அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் மற்றொரு திணைக்களமாக கருதப்படும் தாபனப் பிரிவின் திணைக்களத் தலைவராக கடமையாற்றுவது தாபனப் பணிப்பாளர் நாயகம் ஆவார். தாபனப் பிரிவு ஏழு அலகுகளை உள்ளடக்கி இருப்பதோடு அவ்வலகுகளில் I, II, IV மற்றும் VII போன்ற அலகுகள் தாபனப் பணிப்பாளர் (I) இனதும், III, V, மற்றும் VI என்ற அலகுகள் தாபனப் பணிப்பாளர் (II) இன்கண்காணிப்பின் கீழும் இயங்குகின்றது. இவ்வனைத்து அலகுகளும் உதவி தாபனப் பணிப்பாளரின் கீழ்க் காணப்படுகின்றது.
அரச ஊழியர்கள் தொடர்பாக மற்றும் அரச சேவையின் ஸ்தீரத்தன்மையனைச் சான்றுப்படுத்தும் வகையில் அதற்கேற்ற கொள்கை தொகுப்பிற்காக அரசாங்கம் ஒத்துழைத்தல், தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளைப் போன்றே அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஏற்பாடுகளை பொருள்கோடல் செய்வது தாபனப் பிரிவின் மூலம் நடாத்தப்படும்.
தொலைநோக்கு
"முறையான கொள்கையின் மூலம் தரமிக்க அரச சேவை"
செயற்பணி
"வினைத்திறன் மற்றும் திருப்திகரமான அரச சேவையினைக் கட்டியெழுப்புவதற்கான நியாயத்தன்மை, சரிநிகர்த்தன்மை மற்றும் வினைத்திறன் மீது விஷேட கவனத்தினைச் செலுத்தி நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் படி கையாளுதல்"
நோக்கம்
- அரச சேவைக்காக எளிய வளர்ச்சி நோக்கு நிலையுடன் அரச முகாமைத்துவ கொள்கையினை மீள்நிர்மாணம் மற்றும் முகாமைத்துவம்செய்தல்.
- அரச சேவையின் நல்லாட்சிக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அரச நிர்வாக பொறிமுறையினை உருவாக்குதல்.
நிறுவனக் கட்டமைப்பு
தாபனப் பணிப்பாளர் நாயகம்
திரு. எச்.ஏ. சந்தன குமாரசிங்க
தொலைபேசி | : | +94 11 2688330 (நீடிப்பு - 300) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- அரச அலுவலர்களுக்கு, அரச அமைச்சுகளுக்கு / திணைக்களங்களுக்கு அரச நிறுவனங்களுக்கு, அரச சேவை தொடர்பில் அக்கறை காட்டுகின்றவர்களுக்கு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு தாபன நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளை வழங்குதல்.
- அரசாங்க நிர்வாக அமைச்சின் விடயப் பரப்புக்குரிய தாபன நடவடிக்கைகளுக்கு உரித்துடைய அமைச்சரவை விஞ்ஞாபனங்களின் வரைவைத் தயாரித்தல் மற்றும் குறித்த அமைச்சரவைத் தீரமானங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை எடுத்தல், அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பான அவதானிப்புக்களை வழங்குதல்.
- நிர்வாக நடவடிக்கைளின் போது அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, திறைசேரி, முகாமைத்துவ சேவைத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பாராளுமன்ற உபகுழுக்கள், மற்றும் ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து செயலாற்றுதல்.
- தாபன விதிக்கோவை மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை தொடர்பாக அவதானிப்புக்களை வழங்குதல்.
- அரசாங்க சேவைக்கு உரித்துடைய கொள்கைகளைத் தயாரித்தல்.
- அக்கொள்கைகளைத் தயாரிக்கும்போது அலுவலர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்.
- தாபன நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய அடிப்படையில் கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றுக்குப் பொருள்கோடல்.
தாபனப் பணிப்பாளர் I
திரு. ஆர்.பீ.கே.என். அலகல்ல
தொலைபேசி | : | +94 11 2693374 (நீடிப்பு - 302) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் அரசாங்க சேவைக்கு உரித்துடைய கொள்கைகளைத் தயாரித்தல்.
- அக்கொள்கைகளைத் தயாரிக்கும்போது அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குதல்.
- தாபனப் பிரிவின் அரசாங்க நிர்வாக நடவடிக்கைகள்.
- பணியாட்தொகுதியின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்று பிரிவை முகாமைத்துவப்படுத்துவதற்காகத் தாபனப் பணிப்பாளர் நாயகத்துக்கு ஒத்துழைப்பினை நல்குதல்.
- 1, 2, 4 மற்றும் 7 ஆம் அலகுகளின் கடமை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.
தாபனப் பணிப்பாளர் II
திருமதி. எச்.எம்.டீ.பீ. ஹேரத்
தொலைபேசி | : | +94 11 2682521 (நீடிப்பு - 301) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- தாபன நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய அடிப்படையில் கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றிற்குப் பொருள்கோடல்.
- அக்கொள்கைகளைத் தயாரிக்கும்போது அலுவலர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்.
- பணியாட்தொகுதியின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்று பிரிவை முகாமைத்துவப்படுத்துவதற்காகத் தாபனப் பணிப்பாளர் நாயகத்துக்கு ஒத்துழைப்பினை நல்குதல்.
- 3, 5, மற்றும் 6 ஆம் அலகுகளின் கடமை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.
உதவித் தாபனப் பணிப்பாளர் (அலகு I)
செல்வி. எஸ்.ஏ. நில்வக்க
தொலைபேசி | : | +94 11 2662340 (நீடிப்பு - 284) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- தாபனப் பிரிவின் நிர்வாக நடவடிக்கைகள்.
- அலகுக்குரித்தாகாத அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்காக அவதானிக்க வேண்டியவைகளைத் தயாரித்தல்.
- விடுமுறை ஓய்வு விடுதிகளை கண்காணித்தல் மற்றும் ஒதுக்கிக் கொடுத்தல்.
- ஆய்வுப் பயிற்சியும் அபிவிருத்தி நடவடிக்கைகளும்.
- தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்கள்.
- தாபன விதிக்கோவையின் திருத்தங்களுக்கான ஒருங்கிணைப்புக்கள்.
- மூடப்பட்ட திணைக்களங்கள் தொடர்பான நடவடிக்கைகள்.
- அரசாங்க சேவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் தரவுகளைச் சேகரித்தல்.
- உற்பத்தித்திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல்.
உதவித் தாபனப் பணிப்பாளர் (அலகு II)
செல்வி. பி.எம்.ஜே.டபிள்யூ. பெர்னான்டோ
தொலைபேசி | : | +94 11 2693886 (நீடிப்பு - 305) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்/ பதவியுயர்வளிக்கும் கொள்கைகள்.
- ஆட்சேர்ப்பு நடைமுறை/ பதவியுயர்த்தப்படும் நடைமுறை/ திருத்தியமைக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை/ தொழில்நுட்ப சேவை மற்றும் விஞ்ஞான சேவைக்கு இணைத்துக்கொள்ளும் நடைமுறைக்கான சிபாரிசுகளைப் பெற்றுக்கொடுத்தல்.
- பதவிகள் ஓய்வூதிய பதவியாக அட்டவணைப்படுத்தப்படுள்ளது தொடர்பான விசாரணைகள்.
- அரசகரும மொழிக் கொள்கையினை செயற்படுத்துதல்.
- சான்றிதழ்களை சமப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள்.
- 1962- v கூட்டத்தொடர் அறிக்கைக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான நடவடிக்கைகள்.
உதவித் தாபனப் பணிப்பாளர் (அலகு III)
திரு.பி.ஏ. விக்கிரமரத்ன
தொலைபேசி | : | +94 11 2692159 (நீடிப்பு - 307) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- அரசாங்க அலுவலர்களின் சாதாரண நடத்தைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள்.
- போலி ஆவணங்களை நடாத்திச் செல்லல்.
- ஒழுக்காற்று விசாரணை அலுவலர்களின் ஆவணங்களை நடாத்திச் செல்லல்.
- அரசாங்க அலுவலர்கள் அரச சேவையினை விட்டு வெளி சேவைகளில் ஈடுபடுதல் தொடர்பான கொள்கைகள்.
- ஓய்வு பெறச்செய்வது தொடர்பான சிக்கல்கள்.
- சேவையை விட்டு விலகுதல்.
- சேவையிலிருந்து இராஜினாமாச் செய்தல்.
- சேவை நீடிப்பு தொடர்பிலான சிக்கல்கள்.
- மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவு.
- அரசியல் உரிமைகள்.
- தொழில் பிணக்குகள் (அரசியல் பழிவாங்கல்கள்).
உதவித் தாபனப் பணிப்பாளர் (அலகு IV)
திருமதி. ஏ.கே.டி.ஈ. குணசேன
தொலைபேசி | : | +94 11 2696478 (நீடிப்பு - 309) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- சேவைப் பிரமாணக் குறிப்புக்களைத் தயாரித்தல், திருத்தியமைத்தல் மற்றும் பொருள்கோடல்.
- கௌரவ அமைச்சரவை அமைச்சர்களின் பணியாட்தொகுதியினர் தொடர்பான நடவடிக்கைகள்.
- செயலாளர்களின் பிரமாணக் குறிப்புகள்.
- அமைய / பதிலீட்டு அலுவலர்களை நிரந்தரமாக்குதல் தொடர்பான கொள்கைகளும் அவை சார்ந்த சிக்கல்களும்.
- பயிற்சி பெற்ற தொழிலாளர் தரங்கள் (V கூட்டத்தொடர் அறிக்கை) தொடர்பான நடவடிக்கைகள்.
- ஓய்வுபெற்றவர்களை மீண்டும் சேவையில் அமர்த்துதல்.
- இலங்கை நிர்வாக சேவையில் இல்லாத உதவிச் செயலாளர்கள்.
உதவித் தாபனப் பணிப்பாளர் (அலகு V)
திரு. எச்.ஆர். குணதிலக்க
தொலைபேசி | : | +94 11 2673330 (நீடிப்பு - 311) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- சம்பளக் கொள்கைகளைத் தயாரித்தல்.
- பொதுச் சம்பள மறுசீரமைப்பு.
- சம்பளக் கட்டமைப்புக்களைத் தயாரித்தல்.
- சம்பள முரண்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள்.
- வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு.
- பதில்கடமை மற்றும் கடமையினை நிறைவேற்றியமைக்கான கொடுப்பனவுகள்.
- வினைத்திறக் காண் தடைத்தாண்டல்.
- நியமனம்/பதவியுயர்வு/முன்தேதியிடல்.
- சேவைமூப்பை நிர்ணயித்தல்.
- குறைந்த சேவை பட்டதாரிகள் தொடர்பான பிரச்சினைகள்.
- சேவையை நிரந்தரப்படுத்தல்/நன்னடத்தைக் காலத்தினைக் கோரல் மற்றும் அது சார்ந்த சிக்கல்கள்.
பிரதிப் தாபனப் பணிப்பாளர் (அலகு VI)
திருமதி எல்.டி .எஸ் .வயி. ஜயசேகர
தொலைபேசி | : | +94 11 2699399 (நீடிப்பு - 315) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- விடுமுறைகள்.
- பிரயாணக் கொடுப்பனவு.
- உத்தியோகபூர்வ வாகனக் கொள்கைகள்.
- புகையிரத அனுசரனைப் பருவச்சீட்டுகள்.
- கடமை நேரங்கள்.
- உடன்படிக்கைகளும் முறிகளும்.
- அக்ரஹார காப்புறுதிக் கொள்கைகள்.
- அரச அலுவலர்களின் கடன் திட்ட முறைகள்.
- அரசாங்க உத்தியோகபூர்வ வாசஸ்தளங்கள் மற்றும் விடுமுறை ஓய்வு விடுதிகள்.
- கடமை தொலைபேசி/ கையடக்கத் தொலைபேசி.
- இடமாற்றக் கொள்கைகள்.
- வைத்தியக் குழுக் கொள்கைகள்.
- தொழிற்சங்கங்களுக்காக விடுவித்தல் தொடர்பான நடவடிக்கைகள்.
- அரசாங்க சேவையின் வெளி பதவிகளுக்காக விடுவித்தல்.
உதவித் தாபனப் பணிப்பாளர் (அலகு VII)
திருமதி எஸ்.டீ. ஜயவீர
தொலைபேசி | : | +94 11 2697233 (நீடிப்பு - 317) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- அரசாங்க அலுவலர்கள் அரசுக்கு மேலதிகமான சேவையினை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான நடவடிக்கைகள்.
- மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பான கொள்கைகள்.
- விடுமுறை தினச் சம்பளம் தொடர்பான கொள்கைகள்.
- அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93 இற்கு ஏற்ப திடீர் விபத்துக்கான நட்டஈடு தொடர்பான நடவடிக்கைகள்.
- சீறுடை தொடர்பான கொள்கைகள்.
- பல்வேறு கொடுப்பனவுகள் தொடர்பான கொள்கைகள்.
நிர்வாக அலுவலர்
வெற்றிடம்
தொலைபேசி | : | +94 11 2693316 (நீடிப்பு - 303) |
தொலைநகல் | : | +94 11 2692158 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கடமை
- தாபனப் பிரிவின் சாதாரண நிர்வாக நடவடிக்கைகள்.
- நாளாந்த தபால்களை முறையாக பகிர்ந்தளித்தல்.
- தாபனப் பிரிவின் பொருட் கணிப்பீட்டு கட்டுப்பாடு.
- பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனத் தொகுதியின் மேற்பார்வை.
- அலுவலக உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுதியளித்தல்.
- அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கான அவதானிப்பினை அனுப்புதல் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளல்.
- உற்பத்தித்திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைத்தல்.