பதவியணியினர்
- 2024.07.01 ஆம் திகதியில், இலங்கை பொறியியல் சேவையில் உள்ள உண்மை ஊழியர்களின் எண்ணிக்கை 1125 ஆகும்.
ஆட்சேர்ப்பு
- இலக்கம் 1836/6 மற்றும் 11.11.2013 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை பொறியியல் சேவைகளின் புதிய பிரமாணக்குறிப்பு மற்றும் அதன் திருத்தங்களின்படி, இலங்கை பொறியியல் சேவைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான முறைகள் 02 ஆகும்.
- திறந்த ஆட்சேர்ப்பு (தொழில் தகைமை கொண்ட பொறியாளர்களுக்கு மாத்திரமாகும்) – நிலவும் வெற்றிடங்களில் 75% அளவு
- மட்டுபடுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு – நிலவும் வெற்றிடங்களில் 25% அளவு
திறந்த ஆட்சேர்ப்பு
கல்வித் தகைமைகள்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் இருந்து அவ்ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 04 வருட முழுநேர விஞ்ஞானமானிப் பொறியியல் பட்டத்தை ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பாடத்துறையொன்றின் கீழ் வெற்றிகரமாக பூர்த்திசெய்து பட்டம் பெற்றிருத்தல்
அல்லது
- மேற்கூறப்பட்ட பட்டக்கற்கைநெறிக்குச் சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மற்றும் இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற கற்கைகள் மற்றும் ஏனைய சகல தேவைப்பாடுகளையும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பாடத்துறையின் கீழ் பூர்த்திசெய்து அதற்கு உரிய செல்லுபடியாகும் சான்றிதழைப் பெற்றிருத்தல்
தொழில் தகைமைகள்
- 2017 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலங்கை பொறியியலாளர்கள் சபையின், குறித்த சேவைப் பிரிவின் கீழ் இணைப் பொறியியலாளராக அல்லது பட்டயப் பொறியாளராகப் பதிவு செய்திருத்தல் மற்றும் இலங்கை பொறியியல் நிறுவனத்தின் இணை அங்கத்துவம் அல்லது பூரண அங்கத்துவம் (பட்டயப் பொறியியலாளர் நிலை) பெற்றிருத்தல்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு
- நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவைக்கு உரித்தான உத்தியோகத்தராக 15 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்துடன், அதில் குறைந்த பட்சம் 05 வருடங்கள் அச்சேவையின் தரம் I இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றியிருத்தல் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடத்தப்படும் சிரேஷ்ட தொழில்நுட்பப் பரீட்சையில் பூரணமாக சித்தியடைந்திருத்தல்.
- புகையிரதத் திணைக்களத்தில் கண்காணிப்பு முகாமைத்துவ பதவியொன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தரொருவர், அத்திணைக்களத்தில் 15 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்துடன், அதில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் அச்சேவையின் தரம் I இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றியிருத்தல்.
- இலங்கைத் தொழிநுட்ப சேவையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக 15 வருடங்களுக்குக் குறையாத சேவைக்காலத்துடன், குறைந்தபட்சம் 05 வருடங்கள் அச்சேவையின் தரம் I இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றியிருத்தல் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் நடத்தப்படும் அரசாங்க தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான மூன்றாவது பரீட்சையில் (1979 பிரமாணக்குறிப்பு) பூரணமாக சித்தியடைந்திருத்தல்
- நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தரொருவர் அல்லது இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரொருவர் அல்லது புகையிரதத் திணைக்களத்தில் கண்காணிப்பு முகாமைத்துவப் பதவியில் சேவையாற்றும் உத்தியோகத்தரொருவராக 21 வருடங்களுக்குக் குறையாத முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்துடன் அச்சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றிருத்தல்
- • நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தராக அல்லது இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக அல்லது புகையிரதத் திணைக்களத்தில் மேற்பார்வை முகாமைத்துவப் பதவியில் சேவையாற்றும் உத்தியோகத்தராக 15 வருடங்களுக்குக் குறையாத முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும்
(அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அவ்ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பாடத் துறையின் கீழ் 04 வருட பொறியியல் விஞ்ஞானம் பற்றிய கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து பட்டம் பெற்றிருத்தல்
அல்லது
(ஆ) மேற்படி கற்கைநெறிக்குச் சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி மற்றும் ஏனைய சகல தேவைப்பாடுகளையும் ஆட்சேர்ப்புச்செய்யப்படும் பாடத்துறையின் கீழ் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழைப் பெற்றிருத்தல்
- மேற்குறிப்பிடப்பட்ட தகைமைகளில் ஒன்றுடன் 2017 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலங்கை பொறியியலாளர்கள் சபையில் ஒருங்கிணைப்பு அல்லது இணைப் பொறியாளராக பதிவு செய்திருத்தல்
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தொடர்பு விபரங்கள்
பொறியியல் பி.ஏ.டி.என். பொன்னம்பெருமா பணிப்பாளர்
|
திருமதி. டபிள்யூ.என்.பிரியதர்ஷினி உதவிப் பணிப்பாளர்
|
கிளைத் தலைவர் திரு. கே.பி.சி.ஜே. டி சில்வா
|
|||||||