இலங்கை கணக்காளர் சேவையின் அலுவலர்களின் சகல நிர்வாக நடவடிக்கைகளும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காளர் சேவைப் பிரிவினால் நடாத்தப்படுகின்றது.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், இலக்கம் 1670/33 மற்றும் 2010 செப்டம்பர் 10 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட இலங்கை கணக்காளர் சேவையானது நாடு தழுவிய சேவைகளில் ஒன்றாகும்.
நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குவதற்காக இலங்கை கணக்காளர் சேவையின் நிமித்தம் அமைச்சரவை மற்றும் சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் விதிக்கப்பட்ட சகல கொள்கைகளும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயளாலரின் அனுமதியுடன் இலங்கை கணக்காளர்கள் சேவைப்பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
தொலைநோக்கு
"வினைத்திறன் மற்றும் விளைத்திறன் மிக்க நிதி முகாமைத்துவத்திற்காக சுய அதிகாரமிக்க கணக்காளர் சேவை"
பணிநோக்கு
"நுணுக்கமான மற்றும் தொழில் நிபுணத்துவம் மிக்க அலுவலர்கள் குழாமினை உருவாக்குவதற்கு அவசியமான மனப்பாங்கினை விருத்தி செய்யும் வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் இயலளவு விருத்தி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி நிதியியல் துறை சார்ந்த ஆய்வுப் பின்னணியினைக் கட்டியெழுப்பி அவற்றின் பெறுபேறுகளை பயன்பாட்டிற்கு கொள்வதற்கு கணக்காளர்களை ஊக்கமூட்டுவதற்கான மூலோபாயங்களை வகுத்தல்"
நோக்கம்
நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குதல்.
பின்னணி
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் அரச பிரிவுகளில் ஏற்பட்ட கடமைப் பரப்பின் விரிவாக்கம், முற்பணக் கணக்கு நடவடிக்கைகள் அதிகரிக்க மற்றும் கணக்கியல் முறைமைகளை உறுதிப்படுத்துவதன் அவசியத்தினையும் கருத்திற் கொண்டு 1946 ஆம் ஆண்டில் இலங்கை கணக்காளர் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் சாட்சி கூறுகின்றன. அதன் பிறகு அரச பொறிமுறையினுள் ஏற்படும் மாற்றங்களுடன் கணக்காளர் சேவை பரிணாம வளர்ச்சியடைந்து தற்காலம் வரை விருத்தியடைந்துள்ளது.
கணக்காளர் சேவைப் பிரிவுகளின் பிரதான பணிகள்
- ஆட்சேர்ப்பு செய்தல்
- சேவையினை நிரந்தரமாக்கல்
- இடமாற்றங்களினைப் பெற்றுக் கொடுத்தல்
- பெறுபேறுகளை உறுதிப்படுத்தும் வகையில் சான்றிதழ்களை பரீட்சை திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகங்களிற்கு அனுப்புதல்
- வினைத்திறன் காண்தடைதாண்டற் பரீட்சையினை நடாத்துதல்
- பதவியுயர்வு தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல்
- ஏதேனும் ஒரு பதவியில் பதில் கடமையாற்ற அதற்குரிய பரிந்துரையை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல்
- நாட்டிற்கு வெளியே காலத்தினை செலவிட உரிய விடுமுறையிக்கு அங்கீகாரம் வழங்கல்
- சேவை நீடிப்பு மற்றும் ஓய்வு பெறச்செய்தல்
- சேவை மூப்பு பதிவேட்டினை முகாமைத்துவம் செய்தல்
- வெற்றிடப் பதிவேட்டினை முகாமைத்துவம் செய்தல்
- இலங்கை கணக்காளர் சேவையின் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிடம் மற்றும் அமைச்சரவைக்கு பரிந்துரை வழங்கல்
- ஒழுக்காற்று நடவடிக்கைகள்
ஆட்சேர்ப்புச் செய்தல்
- பதவி மற்றும் நிறுவனத்தினை அடிப்படையாகக் கொண்டு வெற்றிடங்களை இனங்காணல்
- முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ளல்
- திறந்த/ மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நேரடி அடிப்படையில் அலுவலர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வர்த்தமானி அறிவித்தலினை வெளியிடுதல்
- பரீட்சை திணைக்களத்தின் மூலம் தெரிவிற்கான பரீட்சையினை நடாத்துதல்
- நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரியின் தகைமைகளைப் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளல்
- அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்
சேவையினை நிரந்தரம் செய்தல்
- நடைமுறை ஒழுங்கு விதிக் கோவையின் 05 ஆம் பின் இணைப்பின் பிரகாரம் வருடாந்த முன்னேற்ற அறிக்கையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகள்
- இ.க.சே.சேவையின் ஆரம்பப் பயிற்சி சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகள்
- வைத்தியச் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி ( திறந்த மற்றும் நேரடி ஆட்சேர்ப்புக்கு மாத்திரம்)
- உரிய செயலாளரின் பரிந்துரை
- வினைதிறன் தடைதாண்டற் பரீட்சைப் பெறுபேறுகளின் அத்தாட்சிப்படுத்திய பிரதிகள்
- மொழித்தேர்ச்சியில் சித்தியெய்திய அல்லது விடுவிக்கப்பட்டதாக காட்டப்படும் ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்திய பிரதிகள்
- பொது 278 பிரமாணம்
- பொது 160 சேவைகள் ஒப்பந்தம்
- கடமையை பொறுப்பேற்கும் கடிதம்
இடமாற்றங்களைப் பெற்றுக் கொடுத்தல்
- வருடாந்த இடமாற்றக் கொள்கையினை அமுல்நடாத்துதல்
- சேவையின் தேவைப்பாட்டிக்கு ஏற்ப இடமாற்றங்கள் செய்தல்
பெறுபேறுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சான்றிதழ்களை பரீட்சை திணைக்களம் அல்லது பல்கலைக்கழங்களிற்கு அனுப்புதல்
- கல்விச் சான்றிதழ்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்
- திணைக்கள தலைவர்களின் பரிந்துரை
வினைதிறன் தடைதாண்டற் பரீட்சையினை நடாத்துதல்
- பரீட்சை திணைக்களத்தின் மூலம் வினைதிறன் தடைதாண்டற் பரீட்சையினை நடாத்துதல்
- வினைதிறன் தடைதாண்டற் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுதல்
பதவியுயர்வு தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை வழங்கல்
- உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அதற்குரிய இணைப்புக்கள்
- திணைக்கள தலைவரின் மற்றும் உரிய செயலாளரின் பரிந்துரை
ஏதேனும் ஒரு பதவியில் பதில் கடமையாற்ற அதற்குரிய பரிந்துரையை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல்
- உரிய மாதிரிப் படிவம் மற்றும் அதற்குரிய இணைப்புக்கள்
- திணைக்கள தலைவரின் மற்றும் உரிய செயலாளரின் பரிந்துரை
நாட்டிற்கு வெளியே காலத்தினை செலவிட உரிய விடுமுறையிக்கு அங்கீகாரம் வழங்கல்
- உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட பொது 126 மாதிரி படிவம் ( 2 பிரதிகள்)
- திணைக்கள தலைவரின் பரிந்துரை
- உரிய செயலாளரின் பரிந்துரை
ஓய்வு பெறல்
- உரிய வகையில் பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவம்
- சேவையை உறுதிப்படுத்தும் கடிதம்
- குறித்த அலுவலரின் வேண்டுகோள்
- திணைக்கள தலைவர்களின் மற்றும் உரிய செயலாளரின் பரிந்துரை
- அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையினைப் பெற்றுக் கொடுத்தல்
சேவை மூப்பு பதிவேட்டினை முகாமைத்துவம் செய்தல்
- விசேட தரம்
- தரம் I
- தரம் II
- தரம் III
வெற்றிடப் பதிவேட்டினை முகாமைத்துவம் செய்தல்
- விசேட தரம்
- தரம் I
- தரம் II
- தரம் III
இலங்கை கணக்காளர் சேவையின் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கும், அமைச்சரவைக்கும் பரிந்துரை வழங்கல்
ஒழுக்காற்று நடவடிக்கைகள்
- திணைக்கள / அமைச்சு. ஒழுக்காற்று அலுவலர் மற்றும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கிடையிலான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான ஒருங்கிணைப்பு
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஐ.யு.பீ. குணவர்தன பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2698672 (நீடிப்பு - 280) |
தொலைநகல் |
: |
+94 11 2693304 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
திருமதி.ஏ.ஏ.கே. பெரேரா பிரதிப் பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2694991 (நீடிப்பு - 297) |
தொலைநகல் |
: |
+94 11 2693304 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
திருமதி. பீ.பீ.எச். லியனகே உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2694990 (நீடிப்பு - 171) |
தொலைநகல் |
: |
+94 11 2693304 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
இலங்கை கணக்காளர்கள் சேவை பிரிவு
தொலைபேசி |
: |
+94 11 2698672 (நீடிப்பு - 132 , 218) |
தொலைநகல் |
: |
+94 11 2693304 |
|
|
|