பொது வினவல்களுக்கான பதில்கள்
அரசாங்க பொது நிர்வாக அமைச்சு
அரச நிறுவனங்களில் அடிக்கடி ஏற்படும் வினவல்களின் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பதில்கள்.
அரச நிறுவனத் தலைவர்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தாபன விதிக்கோவை அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்தினைக் கேட்டு அடிக்கடி கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இவ்விதத்தில் அடிக்கடி கிடைக்கப்பெறும் 100 பிரச்சினைகள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் பொதுவான தீர்வுகள் கீழே காட்டப்பட்டுள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதில்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஏதாவது சிக்கலான நிலைகள் ஏற்படுமாயின் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 12/2012 இற்கமைய குறித்த விடயங்களை எனக்கு சமர்ப்பிக்கும் படி மேலும் அறியத்தருகின்றேன்.
விடுமுறை
அரசின் நிரந்தர நியமனமொன்றை கையேற்கும் சந்தர்ப்பத்தில் குழந்தை பிரசவித்துள்ள உத்தியோகத்தரொருவரின் பொருட்டு 03.02.2005 ஆந் திகதிய 04/2005 என்னும் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் ஏற்பாடுகளை ஏற்புடையதாகக் கொண்டு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா?
முடியும். குழந்தை பிரசவித்த நாள் தொடக்கம் உத்தியோகத்தர் நிரந்தர நியமனத்தினைக் கையேற்ற நாள் வரையிலான கால எல்லையினைக் கழித்து மேற்படி சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைய சம்பளத்துடனான, அரைச் சம்பளத்துடனான மற்றும் சம்பளமற்ற பிரசவ விடுமுறையினை வழங்க முடியும்.
கடமை வேளையில் பின்னர் விபத்தொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதன் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 382 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை வழங்க முடியுமா?
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இற்கமைய எதிர்பார்க்காத அனர்த்தமொன்று என்பது ஓர் புவியியல் பிரதேசமொன்றினுள் ஏற்படும் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் நீண்ட வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்தம் போன்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் என்பதாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகும் உத்தியோகத்தரொருவருக்கு அச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து விடுமுறை வழங்கலாம். அது தவிர வேறு அவசர விபத்துக்களின் (மோட்டார் வாகன விபத்து போன்ற) பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இன் ஏற்பாடுகளை ஏற்புடையதாக்க முடியாது.
வெளிநாட்டு புலமைப்பரிசிலின் பேரில் மேலதிக கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்லும் உத்தியோகத்தரொருவரின் வாழ்க்கைத் துணை அரச உத்தியோகத்தராக உள்ள சந்தர்ப்பத்தில் அவ்வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகத்தருடன் வாசம் செய்வதற்கு வெளிநாட்டு விடுமுறை பெற்றுக் கொள்ள முடியுமா?
முடியாது
ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரொருவருக்கு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா?
முடியாது
சட்ட ரீதியாக குழந்தையொன்றை வளர்க்கும் பொருட்டு பெற்றுக் கொள்ளும் அரச உத்தியோகத்தரொருவருக்கு குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொருட்டு விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
விசேட விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
கட்டாய சேவைக் காலத்துடன் உத்தியோகத்தரொருவருக்கு தாபனக் கோவையின் XII வது அத்தியாயத்தின் 14 அல்லது 16 வது பிரிவுகளின் ஏற்பாடுகளின் படி சம்பளத்துடனான அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்கியுள்ள சந்தர்ப்பத்தில், அவ்விடுமுறைக்குரிய கட்டாய சேவைக் காலத்தை நிறைவு, செய்யும் பொருட்டு உத்தியோகத்தரின் விருப்பத்திற்குரிய ஓய்வு பெறும் வயதை (55 வயது) மிஞ்சி 60 வயது வரையிலான சேவைக் காலத்தினை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
கட்டாய சேவைக் காலம் உத்தியோகத்தர் 60 வயதினை அடையும் முன்னர் நிறைவு செய்யக் கூடிய வகையில் விடுமுறையை வழங்க முடியும். அக் கட்டாய சேவைக் காலத்தை நிறைவு செய்யும் முன்னர் வயது 55 – 60 வரையிலான காலத்தில் உத்தியோகத்தர் ஓய்வு பெறுவதற்கு வேண்டுகோள் விடுத்திருப்பின், அவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகுதியாகவுள்ள கட்டாய சேவைக்காலத்தின் பொருட்டு குறித்த தண்டப் பணத்தை அறிவிடல் வேண்டும்.
வைத்தியச் சான்றிதழை அடிப்பைடையாகக் கொண்டு, சில நாட்களுக்கு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவ் விடுமுறை நாட்களுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து கழிக்கப்படுமா?
வைத்தியச் சான்றிதழொன்றின் அடிப்படையில் அலுவலர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளின் எண்ணிக்கை யாதெனில், குறித்த ஏற்பாடுகளுக்கு அமைவாக நடப்பாண்டில் தொடர்ந்தும் மீதமாகவுள்ள விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மற்றும் முன்னைய ஆண்டில் மீதமாகவுள்ள ஓய்வு/ சுகயீன விடுமுறைகளின் எண்ணிக்கையுடன் தொடர்ந்தும் விடுமுறை தேவைப்படுமாயின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ள முடியுமான முன்னைய விடுமுறைகளுமாகும். அவ் அத்தியாயத்தின் 8.3 உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய உள் நாட்டில் கழிக்கும் ஓய்வு விடுமுறை காலத்தினுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்கள் என்பன விடுமுறை நாட்களில் இருந்து கழிக்கப்பட மாட்டாது. அதற்கமைய வைத்தியச் சான்றிதழின் அடிப்படையில் சுகயீன விடுமுறையாக முழுச் சம்பளத்துடன் வழங்கப்படும் சில விடுமுறை நாட்கள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், சனிக்கிழமை சாதாரண அலுவலக கடமை நாளாக கணிக்கப்படுகின்ற அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும், சுழற்சிமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு வாரத்தில் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களும், வாரத்தில் 05 நாட்களில் மாத்திரம் சாதாரண அலுவலக கடமை நாட்களாக விதிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து குறைக்கப்பட மாட்டாது.
உதரணமாக :- முழுச் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் வாரத்தின் 05 நாட்கள் மாத்திரம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டிய அலுவலர் ஒருவருக்கு 05 நாட்கள் வைத்திய காரணங்களின் அடிப்படையில் விடுமுறை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தின் போதும், அக்கால எல்லையில் அரசாங்க விடுமுறை தினங்கள் 02 உள்ளடங்குமாயின், அலுவலர் சுகவீனம் காரணமாக 05 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்கதிருந்த போதிலும், உள்ளபடியாக அவருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து 03 நாட்களே கழிக்கப்படும்.
அரசாங்க அலுவலர் (பெண்) ஒருவர் கர்ப்பிணியாக இருப்பின், 05 மாதமாகும் போது, பிரசவ விடுமுறை பெற்றுக் கொள்ளும் வரையில், கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு அரை மணித்தியாலயம் பிந்தி வருவதற்கும், சாதாரணமாக அலுவலகத்தில் இருந்து வெளியேறும் நேரத்திற்கு அரை மணித்தியாலயம் முந்தி புறப்படுவதற்கும் தாபனவிதிக் கோவையின் ஆம் XII அத்தியாயத்தின் 18:7 உப பிரிவின் ஏற்பாடுகளின் மூலம் வழங்கப்பட்டுள்ள சலுகையை, காலை அல்லது மாலை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயமாக பெற்றுக்கொள்ள முடியுமா?
விடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து, திருப்தியடைவாராயின் அச் சலுகையை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயம் வழங்குவது சம்பந்தமாக எதுவித எதிர்ப்புக்களும் இல்லை.
பிரசவ லீவு பெற்றுள்ள பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த லீவு காலத்தினுள் இடமாற்றம் கிடைக்கப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தும் போது பிரசவ லீவு (சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற) காலத்தின் மீதமுள்ள நாட்களைப் பெற புதிய சேவை நிலையத்தில் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
இடமாற்றக் கட்டளைக்கு ஏற்ப புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி அப்பெண் உத்தியோகத்தருக்கு தொடர்ந்தும், சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமின்றிய பிரசவ லீவுகள் எஞ்சியிருப்பின் புதிய சேவை நிலையத்தில் அம்மீதமுள்ள லீவு நாட்களைப் பெறுவதற்கு அனுமதிக்க முடியும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் போது ஒரே தடவையில் 05வருடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டுமா?
தேவையில்லை.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் போது, பெற்றுக்கொள்ளும் சம்பளமற்ற லீவினை குறுகிய காலத்திற்கு பெற்றுக்கொள்ள முடியுமா?
பெற்றுக்கொள்ள முடியும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் பெற்றுக்கொண்ட லீவு காலத்தினை பூர்த்திசெய்யாது, அதற்கு முன்னரே சேவைக்கு சமூகமளிக்க முடியுமா?
பெற்றுக்கொண்ட லீவினை முடித்துக்கொள்வதாக நிறுவனத் தலைவருக்கு முறையாகத் தெரிவித்த பின்னர், சேவைக்குத் திரும்புவதற்கு எந்தத் தடையும் இல்லை.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவருக்கு பதிலாக பதிற் கடமை உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமா?
அமைச்சு குழுவின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில், இந்த சம்பளமற்ற லீவுக்கு விண்ணப்பிக்கும் உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக, பதிற்கடமை உத்தியோகத்தர்களை நியமனம் செய்வது அவசியமில்லை, அவ்வாறு செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில், நிறுவனத்தில் அடையாளம் காணப்பட்ட ஒரு உள்ளக பொறிமுறையின் மூலம் குறித்த பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் பேணுவதற்கு நிறுவனங்களின் தலைவர்கள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவர் லீவு அங்கீகரிக்கப்படும் தினத்திற்கு முந்திய தினத்திற்கான அடிப்படை சம்பளத்திற்குரிய விதவைகள் /தபுதாரர், அநாதைகள் பங்களிப்புத் தொகையை எவ்வாறு அனுப்பீடு செய்ய வேண்டும்?
விதவைகள் /தபுதாரர், அநாதைகள் பங்களிப்புத் தொகையை அனுப்பீடு செய்யவேண்டிய முறை குறித்து ஓய்வூதிய திணைக்களத்தினால் ஓய்வூதிய சுற்றறிக்கை 06/2022 மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த லீவுக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்?
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(I) இன் 04 (அ) பிரிவு மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) இன் 5.1 பிரிவின் படி சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்வதற்கு தாம் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாள் முதல் ஒரு மாத காலப்பகுதிக்குள் இறுதி முடிவை வழங்க அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) பிரகாரம் உள்நாட்டில் சம்பளமற்ற லீவுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பப் படிவம் ஒன்று உள்ளதா?
இல்லை.
லீவுக்கு விண்ணப்பிப்பதற்காக எழுத்து மூல விண்ணப்பமொன்றை சமர்ப்பிப்பது போதுமானது என்பதுடன், அந்தந்த அமைச்சினால் தமது அமைச்சுக்கு என்று தயாரித்த மாதிரிப் படிவமொன்றைப் பயன்படுத்திக்கொள்வதற்கு தடையில்லை.
உ-ம்:-
1. | பெயர் | : | |
2. | பதவி | : | |
3. | சேவை செய்யும் அலுவலகம் | : | |
4. | லீவுக்கு விண்ணப்பிப்பதற்கான காரணம் | : | |
5. | லீவு கோரும் காலப்பகுதி | : | ..............முதல்......................வரை |
6. | ....... | : |
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) இன் படி உள்நாட்டில் சம்பளமற்ற லீவினைப் பெறும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமொன்று உள்ளதா?
இல்லை.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) இன் படி உள்நாட்டில் சம்பளமற்ற லீவினைப் பெற்றிருக்கும் போது வெளிநாடு செல்ல வேண்டியிருப்பின் லீவினைப் பெறும் முறை எவ்வாறு இருக்கும்?
(i) உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றிருக்கும் போது/ இணையவழி முறை ஊடாக தொழில் ஒன்றில் ஈடுபட்டிருக்கையில் குறுகிய கால (03 மாதங்களுக்கு குறைந்த காலத்திற்கு) வெளிநாடு செல்வதாயின் வெளிநாட்டு லீவுக்கான அனுமதியைப் பெறத் தேவையில்லை.
(ii) உள்நாட்டு லீவினைப் பெற்றுள்ள ஒரு உத்தியோகத்தர் 03 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அல்லது வேறொரு பணிக்காக அல்லது வெளிநாடு செல்வதற்கு அவசியப்பட்டால் மீள சேவைக்கு சமூகமளித்து, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) இன் படி அதற்காக வெளிநாட்டு லீவினை அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I) மற்றும் 14/2022(II) இன் படி கலாநிதி பட்டப் பாடநெறி மற்றும் பட்டப் பின் பட்டப் பாடநெறி கற்கைகளுக்காக சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
முடியாது.
தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் ஏற்கனவே வெளிநாட்டு லீவினை எடுத்துள்ள உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I), 14/2022(II) இன் கீழ் மீள சம்பளமற்ற லீவினை பெற்றுக்கொள்ள முடியுமா?
தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் அதிகபட்சம் 05 வருடங்கள் வரை லீவினைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு இந்த ஏற்பாடுகளின் கீழ் மீள லீவினைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அரசு சார்ந்த நிறுவனங்களில் சேவை செய்வதற்காக அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II)இன் படி லீவினைப் பெற முடியுமா?
முடியாது.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I) மற்றும் 14/2022II) இன் படி லீவு வழங்க முடியுமான பதவிகள் மற்றும் வழங்க முடியாத பதவிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதா?
சேவையின் தேவையை மதிப்பிட்டதன் பிறகு, ஏதேனும் ஒரு பதவியை வகிக்கும் உத்தியோகத்தருக்கு, மேற்கூறப்பட்டவாறு சம்பளமற்ற லீவு வழங்குவது தொடர்பாக குறித்த அமைச்சின் செயலாளரினால் முடிவெடுக்கப்படும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I) மற்றும் 14/2022(II) இன் கீழ் லீவினைப் பெற்றுள்ள உத்தியோகத்தருக்கு அந்த லீவு காலத்தினுள் அல்லது லீவு காலத்தின் இறுதிக் கட்டத்தில் மீள சேவைக்கு சமூகமளிக்காமல் சேவையிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு வாய்ப்பு காணப்படுகின்றதா?
முறைசார்ந்த வகையில் சேவையிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு தடையேதுமில்லை.
புகையிரத ஆணைச்சீட்டு
அரச உத்தியோகத்தர்களில் தங்கி வாழும் குழந்தைகளின் பொருட்டு விடுமுறை பிரயாண ஆணைச்சீட்டுக்கள் (Railway warrants) வழங்கும் போது அவர்களின் பொருட்டு உச்ச வயதெல்லைகள் விடுக்கப்பட்டுள்ளதா?
தாபன விதிக்கோவையில்; XVI வது அத்தியாயத்தின் 1:3 வது உப பிரிவின் பிரகாரம் வயதெல்லையைக் கருதாது நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாக உறுதிப்படுத்திக் கொள்ளல் போதுமானதாகும் என்பதுடன், அவ் அத்தியாயத்தின் 1:3:4 வது உப பந்திக்கமைய இவ் உறுதிப்படுத்தல் திணைக்களத் தலைவரின் பொறுப்பாகும் என்பதுடன், தேவையெனில் இது தொடர்பாக கிராம அலுவலரிடம் உறுதிப்பாட்டொன்றை வேண்டிக் கொள்ள முடியும்
அலுவலக கடமை நேரம்
பிரயாணச் செலவு
முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது காப்பு உத்தியோத்தர்களுக்கு இணைந்த கொடுப்பனவை செலுத்த முடியுமா?
08.01.2008 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை கடித இலக்கம் 02/2008 இன் மூலம் இது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தாபனவிதிக் கோவையின் XIV வது அத்தியாயத்தின் 29.8 வது ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும்.
உத்தியோகபூர்வ வாசஸ்தலம்
ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா?
ஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும்.
ஒப்பந்த பிணை முறி
கடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா? கட்டாய சேவைக்காலம் அவசியமா?
ஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது.
சொத்து மற்றும் இடர் கடன்
யாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
உத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும்.
தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா?
ஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர்.
இடமாற்ற கொள்கைகள்
இடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா?
ஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அத்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும்.
வினைத்திறன் காண் தடைப்பரீட்சை
ஏதாவதொரு பதவிக்குரிய நியமனக் கடிதத்தில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக குறிப்பிடப்படாதுள்ள போது, உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவிக்குரிய வினைத்திறன் காண்தடைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமா? சித்தியடைய வேண்டுமெனில் அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
பதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக உட்படுத்தப்பட்டிருப்பின், உத்தியோகத்தர் வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும். இருப்பினும் குறித்த நியமனக் கடிதத்தில் இவ் ஏற்பாடு குறிப்பிடப்படாதுள்ள போது, அதன் பொருட்டு பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடையும் பொருட்டு முறையான அதிகாரியினால் நிவாரண காலம் வழங்கப்பட்டிருப்பின், அக்காலத்தின் பொருட்டு சம்பள ஆண்டேற்றங்கள் வழங்க முடியுமா?
முடியும்.
12.09.2001 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 20/2001 இற்கமைய வினைத்திறன் காண் தடையிலிருந்து விடுவித்தலுக்கான ஏற்பாடுகள் என்ன?
- 01.10.2001 ஆந் திகதியில் 45 வயதினை அடைந்திருத்தல்
- ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வயதை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறன் காண் தடைப் பரீட்சையிலிருந்து விடுவிப்பிற்கு உரிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருத்தல்.
- 01.10.2001 ஆந் திகதியில் நியமிக்கப்பட்டிருந்த வினைத்திறன் காண்தடையின் சம்பள புள்ளிக்கு எழுந்திருத்தல். (முற்திகதியிடல் அல்லது பதவி உயர்வு அல்லது சம்பள ஏற்றங்களைப் பெற்றுக் கொள்ளல் பேரில் அல்லது உரிய சம்பளப் புள்ளியை அடைந்திருத்தல் அல்லது சம்பள புள்ளியை மிஞ்சி சென்றிருத்தல் போன்றவை இவ்விடயத்தில் ஏற்புடையதாகாது.)
ஆட்சேர்ப்பு நடைமுறையில்∕சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைய முடியாத உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
இதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 02/2001 மற்றும் 02/2011(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நிவாரணக் காலத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள்களைச் சமர்ப்பிக்கலாம்.
நியமனம் மற்றும் பதவி உயர்வு
உத்தியோகத்தர்கள் பதவி உயர்வு கிடைக்கும் போது அப்பதவியின் வினைத்திறன் சம்பளத் தடைப் புள்ளியை மீறியிருப்பின் அதன் பின்னர் மேற்கொண்டு, சம்பள ஆண்டேற்றத்தை வழங்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது எவ்வாறு?
பதவி உயர்விற்கமைய சம்பளம் மாற்றியமைத்தலை மேற்கொண்டு வினைத்திறன் சம்பள புள்ளியை மீறியிருப்பின் 11.02.1994 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/94 மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:6 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
அரச சேவையில் நிரந்தர நியமனமொன்றை வகிக்கும் உத்தியோகத்தரொருவர் வேறொரு அரச பதவியொன்றிற்கு நியமனமொன்றை பெற்றுக் கொள்ளும் போது அவரது முன்னைய சேவைக் காலத்தை புதிய பதவியின் சேவைக் காலத்திற்கு சேர்த்துக் கொள்ள முடியுமா?
சேர்த்துக் கொள்ள முடியாது. அவ்வாறாயினும் அரச சேவையில் / மாகாண அரச சேவையில் உள்ள உத்தியோகத்தரொருவர் முறையான விதத்தில் விடுவிப்பினை மேற்கொண்டு, அரச சேவையிலேயே புதிய நியமனமொன்றைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில், அரச சேவை / மாகாண அரச சேவையின் கீழான முழுமையான சேவைக் காலத்தை ஓய்வூதியத்தினைக் கணக்கிடும் பொருட்டு மட்டும் சேர்த்துக் கொள்ள முடியும்.
மத்திய அரசின் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை முற்தேதியிடல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட வேண்டியது எவ்வாறு?
20.02.2009 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளுக்கு அவதானத்தைச் செலுத்தி குறித்த அறிவுரைகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
பற்றாக்குறை சேவை பட்டதாரிகளின் பிணக்கு
2005.07.15 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 20/94 (II) இன் ஏற்பாடுகளை, 31.12.1980 ஆந் திகதியின் பின்னர் அரச சேவையின் பொருட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது.
விடுவிப்பு
அரச சேவையில் ஓர் பதவியிலிருந்து அரச சேவையில் வேறொரு பதவியின் பொருட்டு நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு வருதல் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் என்ன?
2009.02.20 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறைக் கோவையில் இதற்குரிய ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடமிருந்து அறிவுரையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
அரசியல் உரிமைகள்
தேர்தல் ஒன்றிற்காகப் போட்டியிடும் அரசியல் உரிமைகள் உடைத்தான உத்தியோகத்தரொருவர், அதன் பொருட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும் போது, அவ்வருடத்தில் அவருக்குரிய அது வரையில் பெற்றுக் கொள்ளப்படாதுள்ள சாதாரண விடுமுறைகள் இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா?
ஆம். அவ்வருடத்திற்குரிய அமைய விடுமுறைகளையும் உழைத்துக் கொண்டுள்ள ஓய்வு விடுமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அரசியல் உரிமை உடைத்தான உத்தியோகத்தர் ஒருவர் உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா?
இல்லை. அவர் வகித்த பதவியில் இருந்தவாறே ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 05 நாட்கள் குறித்த கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ள முடியும். (22.05.2007 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2007).
அரசியல் உரிமையுடைத்தான உத்தியோகத்தர் ஒருவருக்கு உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி தலைவர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா?
இல்லை. அவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 அணுசரணைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
- உள்ளுராட்சி நிறுவனத்தில் பதவி வகிக்கும் முழுமையான காலத்திற்கும் சம்பளமற்ற விடுமுறையினைப் பெற்றுக் கொள்ளல்.
