தொலைநோக்கு
"உத்தியோகபூர்வ வீடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உற்பத்தித்திறன் வாய்ந்த அரச சேவையொன்றினை ஏற்படுத்தல்"
பணிக்கூற்று
"அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் சகல அரசாங்க விடுதிகளை, சேவைத் தேவைப்பாட்டிற்கிணங்க அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பெற்றுக்கொடுத்தல், அவற்றில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலைப் போன்றே அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் நில பியச, நில செவன வீடமைப்புத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட சகல பணிகளையும் செயற்படுத்துவதன் மூலம் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அவசியப்படும் பின்னணியினைத் தோற்றுவித்தல்"
நோக்கம்
- அரச உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ விடுதிகளை முன்பதிவு செய்தல், அவ் விடுதிகளின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய சகல முகாமைத்துவ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் நிறைவேற்றல் மற்றும் உரிய தரப்புக்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளல்.
- அரச உத்தியோகத்தர்களின் சேவைத் தேவைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தற்காலிக வதிவிற்காக வழங்கப்பட்ட அரசிற்கு உரித்தான எந்தவொரு விடுதியும் “நில நிவாச” இன் கீழ் கொள்ளப்படுவதோடு அரசின் பொதுச் சேவை விடுதிகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
இப்பிரிவின் கீழ் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு என்ற அலகுகள் இரண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதன் பணிகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
அபிவிருத்திப் பிரிவின் பணிகள் |
வீடமைப்புப் பிரிவின் பணிகள் |
அரச அலுவலர்களுக்காக மாவட்ட மட்டத்தில் உத்தியோகபூர்வ விடுதி வசதிகளை வழங்குவதற்காக “நில பியச” உட்பட ஏனைய திட்டங்களையும் நடைமுறைப்படுத்துதல் |
முன்னுரிமை அடிப்படையில் விடுதிகளை வழங்குதல் |
அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையினைத் தயாரித்தல் |
அரச உத்தியோகத்தர்களின் காத்திருப்புப் பட்டியலுக்கமைய உத்தியோகபூர்வ இல்லங்களை பதிவு செய்தல் மற்றும் விசேட சந்தர்ப்பங்களில் தேவை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இல்லங்களை ஒதுக்குதல் |
சனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், கருத்திட்ட முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நிதி அமைச்சுக்கள் தொடர்பாக திட்டங்களின் முன்னேற்றத்தினைக் காட்டும் அறிக்கையைத் தயாரித்தல் |
குறித்த திகதியில் விடுதிக்கான வாடகைகளைச் சேகரித்தல் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் மூலம் விடுதி வாடகையைச் சேகரிக்கும் நடவடிக்கையினை ஒருங்கிணைத்தல் |
தகவலறியும் சட்டத்தின் கீழ் அரையாண்டு அறிக்கையைத் தயாரித்தல் |
அரசாங்க விடுதிகளின் வருடாந்த பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கையை மேற்கொள்ளல் மற்றும் அவற்றை மேற்பார்வை செய்தல் |
அரச உத்தியோகத்தர்களின் தற்கால விடுதி அவசியப்பாட்டினை அடையாளங் கண்டு அதற்கிணங்க கருத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் |
அரச விடுதிகளைச் சட்ட விரோதமாக பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு 1969 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க உடைமைகள் மீளப்பெறும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்தல்.
அரச மற்றும் தனியார்த் துறையின் ஒத்துழைப்புடன் "நில செவண" திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
இவ்வமைச்சின் கீழ் காணப்படுகின்ற ஓய்வு விடுதிகள் மற்றும் சுற்றுலா பங்களாக்களை முன்கூட்டி ஒதுக்குதல் மற்றும் அவற்றின் நிர்வாக நடவடிக்கைகள். |
அமைச்சுக்குச் சொந்தமான அரசாங்க விடுதிகளின் அமைவிடங்கள்
- கொழும்பு 04, லோரிஸ் ஒழுங்கை
- கொழும்பு 05, மஹகம சேகர மாவத்தை
- கொழும்பு 05, மெகன்சி வீதி
- கொழும்பு 05, ஸ்டான்மோ கிரசன்ட்
- கொழும்பு கொழும்பு05, கெப்படிபொல மாவத்தை
- கொழும்பு 05, ஸ்கேல்டன் வீதி
- கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தை
- கொழும்பு 07, விஜேராம மாவத்தை
- கொழும்பு 07, க்ரகரி மாவத்தை
- கொழும்பு 07, மலலசேகர மாவத்தை
- கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை
- கொழும்பு 08. கலாநிதி என்.எம். பெரேரா மாவத்தை
- பத்தரமுள்ள, ஜயவடனகம
அரசாங்க உத்தியோகபூர்வ விடுதிகள்
அரச உத்தியோகத்தர்களின் சேவைத் தேவைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தற்காலிகமாக வசிப்பதற்காக வழங்கப்பட்ட அரசிற்கு உரித்தான எந்தவொரு விடுதியும் “நில நிவாச” இன் கீழ் கொள்ளப்படுவதோடு அரசின் பொதுச் சேவை விடுதிகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல். அவ்வாறான சகல விடுதிகளும் பின்வருமாறு இரு வகுதியினுள் உள்ளடங்குகின்றது.
- அட்டவணைப்படுத்தப்பட்ட விடுதிகள் – அமைச்சொன்றின் அல்லது திணைக்களமொன்றின் குறித்த பதவியொன்றுக்கு அல்லது தரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிகள்
- பொது விடுதிகள் – அட்டவணைப்படுத்தப்பட்ட விடுதி உரித்துடையதாகும் பதவிகளுக்கு அல்லது தரங்களுக்கு உட்படாத சகல உத்தியோகத்தர்களினதும் விடுதித் தேவைக்காக காணப்படும் விடுதிகள்
அதற்கிணங்க அரசின் பொதுச் சேவை விடுதிகளுக்கு உரித்தான நடவடிக்கைகளை மேற்கொள்வது வீடமைப்புப் பிரிவின் பணியாகக் காணப்படுகின்றது.
அரச உத்தியோகத்தர்களுக்கு அரச விடுதிகளை வழங்கும் போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்
- அரச விடுதிகளை வழங்கும் போது கவனத்திற் கொள்ளப்படுவது காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்துள்ள உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும்.
- காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்துள்ள அரச அலுவலர்கள் தாபன விதிக்கோவையின் XIX ஆம் அத்தியாயத்தில் காணப்படும் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
- அரச விடுதிகளுக்கான வாடகை குடியிருப்பாளர்களின் மாதாந்த சம்பளத்தின் 12.5% ஆகும்.
விடுதிகளின் பராமரிப்பு
- அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் குடியிருக்கும் விடுதிகள் தவிர்ந்த, ஏனைய சகல அரச விடுதிகளினதும் பராமரிப்பு நடவடிக்கைகள் இவ்வமைச்சின் வீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
- கௌரவ அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு முன்கூட்டி பதிவு செய்தல் மற்றும் அரச விடுதிகளின் பராமரிப்பு நடவடிக்கைகள் இவ்வமைச்சின் முன் அனுமதியின் கீழ் அ.நி. சுற்றறிக்கைக்கு 27/2010 ஏற்புடையதாகும் வகையில் உரிய அமைச்சுக்களின் மூலம் மேற்கொள்ளப்படும்.
விடுதி உடைமைகளை மீளக் கையளித்தல்
- குறித்த காலப்பகுதி நிறைவின் போது, குடியிருந்த காலப் பகுதிக்கு உரித்தான நீர் மற்றும் மின்சாரக் கட்டணப் பட்டியலின் இசைவு அறிக்கையுடன் விடுதிகளின் முறைமைக்கேற்ப இவ்வமைச்சுக்கு மீள ஒப்படைப்பது சகல குடியிருப்பாளர்களினதும்பொறுப்பாகும்.
- எவரேனும் ஒரு குடியிருப்பாளர் உரிய கால முடிவின் போது முறையாக விடுதியினை மீள கையளிக்காது விடின், அவருக்கு விடுதியினை கையளிக்குமாறு அறிவித்து சட்டரீதியான அறிவித்தலொன்று அனுப்பப்படும்.
- அதற்கேற்ப குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுக்காது விடின், 1969 இலக்கம் 07 இனைக் கொண்ட உடைமையினை மீள கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கைகளின் பின்னர் அவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- உரிய கால எல்லையினைத் தாண்டி விடுதிகளில் குடியிருப்பவர்களுக்கு தண்டனை வாடகைக்கு உட்படுவார்கள். தண்டனை வாடகை என்பது அரசின் பிரதான மதிப்பீட்டாளர்களினால் மதிப்பீடு செய்யப்பட்ட விடுதிகள் தொடர்பாக சந்தையில் நிலவும் வாடகை மற்றும் அலுவலரின் சம்பளத்தில் 8% என்ற தொகைகள் இரண்டினதும் கூட்டுத்தொகைக்கு சமனான தொகையாகும்.
காலி - வெகுணகொடை வீடமைப்புத் திட்டம்
- இச் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலி மாவட்டத்தின் ஹபராதுாவ மற்றும் வெகுணகொடை விடுதிகளை நிர்மானப் பணிகள் தற்சமயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- விடுதி அலகுகள் : 572
பெறுமதி
விடுதி வகைகள் |
விற்பனை விலை (1 அலகு) |
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான |
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான |
நடுத்தர செலவினைக் கொண்ட விடுதிகள் |
ரூபா. 3,550,000.00 |
ரூபா. 3,675,079.00 |
உயர்தர செலவினைக் கொண்ட விடுதிகள் |
ரூபா. 4,300,000.00 |
ரூபா. 4,451,828.00 |
ஹபராதுாவ வீடமைப்புத் திட்டம்
பெறுமதி
விடுதி வகைகள் |
விற்பனை விலை (1 அலகு) |
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான |
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான |
நடுத்தர செலவினைக் கொண்ட விடுதிகள் |
ரூபா. 1,980,000.00 |
ரூபா. 2,102,787.00 |
உயர்தர செலவினைக் கொண்ட விடுதிகள் |
ரூபா. 3,550,000.00 |
ரூபா. 3,749,022.00 |
கண்டி குண்டசாலை வீடமைப்புத் திட்டம்
- 576 விடுதி அலகுகள் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது
கொழும்பு 05, கெப்படிபொல மாவத்தை மாநாட்டு இல்லம்
பொது நிர்வாக விடயப்பொறுப்பு அமைச்சின் கீழ், கொழும்பு 05, கெப்பிட்டிபொல மாவத்தை மாநாட்டு வீடமைப்புத் தொகுதிக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்கள் பின்வரும் அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்யும் அரசின் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின்படி குடியிருப்புக்காக ஒதுக்கிக் கொடுக்கப்படும்.
அடிப்படை தகைமைகள் :
- அரசியலமைப்பில் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளவாறு அரச உத்தியோகத்தராக இருத்தல். மேலும், உத்தியோகத்தர் 25.02.2016 ஆம் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2016 (சம்பளத் திருத்தம்) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, நிறைவேற்றுத் தர பதவியொன்றின் முனைப்பான சேவையிலுள்ள உத்தியோகத்தராக இருத்தல்.
- கொழும்பு மாவட்டத்திற்குள் சேவை நிலையமொன்றில் பணி புரிதல்.
- சேவை நிலையத்திலிருந்து நிரந்தர வதிவிடத்துக்கு (வாக்காளர் பதிவுத் தகவலின்படி) கூகுள் (Google map) வரைபடத்தின் மூலம் அளவிடப்பட்டு பெற்றுக்கொள்ளப்படும் ஆகாய தூரம் 20 கி.மீ இலும் அதிகமாக இருத்தல்
- விண்ணப்பதாரர் அல்லது விண்ணப்பதாரரின் துணை இதற்கு முன்னர் அரச மாநாட்டு வீட்டு உரிமையை அனுபவித்திராமை.
- விண்ணப்பிக்கும் திகதியில் விண்ணப்பதாரர் அல்லது விண்ணப்பதாரரின் துணையின் பெயரில் ஒதுக்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லம் காணப்படாமை.
- விண்ணப்பதாரர் அல்லது விண்ணப்பதாரரின் துணை ஆகிய இருவரும் அரச ஊழியர்களாக இருக்கும்போது, இல்லத்திற்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இல்லத்திற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் சேவை நிலையத்துக்குரித்தான திணைக்களம் அல்லது அமைச்சிடம் அரச உத்தியோகபூர்வ இல்லத் திட்டங்கள் இருத்தல் கூடாது
விண்ணப்பம் - 2024 |
|
உத்தியோகபூர்வ இல்ல உரிமையாளர்களுக்கான தற்காலிக புள்ளிகள் பட்டியல் - 2024 |
|
2024 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்ளவுள்ள விண்ணப்பதாரிகளின்பெயர் பட்டியல் |
|
கம்பஹா மாவட்ட நில பியஸ வீடமைப்புத்தொகுதி
பொது நிர்வாக விடயப்பொறுப்பு அமைச்சின் கீழ் கம்பஹா மாவட்ட நில பியஸ வீடமைப்புத்தொகுதிக்குரிய 05 உத்தியோகபூர்வ இல்லங்கள் கீழ்வரும் அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள அரசின் நிறைவேற்றுத் தரத்தின் உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 20/2023 பிரகாரம் வசிப்புக்காக ஒதுக்கித் தரப்படுகின்றது.
அடிப்படைத் தகைமைகள் :
- 2016.02.25 ஆந்திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016 (சம்பளத் திருத்தம் ) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிறைவேற்றுத் தரத்திலுள்ள பதவியொன்றை வகிக்கின்ற முனைப்பான சேவையில் உள்ள அரச உத்தியோகத்தராக இருத்தல்
- கொழும்பு அல்லது கம்பஹா மாவட்டத்தில் உள்ள சேவை நிலையமொன்றில் கடமையாற்றுதல்.
- விண்ணப்பம் அனுப்பப்படும் சந்தர்ப்பத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்ல உரித்தினைக்கொண்ட பதவியொன்றினை வகிக்காமை
- விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பதாரர் அல்லது அவரது துணையின் பெயரில் ஒதுக்கப்பட்டுள்ள அரசின் உத்தியோகபூர்வ இல்லமொன்று இல்லாதிருத்தல்
- விண்ணப்பதாரர் அல்லது அவரது துணை இருவரும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும்போது இல்லத்துக்கு விண்ணப்பிக்க முடிவது ஒருவருக்கு மாத்திரமே.
- சேவை நிலையத்திலிருந்து நிரந்தரமாக வசிக்கும் இடத்துக்கு (வாக்காளர் பதிவுத் தகவலின்படி) கூகுள் வரைபடம் (Google map) மூலம் அளத்தல் மேற்கொள்ளப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுகின்ற ஆகாய தூரம் 20 கி.மீ இலும் அதிகமாக இருத்தல்
விண்ணப்பப்படிவம் -2023 |
|
2024 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இல்ல உரித்துப்பெறவுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல் |
|
கெப்படிபொல வீடமைப்புத் திட்டம்
- உத்தேசிக்கப்பட்ட காணியில் தொடர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது. அத்திட்டத்தின் கீழ் 100 விடுதி அலகுகளை விட மேற்பட்ட அளவில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொது நிருவாக அமைச்சின் சுற்றுலா பங்களாக்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்
பொது நிருவாக அமைச்சின் சுற்றுலா பங்களாக்கள்
- நுவரெலியா, தியதலாவ, பண்டாரவலை ஓய்வு விடுதிகள் ஒதுக்குவதற்கு - 011 2697316
பொது இலக்கம் : 011 2696211 – நீடிப்பு - 216
தொலைநகல் : 011 2697299
- விடுமுறை விடுதிகளை முன்கூட்டி பதிவு செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு மாதத்தின் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படும்.
