தென் கொரிய சேமாவுல் அமைப்பு, இலங்கைக்கான நிதியுதவியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தயார்.
தென் கொரிய அரசிற்கு இணைந்த சேமவுல் உன்டொங் அமைப்பு இலங்கையின் கிராம அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக நிதியுதவியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடன்பட்டுள்ளதுடன், சர்வதேச ஒத்துழைப்புடன் அடிப்படை மட்ட முன்னேற்றத்திற்கு தமது அர்ப்பணிப்பினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ் அறிவித்தல் கடந்த (19ஆம்) தினமன்று தென்கொரியாவில் நடைபெற்ற சேமவுல் உன்டொங் சம்மேளனத்தில் செய்யப்பட்டது.
இச் சம்மேளனம் கிராம அபிவிருத்தி தொடர்பான உலக அரச தலைவர்கள், அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஒனறிணைக்கும் சர்வதேச தளமொன்று என்பதுடன், இத்தடவை அதற்காக உலக நாடுகளைச் சேர்ந்த 46 பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சம்மேளனத்திற்கு பங்குபற்றியிருந்தனர்.
தென் கொரியாவில் 1970 தசாப்தத்தில் ஆரம்பமான சாமுவேல் உன்டொங் (saemual Undong) ஊடாக தென் கொரியாவை வறுமையிலிருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியை நோக்கி கொண்டு சென்ற முறை தொடர்பில் வேறு நாடுகளுடன் கருத்துக்கள் மற்றும் அனுபங்களை பகிர்வது இங்கு நடைபெற்றது.
இலங்கையின் கிராம அபிவிருத்தியின் தேவைகள் மற்றும் தற்கால அரசின் எதிர்கால குறிகாட்டிகள் தொடர்பாக 2025 சம்மேளனத்தில் உரையாற்றிய சந்தன அபேரத்ன அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கொரிய சாமுவேல் உன்டொங் நிறுனத்துடனும் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனும் இலங்கையின் அனுபவங்கள் மற்றும் புதிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் சில சந்தர்ப்பங்களுக்கும் பங்குபற்றினார்கள்.
அச்சம்மேளனத்தில் இலங்கைக்காக நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பட்டதுடன், கிராம அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக அதன் நிதியினை பயன்படுத்துவதற்கும், உள்ளூர் மட்டத்தில் சிற்றின மட்ட கிராம அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டது. இவ் நிதியுதவியினை வழங்குவதினால் தற்போது நிறுத்தப்பட்டுள்ள கொரிய நிதியுதவியினை மீண்டும் ஆரம்பமாதல் என்பதாகக் கருதப்படலாம்.
கிராம கட்டமைப்பு நவீனமயமாக்கம், மக்களின் பங்களிப்பு அடிப்படையிலான அபிவிருத்தி முறைமைகள், இளைஞர் மற்றும் பெண்கள் சமூக வலுவூட்டல், பொருளாதார மற்றும் கலாசார கிராம அபிவிருத்தி செயற்திட்டதுடன் நிலைத்திரு அபிவிருத்தி போன்றவையே இத்தடவை சம்மேளனத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்ட பரப்புக்களாகும்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண