிறந்ததோர் அரச சேவை” ஏற்படுத்திக் கொடுப்பதற்கான இலக்கினை அடைய உசிதமான திட்டமிடல் வழிகாட்டல்கள் மற்றும் மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தல்.”.
- அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இணக்கமான முறையில் அமைச்சின் மூலோபாயத் திட்டங்களைத் தயாரித்தல்.
பணிகள்
- அமைச்சின் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் செயலாற்றுகை அறிக்கையைத் தயாரித்தல்.
- அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் தொடர்பான நடவடிக்கைகள்.
- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மறுசீரமைப்புத் திட்டம், முன்னேற்ற அறிக்கைகள், வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த மதிப்பீடுகளை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்தல் மற்றும் அவற்றை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- அமைச்சுக்குத் தேவையான தரவுத் தளத்தைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல்.
- அமைச்சின் மற்றைய பிரிவுகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல்.
- மேலதிகச் செயலாளரின் ( மனித வள அபிவிருத்தி) கீழ் மேற்பார்வை செய்யப்படும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவசியப்படும் வகையிலும் செயலாளரின் ஆலோசனையின் பேரிலும் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளல்.
- அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வெளிநாட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் தொடர் நடவடிக்கை எடுத்தல்.
நிறுவனக் கட்டமைப்பு

தொடர்பாடல் தகவல்கள்
 பணிப்பாளர் ( திட்டமிடல்) கடமையை ஆற்றுதல்
|
|
திருமதி. எஸ்.கே. தயானந்த பிரதி / உதவிப் பணிப்பாளர் ( திட்டமிடல்)
|
திரு. எஸ்.எம்.பி.கே. சேனாநாயக பிரதி / உதவிப் பணிப்பாளர் ( திட்டமிடல்)
|