விடுமுறை இல்லத்தின் பெயர் |
இருப்பிடம் |
தொலைபேசி |
கட்டணங்கள் (ரூ.) |
அறைகளின் எண்ணிக்கை |
அதிகபட்ச குடியிருப்பு |
நுவரெலியா (பழைய) |
பொருளாதார மையத்தின் அருகில் |
+94 52 2222363 |
1,000 |
03 |
10 |
நுவரெலியா (புதிய) |
பொருளாதார மையத்தின் அருகில் |
+94 52 2222363 |
1,000 |
03 |
06 |
நுவரெலியா (புதிய) |
பொருளாதார மையத்தின் அருகில் |
+94 52 2222363 |
1,000 |
03 |
06 |
நுவரெலியா (புதிய) |
பொருளாதார மையத்தின் அருகில் |
+94 52 2222363 |
750 |
02 |
04 |
தியதலாவை - A |
புகையிரத நிலையத்திற்கு அருகில் |
+94 57 2229068 |
1,000 |
04 |
11 |
தியதலாவை - B |
புகையிரத நிலையத்திற்கு அருகில் |
+94 57 2229069 |
1,000 |
03 |
07 |
பண்டாரவெல - 1 |
பிந்துநுவர வீதி |
+94 57 2222553 |
1,000 |
03 |
07 |
பண்டாரவெல - 2 |
பிந்துநுவர வீதி |
+94 57 2222553 |
1,000 |
03 |
07 |
**2018.06.01 ஆந் திகதியில் இருந்து தொடர்ந்தேச்சையாக விடுமுறை விடுதிகளை ஒதுக்குவது தொடர்பாக அறவிடப்படும் ஒரு நாளைக்கான கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது
*நிபந்தனைகளுக்குட்பட்டது.
பொது நிருவாக அமைச்சின் ஓய்வு விடுதிகள்
- யாழ்ப்பாணம், கதிர்காமம், மகியங்கனை, மிகிந்தலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை ஓய்வு விடுதிகள் ஒதுக்குதல் - 011 2697316
|
பிரபு அறைகள் (ரூ.) |
குளிரூட்டப்பட்ட (ரூ.) |
குளிரூட்டப்படாத (ரூ.) |
தற்பொழுதுள்ள விலை கட்டண பொதுவான ஒதுக்கத்திற்காக |
6,500 |
4,500 |
2,500 |
அரச ஊழியர்களின் தனிப்பட்ட சுற்றுலாவுக்காகஅரச நிருவாக விடுமுறை விடுதிகளினை ஒதுக்குவதற்குரிய விண்ணப்பங்களினை பூர்த்தி செய்து தங்களது நிறுவனத்தின் தலைவரின் ஊடாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்காக மாத்திரம் |
4,000 |
2,000 |
1,500 |
வெளிநாட்டு வதிவிடதாரிகளுக்காக 50% மேலதிகமாக அறவிடப்படும் |
9,750 |
6,750 |
5,250 |
To conduct workshops; From 8.00 am to 12.00 noon or 12.00 noon to 4.00 pm (Half day) = Rs 7,500/= Full day from 8.00 am to 4.00pm = Rs.15,000/= |
*நிபந்தனைகளுக்குட்பட்டது.
“நில பியச” அரச அலுவலர்களின் உத்தியோகபூர்வ விடுதி செயற்திட்டம்
அரச அலுவலர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஒன்று என்ற விகிதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இவ் விடுதி செயற்திட்டம் ஐந்து வருடங்களினுள் நிறைவு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதோடு ஒரு வருடத்தினுள் ஐந்து மாவட்டங்களில் கட்டிட நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக பின்வரும் மாவட்டங்களில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மொனராகலை மாவட்டம்
இவ் உத்தியோகபூர்வ விடுதிச் செயற்திட்டத்திற்கு உரித்துடையதாக கட்டிமொன்றினை நிர்மாணிப்பதற்குரிய ஒப்பந்தம் பொறியியல் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய ஆலோசனை பணியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதோடு இதற்கான ஆலோசனைச் சேவை ஒத்துழைப்பினை ஊவா மாகாண சபை பொறியியல் சேவையின் மூலம் வழங்கப்படுகின்றது.
உத்தேசிக்கப்பட்ட விடுதி அலகுகளின் எண்ணிக்கை - 32
கம்பஹ மாவட்டம்
இவ் உத்தியோகபூர்வ விடுதிச் செயற்திட்டத்திற்கு உரித்தான கட்டிமொன்றினை நிர்மாணிப்பதற்குரிய ஒப்பந்தத்தினை சென்ட்ரல் இன்ஜினியரிங் சர்விசஸ் பிரைவட் லிமிடட்வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கான ஆலோசனைச் சேவை ஒத்துழைப்பினை மேல் மாகாண சபை பொறியியல் சேவையினால் அளிக்கப்படுகின்றது.
உத்தேசிக்கப்பட்ட விடுதி அலகுகளின் எண்ணிக்கை - 32
கண்டி மாவட்டம் – முதற் கட்டம்
இவ் உத்தியோகபூர்வ விடுதிச் செயற்திட்டத்திற்கு உரிய கட்டிட நிர்மாணத்திற்கான திட்டமிடல் செயற்பாடுகள் இதுவரை இடம்பெற்று வருவதோடு உரிய ஆலோசனைச் சேவைகள் மத்திய மாகாண கட்டிடத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது.
உத்தேசிக்கப்பட்ட விடுதி அலகுகளின் எண்ணிக்கை - 8
பொலன்னறுவை மாவட்டம்
இவ் உத்தியோகபூர்வ விடுதிச் செயற்திட்டத்திற்கு உரித்தான கட்டிடமொன்றினை நிர்மாணிப்பதற்கான திட்டமிடல் செயற்பாடுகள் இதுவரை இடம்பெற்று வருவதோடு மில்லியனாக இருப்பதோடு இதற்கான ஆலோசனை சேவை ஒத்துழைப்பினை மொரட்டுவை பல்கலைகழகத்தினால் வழங்கப்படுகின்றது.
உத்தேசிக்கப்பட்ட விடுதி அலகுகளின் எண்ணிக்கை - 32
கொழும்பு மாவட்டம்
அரச சேவையில் காணப்படும் சகல நாடளாவிய சேவைகள் விசேட தரத்துடைய அலுவலர்களுக்கு விடுதி வசதியினை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் செயற்திட்டத்தின் மொத்தப் பெறுமதி ரூபா. 981 மில்லியனாக இருப்பதோடு இதற்கான ஆலோசனை சேவை ஒத்துழைப்பினை மொரட்டுவை பல்கலைகழகத்தினால் வழங்கப்படுகின்றது.
உத்தேசிக்கப்பட்ட விடுதி அலகுகளின் எண்ணிக்கை - 40
தொடர்பு விபரங்கள்
திரு. ஜே.எம்.ஜே.கே. ஜயசுந்தர மேலதிகச் செயலாளர் (உள்ளக நிர்வாகம்)
தொலைபேசி |
: |
+94 11 2695150 (நீடிப்பு - 200) |
தொலைநகல் |
: |
+94 11 2689407 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
திருமதி.ஜே.ஏ.என்.ஜெயவீர சிரேஷ்ட உதவிச் செயலாளர் (வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி)
தொலைபேசி |
: |
+94 11 2697234 (நீடிப்பு - 212) |
தொலைநகல் |
: |
+94 11 2697299 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
திருமதி. எச்.பி.சீ.எஸ். ஹேவாவசம் உதவிப் பணிப்பாளர் (வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி)
தொலைபேசி |
: |
+94 11 2698606 (நீடிப்பு - 219) |
தொலைநகல் |
: |
+94 11 2697299 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
பொறியியல் பிரிவு
பொறியியலாளர்.எம்.பி.பி. தில்ஹானி தலைமை பொறியியளாலர்
தொலைபேசி |
: |
+94 11 2682459 (நீடிப்பு - 288) |
தொலைநகல் |
: |
+94 11 2680907 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
வெற்றிடம் சிவில் பொறியியளாலர்
தொலைபேசி |
: |
+94 11 2682459 (நீடிப்பு - 288) |
தொலைநகல் |
: |
+94 11 2680907 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
வீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு
தொலைபேசி |
: |
+94 11 2697316 (நீடிப்பு - 173 , 216) |
|
|
|