- நிரந்தர பதவியில் உள்ள போதே மாதத்திற்கு ஆகக் குறைந்தது 07 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ளலாம்.
அரசியல் உரிமை உரித்துடைய உத்தியோகத்தரொருவர் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா?
இல்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 விருப்புக்களில் ஏதாவது ஒரு விருப்பினை அனுபவிக்கலாம்.
- மாகாண சபை உறுப்பினராக இருக்கும் வரை சம்பளமற்ற விடுமுறையில் முழு நேர அடிப்படையின் பேரில் விடுவித்தல்.
- 22.04.1991 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 1/89( I) இன் 02 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பேரில் ஓய்வு பெறல்.
அரசியல் உரிமைகள் உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவர் வகித்த பதவியில் இருந்து விலகுதல் வேண்டுமா?
ஆம்.
அரசியல் உரிமையற்ற உத்தியோகத்தர் ஒருவர் தேர்தலின் பொருட்டு போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து விலகுதல் வேண்டுமா?
ஆம்.
15.12.2004 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 07/2004 னால் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக்கோவையின் XXXII அத்தியாயத்தின் 1:3 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படல் வேண்டும்.
மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் அரசின் கொள்கை
க.பொ.த. (சா.த) பரீட்சையில் விருப்பத்திற்குரிய/இரண்டாம் மொழியாக சிங்களம்∕தமிழ் மொழியில் சித்தியடைந்திருத்தல் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 29/98 இன் கீழ் மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2007 இன் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை செலுத்துவதற்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது.
சிங்கள மொழி மூலம் பின்பற்றப்பட்ட பாடநெறியில் உப பாடமொன்றாக ஆங்கில மொழியில் சித்தியடைந்திருத்தலின் பேரில் ஊக்குவிப்புக் கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
முடியாது.
ஏதாவது ஒரு பதவியின் பொருட்டு ஆட்சேர்ப்பு நடைமுறை∕சேவை பிரமாணக் குறிப்பில் ஆட்சேர்ப்பின் பொருட்டு ஒரு தகைமையாக மொழித் தேர்ச்சி வேண்டப்பட்டிருப்பின் அம்மொழித் தேர்ச்சியின் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 29/98 அல்லது அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2007 இற்கமைய ஊக்குவிப்புக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியுமா?
முடியாது.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 29/98 இன் கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை வழங்குவதற்கு ஊழியர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்களை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
அந் நிறுவனத்தின் ஆங்கில மொழி டிப்ளோமாவை அல்லது ஆங்கில மொழி மூலம் பட்டமொன்றை பயின்று சான்றிதழ்கள் பெற்றிருப்பின் அச்சான்றிதழ்கள் ஊக்குவிப்புக் கொடுப்பனவின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம்.
பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 29/98 இன் கீழ் மொழியின் பொருட்டான கொடுப்பனவினை நியமனம் கிடைக்கப் பெற்ற திகதி தொடக்கமா? வாய் மொழி மூலப் பரீட்சையில் சித்தியடைந்த∕விடுவிக்கப்பட்ட திகதி தொடக்கமா? ஊக்குவிப்புக் கொடுப்பனவின் பொருட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்ட திகதி தொடக்கமா? கொடுப்பனவு செய்தல் வேண்டும்?
உத்தியோகத்தர் நியமனம் பெற்ற திகதிக்கு எழுத்து மூல தகைமையினைப் பெற்றிருப்பின் மற்றும் வாய்மொழி மூலப் பரீட்சையில் சித்தியடைந்து/ விடுவிக்கப்பட்டிருப்பின், அவர் ஊடாக குறித்த மொழி மூலம் பெற்றுக் கொண்டுள்ள சேவையினைக் கருத்திற் கொண்டு, வாய்மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த∕விடுவிக்கப்பட்ட திகதியினைக் கருத்திற் கொள்ளாது, நியமனம் கிடைக்கப் பெற்ற திகதி தொடக்கம் கொடுப்பனவினைச் செலுத்தும் பொருட்டு தீர்மானம் எடுப்பதற்குத் திணைக்களத் தலைவருக்கு இயலும்.
மீளச் சேவையில் ஈடுபடுத்தும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 29/98 அல்லது அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2007 இன் கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவரா?
உரிமையில்லை.
க.பொ.த.(உ.த.) பரீட்சையில் பொது ஆங்கில பாடத்தினை (General English) சித்தியடைந்திருத்தல், அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 29/98 கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை கொடுப்பனவு செய்யும் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது.
அரச கரும மொழித் திணைக்களத்தின் ஆரம்பத் தமிழ் பாடநெறி∕உயர் தமிழ் பாடநெறி/ஆரம்ப சிங்களப் பாடநெறி∕உயர் சிங்களப் பாடநெறியினைப் பின்பற்றி சித்தியடைந்ததன் பேரில் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2007 கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
முடியாது
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 29/98 இன் கீழ் சிங்களம்∕தமிழ் அரச கரும மொழியின் பொருட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2007 இன் ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் பெற்றுக் கொள்ளும் மொழித் தேர்ச்சியின் பொருட்டான கொடுப்பனவை தொடர்ந்தும் கொடுப்பனவு செய்ய முடியுமா?
முடியும்
ஒழுக்காற்று நடைமுறைகள்
ஆரம்ப விசாரணையினை நடாத்துவதற்கு ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த முடியுமா?
முடியாது.
அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர் ஒருவரையே ஈடுபடுத்தல் வேண்டும். அவ்வாறாயினும் அத்தியாவசிய சந்தர்ப்பத்தில் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை ஈடுபடுத்துவதற்கு கருதின், அதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் முன் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
குற்றப் பத்திரம், சாட்சிப் பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப்பட்டியல் ஆகியவற்றை எத்தனை சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனை?
தாபன விதிக் கோவையின் II வது தொகுதியில் XLVIII வது அத்தியாயத்தில்;
- 14:4 வது பிரிவிற்கமைய குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு, முறையான ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் வரையிலான கால எல்லையினுள் தேவையானளவு தடவைகள் குற்றப்பத்திரத்தை திருத்தம் செய்வதற்கு ஒழுக்காற்று அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
- 14:6 பிரிவிற்கமைய, முறையான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், எழுப்பப்பட்டுள்ள குற்றம் தொடர்பாக குற்றப்பத்திரத்தை இரு தடவைகள் திருத்தம் செய்ய முடியும்.
- 14:8 பிரிவிற்கமைய, முறையான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சாட்சிப்பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப்பட்டியலை இரு தடவைகள் திருத்தம் செய்ய முடியும்.
முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது முறைப்பாட்டினை நடாத்தும் உத்தியோத்தருக்கு சாட்சிப்பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப் பட்டியலை திருத்தம் செய்யும் போது புதிதாக சாட்சிப் பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்களை குற்றப்பத்திரத்திற்கு உட்படுத்த முடியுமா?
முடியும். தாபன விதிக்கோவையின் II வது தொகுதியில் XLVIII வது அத்தியாயத்தில் 14:8 வது பிரிவில் ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையின் போது சாட்சியாளரினால் செய்யப்படும் எழுத்து மூலக் கூற்றொன்றை முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது சாட்சியொன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
தாபன விதிக் கோவையின் II வது தொகுயில் XLVIII அத்தியாயத்தில் 21:13 வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய ஆரம்ப விசாரணையின் போது வழங்கப்பட்டுள்ள எழுத்து மூல கூற்றொன்று உண்மையானதென சாட்சியாளரினால் முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது ஏற்றுக் கொள்ளப்படுமாயின், அதனை முறையான ஒழுக்காற்று விசாரணையில் சாட்சியொன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவரது தொலைபேசி அல்லது வேறொரு உரையாடலின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாவை, முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது முறைப்பாட்டின் சாட்சியாக சமர்ப்பிக்க முடியுமா?
சமர்ப்பிப்பதற்கு சட்ட ரீதியான தடைகள் இல்லை. தொலைபேசி அல்லது வேறு உரையாடலை ஒலிப்பதிவு செய்த நபர் அல்லது அத் தொலைபேசி உரையாடலுடன் தொடர்புடைய மற்றைய நபர் குறித்த விசாரணையின் சாட்சியாளராக அழைக்கப்பட்டிருப்பின் குற்றவாளியினால் செய்யப்பட்ட கூற்றை சுதந்திரமாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
முறையான ஒழுக்காற்று விசாரணையொன்று நடைபெற்றிருக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட உத்தியோகத்தர் மரணமடையும் சந்தர்ப்பத்தில் ஒழுக்காற்று விசாரணையை இடைநிறுத்தி தீர்மானத்தினை வழங்க முடியுமா?
ஒழுக்காற்று விசாரணையை இடைநிறுத்த முடியும். ஆனால் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தவறு தொடர்பாக முடிவொன்றிற்கு வருவதற்கு இயலாது.
உத்தியோகத்தர் சேவையில் இருந்த போது புரிந்த குற்றம் தொடர்பாக அவர் ஓய்வு பெற்றதன் பின்னர் தெரியவரும் சந்தர்ப்பத்தில் குறித்த தவறு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்?
குறித்த உத்தியோகத்தர் ஓய்வூதிய நியதிச் சட்டக் கோவையின் 12 வது பிரிவின் கீழ் ஓய்வு பெற்றிராவிடின், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியாது என்பதுடன், வழக்கிலுள்ள பொதுவான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
உத்தியோகத்தர் சேவையில் இருந்த போது புரிந்த குற்றம் தொடர்பாக அவர் ஓய்வு பெற்றதன் பின்னர், தெரிய வரும் சந்தர்ப்பத்தில் அரசிற்கு நட்டங்கள் ஏற்பட்டிருப்பின், அதனை அறவிட்டுக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன?
பொதுவான சட்டத்தின் கீழ் நடவடிக்கையினை மேற்கொண்டு, ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் குற்றவாளியாயின் அவரால் அரசிற்கு ஏற்பட்ட நட்டத்தினை, ஓய்வூதிய நியதிச் சட்டக் கோவை 43 (அ) பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த உத்தியோகத்தரின் ஓய்வூதியத்தில் இருந்து அறவிட்டுக் கொள்வதற்கு வாய்ப்புண்டு.
ஓய்வூதியம்
சுயவிபரக் கோவையில் கடிதங்கள் தொலைந்து போயுள்ள காரணத்தால், ஓய்வூதிய சேவைக் காலம் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ள போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
14.06.1973 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 121 இன் 5:4 வது பிரிவிற்கமைய திணைக்களத் தலைவரினால் பதவிநிலை உத்தியோகத்தர்கள் இருவர் அடங்கிய பரிசீலனைக் குழுவொன்றை நியமித்து, குறித்த சேவைக் காலம் தொடர்பான சிபாரிசினை ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
20 வருட சேவைக் காலத்தின் பின்னர், தனது விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு கருதும் உத்தியோகத்தரொருவரது 20 வருட சேவைக் காலத்தினைக் கணக்கிடுவது எவ்வாறு?
உத்தியோகத்தர் ஒருவர் சேவைக்குச் சேர்ந்த நாள் தொடக்கம் 20 வருடங்களை பூர்த்தி செய்யும் நாள் வரையில் மொத்த சேவைக் காலத்தை ஏற்புடையதாகக் கொள்ள முடியும். சம்பளமற்ற விடுமுறைகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பின் அக்காலத்தையும் இச் சேவைக்காலத்தைக் கணக்கிடும் போது ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம்.
திடீர் விபத்துச் சலுகை
திடீர் விபத்து காரணமாக மரணமடைந்த திருமணமாகாத அரச உத்தியோகத்தர் ஒருவர் சார்பாக அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/93 இன் கீழ் சலுகை வழங்கும் போது, பெற்றோர் உயிருடன் இல்லாத போது, இந் நிவாரணப் பணத்தை அவரது திருமணமாகாத சகோதர∕சகோதரிகளுக்கு வழங்க முடியுமா?
அவ்வாறான சந்தர்ப்பத்தில் நிவாரணப் பணத்தை உத்தியோகத்தரின் திருமணமாகாத தொழிலற்ற சகோதர சகோதரிகளுக்கு சம பங்குகளாக வழங்க முடியும்.
பயங்கரவாத விபத்து∕நாசகார செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்கள்
பயங்கரவாத செயற்பாடு காரணமாக இறந்த அரச உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உத்தியோகத்தரின் ஊதியத்தை குழந்தைகளுக்கு வழங்க முடியுமா?
இறந்த உத்தியோகத்தரின் வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் புரிந்து கொண்டதன் பின்னர், அவன்∕அவள் இறந்தவரில் தங்கி வாழ்பவர் எனக் கருத முடியாது எனினும் குழந்தைகள் மேலும் தங்கி வாழ்பவர்களாவர்.
அதற்கமைய 55 வருடங்கள் நிறைவு செய்யும் திகதி அல்லது குழந்தைகள் 26 வயதை நிறைவு செய்யும் திகதி ஆகிய இரண்டில் முதலாவதாக எழும் திகதி வரையில் உத்தியோகத்தருக்குரிய மாதாந்த ஊதியத்தை தடவை தடவையாக பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புப் பெற்றிருந்து அதிகரிப்புகள் மற்றும் கொடுப்பனவுகளுடன் அவரது குழந்தைகளுக்கு (பெண் பிள்ளைகள் எனில் விவாகமாகாதவராக இருத்தல் வேண்டும்) வழங்க முடியும்.
அரச கூட்டுத்தாபனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய உத்தியோகத்தரொருவர், பயங்கரவாத நாசகார நடவடிக்கை காரணமாக மரணமடைந்தால் அவரது தங்கி வாழ்வோருக்கு நிவாரணம் பெற உரித்துண்டா?
13.07.1988 ஆந் திகதிய இலக்கம் 21/88 மற்றும் 30.11.1989 ஆந் திகதிய இலக்கம் 59/89 உடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கமைய அவ்வாறான உத்தியோகத்தரொருவரின் பொருட்டு அவரது தங்கி வாழ்வோருக்குச் சகல கொடுப்பனவுகள் மற்றும் சம்பள ஆண்டேற்றங்களுடன் உத்தியோகத்தருக்குரிய முழுமையான மாதாந்த ஊதியத்தை அவருக்கு 55 வயது நிறைவு செய்யும் நாள் வரை வழங்க முடியும்.
குழந்தைகள் அற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக மரணடைந்தால், அவனது∕அவளது வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் புரிந்தால், இறந்த உத்தியோகத்தரது ஊதியத்தை அவனது∕அவளது பெற்றோருக்கு வழங்க முடியுமா?
திருமணமான அரச உத்தியோகத்தர் ஒருவரது தங்கி வாழ்பவராகக் கருதப்படுவது வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத தொழிலற்ற குழந்தைகளே என்பதால், மேற்படி உத்தியோகத்தரது பெற்றோருக்கு ஊதியத்தினை வழங்க முடியாது.
பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இறந்த உத்தியோகத்தர் ஒருவரது தங்கி வாழ்வோருக்கு 13.07.1988 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 21/88 இன் ஏற்பாடுகளுக்கமைய செலுத்தப்படும் ஊதியத்தினை, இறந்த உத்தியோகத்தர் 55 வயதை தாண்டிய பின்னரும் கொடுப்பனவு செய்ய முடியுமா?
உத்தியோகத்தர் ஒருவரது ஓய்வு பெறும் விருப்பத்திற்குரிய வயது 55 என்பதால் அதன் பின்னர் ஊதியத்தினைச் செலுத்த முடியாது.
பதிற்கடமைக் கொடுப்பனவு
உத்தியோகத்தர் ஒருவர் தனது நிரந்தர பதவியை விட உயர் பதவியொன்றில் முழு நேரமாகவோ அல்லது நிரந்தர பதவிக்கு மேலதிகமாக பதிற்கடமையின் பொருட்டு முறையான விதத்தில் நியமிக்கப்பட்டுள்ள போது, பதிற் கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்ட திகதி தொடக்கம் முற்தேதியிட்டு நிரந்தரமாக அப்பதவியின் பொருட்டு நியமிக்கபட்ட போது, அந் நியமனத்திற்காக அவனது/அவளது சம்பளத்தைத் தயாரித்து நிலுவைச் சம்பளத்தைச் செலுத்தும் போது, பதிற்கடமைக் காலத்தின் பொருட்டு செலுத்தப்பட்ட பதிற் கடமைக் கொடுப்பனவை மீள அறிவிட்டுக் கொள்ள வேண்டுமா?
அறவிட வேண்டியதில்லை.
