நிர்வாக சேவைக்கு மற்றும் திட்டமிடல் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது....
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் இலக்கம் 2240 கொண்ட வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளபடி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாகச் சேவையின் 111 தரத்திற்கு இணைத்துக் கொள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மற்றும் நேர்முகப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற 41 பேருக்கு நியமன பத்திர கையளிப்பு கடந்த நாளில் (15ஆம் நாள்) பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதனோடு இணைந்த வகையில் 2017 வருடம் வெளியிடப்பட்ட 2039 கொண்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் நடைபெற்ற இலங்கை திட்டமிடல் சேவையின் 111ஆம் தரத்திற்கு இணைத்து கொள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சமனான புள்ளிகளைக் பெற்றுக் கொண்டு சித்தியடைந்த உத்தியோகத்தர்கள் 7 பேர் திட்டமிடல் சேவைக்காக இணைத்துக் கொண்டு நியமன பத்திரங்களையும் வழங்கலும் பிரதமரின் கைகளினால் நடைபெற்றது.
இவ்வாறு புதிய நியமனங்கள் பெற்ற நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு மற்றும் திட்டமிடல் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு ஒருவார சேவை ஆரம்ப பயிற்சியொன்றை இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்ததுடன், வரும் 22 ஆம் திகதியிலிருந்து வெற்றிடங்கள் காணப்படும் இடங்களுக்கு உரிய உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்விற்கு மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் அரசாங்க அமைச்சர் ஐனக வக்கும்புர, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப யசரத்ன அவர்கள் உட்பட அமைச்சரவையின் உத்தியோகத்தர்களும் இணைந்திருந்தனர்.