சிவில் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கல், உள்ளூராட்சி சீர்திருத்தங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துவது குறித்து ஐநா மற்றும் பொதுநிர்வாக அமைச்சருக்கு இடையே பரந்த அளவிலான கலந்துரையாடல்
• CRVS அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்
• தேர்தல் ஆணைக்குழுவின் சீர்திருத்தப் பணிகளுக்கு UNDP ஆதரவு
• எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள பிணக்குகளைத் தீர்ப்பதற்கு 4 துறைசார் மன்றங்கள்
• பிரேச செயலகங்களுக்காக 336 கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் அடங்கிய உள்கட்டமைப்பு வசதிகள்
இலங்கையின் சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரங்கள் (CRVS) முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ‘OneRegistry’ கூட்டுத் திட்டத்தை விரைவுபடுத்துதல், பிரதேச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் தேர்தல் சீர்திருத்த செயல்முறையை விரைவுபடுத்துதல் ஆகியன தொடர்பான விசேட இருதரப்பு கலந்துரையாடலொன்று இன்று (18) நடைபெற்றது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (UN Resident Coordinator) மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இடையிலான இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
CRVS டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அமைச்சரவை அனுமதியை விரைவுபடுத்துதல்
இங்கு கருத்துத் தெரிவித்த ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், UNDP மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து நடத்தும் இந்த ‘ஒன்றிணைந்த சிவில் பதிவு’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். முறைமை வரைபடமாக்கல் (System mapping), திறன் மேம்பாடு மற்றும் ஆரம்பக்கட்ட கணக்கெடுப்புகள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. குறிப்பாக பதிவாளர் நாயகத்திற்கு ஆதரவாக UNDP இனால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘நடமாடும் கிளினிக்’ (mobile clinics) திட்டம், நியூயோர்க்கிலுள்ள ஐநா தலைமையகத்தில் கூட பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தை 2027 நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்தார்.
அரசு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு
அரசு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் கீழ், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின் போது அரசு உத்தியோகத்தர்களிடையே மனப்பான்மை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ‘One Chip Fellowship’ திட்டத்தின் கீழ் பதிவாளர் மட்டத்திலிருந்து உயர்மட்ட நிர்வாகம் வரை பயிற்சி நடவடிக்கைகள் வழங்கப்பட்டு வருவதாக பதிவாளர் நாயகம் திருமதி எஸ். ஜலதீபன் இங்கு குறிப்பிட்டார். இதன் முதலாம் காலாண்டுக்கான பாடநெறிகள் நிறைவடைந்துள்ளதுடன், இரண்டாம் காலாண்டுப் பணிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மேலும், டிஜிட்டல் தளங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பின் கீழ் 336 பிரதேச செயலகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், உலக சுகாதார அமைப்பு (WHO) இதற்குத் தேவையான அச்சுப்பொறிகளை (Printers) வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
பிரதேச நிர்வாகம், பேரிடர் மற்றும் கழிவு மேலாண்மை
மீட்புச் செயல்முறையிலும் நிவாரணப் பங்கீட்டிலும் பிரதேச செயலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவதற்காக பிரதேச நிர்வாகத்தை அதிகாரப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஐநாவின் ஆதரவுடனான மீட்புக் கட்டமைப்பின் கீழ், பிரதேச மட்டத்திலான கழிவு மேலாண்மைக்கான தேசிய உத்தியோகபூர்வ மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது. இதன்போது, கடுவெல மாநகர சபை தனது சொந்த வளங்கள் மற்றும் UNDP இன் தொழில்நுட்ப உதவியுடன் இயற்கை பேரிடர்களைத் தாங்கக்கூடிய வகையில் ‘கழிவுகளிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் மையம்’ ஒன்றை நிறுவியமை ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு நிறைவடைந்த CDLG திட்டத்தின் கீழ், வரி வசூலிப்பு மற்றும் பொது மக்கள் குறைகளுக்காக டிஜிட்டல் தீர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதமரின் அலுவலகத்தினால் நாடு பூராவும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படும் செயலிகளுக்காக அதிக நிலையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்க UNDP தயாராக உள்ளது.
பல துறைகளில் ஏற்படும் பிணக்குகளைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான ஒரு பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளமை ஒரு தனித்துவமான சாதனையாக இங்கு கலந்துரையாடப்பட்டது. கடந்த அரசாங்கம் வழங்கிய கொள்கை ரீதியான அனுமதியின் அடிப்படையில் புதிய அரசாங்கமும் இதனை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதுடன், இதன் கீழ் எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளுக்காக விசேட துறைசார் மன்றங்கள் (Sectoral Forums) நிறுவப்படவுள்ளன.
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஆதரவு
UNDP நிறுவனம் முதன்முறையாக தேர்தல் ஆணைக்குழுவின் சீர்திருத்தப் பணிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. தேர்தல் வாக்கு எண்ணும் செயல்முறையை முறைப்படுத்துவதற்கும், அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த குழுவின் முதலாவது கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண