"மறுமலர்ச்சி நகரம் " - ஆரம்ப தேசிய நிகழ்ச்சி பதுளையில்.
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ், சமூகத்தின் நாளாந்த தேவைகள் பூர்த்தியாகும், வாழும் சூழலை பாதுகாக்கும் சுற்றாடலை உருவாக்கி எதிர்கால நோக்கத்தினை பாதுகாக்கும் மறுமலர்ச்சி நகரமொன்றை உருவாக்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் வழிநடாத்தப்படும் தொடர்ச்சியான நிகழ்ச்சித்திட்டம், "மறுமலர்ச்சி நகரம்" -2025 உள்ளூராட்சி வாரத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியாக செப்டம்பர் 15 ஆந் தினம் உள்ளூராட்சி தாபனங்கள் 341 இனையும் உள்ளடக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப தேசிய நிகழ்ச்சி பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பீ. ருவன் செனரத் மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார ஆகியோரின் தலைமையில் 15ஆம் நாளன்று இந்நாட்டின் 341 உள்ளூராட்சி தாபனங்களிலும் குறைந்த வருமானத்தையுடைய உள்ளூராட்சி தாபனமான பதுளை மாவட்டத்தின் மீகாகிவுல்ல பிரதேச சபைக்குரிய மீகாகிவுல்ல வார சந்தை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 15 - ஆரம்ப மற்றும் நடமாடும் சேவைத் தினம்
செப்டம்பர் 16 - சுற்றாடல் மற்றும் மரநடுகை தினம் (ஓசோன் படையை பாதுகாக்கும் சர்வதேச தினத்திற்கு இணைந்த வகையில்)
செப்டம்பர் 17 - சுகாதாரம் மற்றும் துப்பரவு தினம் (உலக நோயாளர் பாதுகாப்பு தினத்திற்கு இணைந்த வகையில்)
செப்டம்பர் 18 - வருமான மேம்படுத்தல் தினம்
செப்டம்பர் 19 - இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டிற்காக தினம் (இலக்கிய மாதத்திற்கு இணைந்த வகையில்)
செப்டம்பர் 20 - பொதுப் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டு தினம் (உலக துப்பரவு தினத்திற்கு இணைந்த வகையில்)
செப்டம்பர் 21 - சான்றிதழ் வழங்கல் மற்றும் இறுதி நிகழ்வு
எனும் வகையில் இவ்வாரத்திற்குள் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக சனாதிபதி அலுவலகம், கிளின் ஸ்ரீலங்கா செயற்திட்டம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, இலங்கை பொலிஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபை, மகாவலி அதிகாரசபை, நகர வதிவிட அபிவிருத்தி அதிகாரசபை, வனப் பாதுகாப்பு திணைக்களம், கூட்டாட்சி முகாமைத்துவ அதிகாரசபை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கமநல அபிவிருத்தித் திணைக்களம், இலங்கை காணி அபிவிருத்திச் செய்யும் கூட்டுத்தாபனம், புவிச்சரிதவியல்







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









திரு. எஸ்.ஜீ. விஜயபாண்டு
உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
Productivity
கௌரவ மஹிந்த சமரசிங்க
கௌரவ லசந்த அழகியவண்ண