வெற்றிடமாகவுள்ள பதவியொன்றின் பொருட்டு முழு நேரமாக பதிற் கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவரது நியமனக் கடிதத்தில் குறித்த பதவியின் பொருட்டு பதிற்கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள காலத்தை குறிப்பிட்டிராத போது அவருக்குச் செலுத்தப்படும் பதிற்கடமைக்கான கொடுப்பனவு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 6/97 இற்கமைய 03 மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்படல் வேண்டுமா?
தாபன விதிக்கோவையின் VII வது அத்தியாயத்தின் 12:5:4 இன் ஏற்பாடுகளை திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 6/97 மூலம், வெற்றிடமாகவுள்ள பதவியொன்றின் பொருட்டு முழுநேரமான பதிற்கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு கொடுப்பனவினைச் செலுத்துவதற்கு ஏற்புடைய அவ் அத்தியாயத்தின் 12:5:1 அல்லது 12:5:2 பிரிவுகள் திருத்தம் செய்யப்படவில்லை. எனவே இப்பிரிவுகளின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் கொடுப்பனவை 03 மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.
இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறை
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 19/2010 இற்கமைய உத்தியோகத்தர் ஒருவருக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய ஆகக் கூடிய இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறைக் காலம் எவ்வளவு?
உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வு பெறும் திகதிக்கு முன்னராக 03 மாத காலத்தினுள் உள்ள அரசின் வேலை செய்யும் நாட்களுக்குச் சமமாக பயன்படுத்தப்படாத விடுமுறைகள் அவன்/அவள் இற்கு உரித்தாக இருப்பின் உத்தியோகத்தருக்கு உச்ச காலப் பகுதியாக 03 மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு இளைப்பாறுவதற்கு முன்னரான விடுமுறையினைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு முன்னரான 03 மாத காலத்தை கணக்கிடும் அரசின் வேலை நாட்களுக்குச் சமமான நாட்களை பயன்படுத்தப்படாத விடுமுறைகளைக் கொண்டிராத உத்தியோகத்தர் ஒருவருக்கு அவன்/அவள் இற்கு உரித்தாகவுள்ள பயன்படுத்தப்படாதுள்ள விடுமுறைகளின் எண்ணிக்கைக்குச் சமமான வேலை நாட்களை இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 19/2010 இன் பிரகாரம் இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறையினை வழங்கும் பொருட்டு உத்தியோகத்தர் ஒருவர் பயன்படுத்தப்படாத விடுமுறையை எப்போது தொடக்கம் கணக்கிடுவது? அது எவ்வாறு?
2007.01.01 ஆந் திகதி தொடக்கம் பயன்படுத்தப்படாத அமைய,ஓய்வு/சுகயீன விடுமுறைகளை இதன் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம். அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 02/2005 இன் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் 2006 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்படாத விடுமுறைகளின் பொருட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாத உத்தியோகத்தர் ஒருவர் அவன்/அவள் சார்பாக 2006.01.01 ஆந் திகதி தொடக்கம் பயன்படுத்தப்படாத அமைய, ஓய்வு/சுகயீன விடுமுறைகளை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியும்.
சீருடை உரித்து
சீருடை உரித்துடைய அலுவலக உதவியாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் யார்?
அலுவலக உதவியாளர் சேவையின் II ஆம் வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே சீருடை உரித்தாகும். அலுவலக உதவியாளர் சேவையின் I வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கு சீருடை உரித்து இல்லையெனினும் 2009.04.28 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 08/2009 இன் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் அவர்களுக்கு சீருடைகளை வழங்கலாம். அலுவலக உதவியாளர் சேவையின் III ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு சீருடைக்கு உரித்தில்லை.
ஆட்சேர்ப்புத் திட்டம்.
ஆட்சேர்ப்பு நடைமுறையைத் தயாரிப்பதற்காக பயன்படுத்த வேண்டிய மாதிரிப் படிவம் எது? அதை எப்படி பூர்த்தி செய்யவேண்டும்?
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.psc.gov.lk)வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் 2015.03.26 ஆந் திகதிய அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கை 01/2015 மூலம் திருத்தப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிப் படிவத்தின் பிரகாரம் ஆகும்.
அரசாங்க சேவைகள் சுற்றறிக்கை 06/2006 வெளியிடப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு பதவியின் பொருட்டும், வெவ்வேறாக அனுமதிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத் திட்டம், அச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னரும் அவ்வாறே அனுமதிக்கப்படல் வேண்டுமா?
இல்லை. ஒவ்வொரு பதவியின் பொருட்டும் ஆட்சேர்ப்புத் திட்டத்தினைத் தயாரிப்பதற்குப் பதிலாக, இயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே சேவைப் பிரிவின் பொருட்டு ஒரு ஆட்சேர்ப்புத் திட்டத்தினை தயாரித்தல் வேண்டும்.
பதவிப் பெயர் | சேவைப் பிரிவு |
தொழிலாளர் | கனிஷ்ட - தொழில் நுட்பம் அல்லாத |
காவலாளி | |
சாரதி உதவியாளர் | |
விடுதிப் பொறுப்பு உதவியாளர் |
ஒரு ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அங்கீகாரம் அளிக்கும் செயற்பாட்டில், அமைச்சு/திணைக்களத்திடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவதற்கான அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கும் அதிகாரி யார்?
- பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டிய அதிகாரிகள்
தாபனப் பணிப்பாளர் நாயகம்
தேசிய சம்பள ஆணைக்குழு
முகாமைத்துவ சேவை திணைக்களம்
- அனுமதியளிக்கும் அதிகாரி
அரசாங்க சேவை ஆணைக்குழு
ஆட்சேர்ப்பு நடைமுறைகளை பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அனுப்புவது எவ்வாறு?
அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடைமுறையைத் தயாரித்து திணைக்களத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரின் பரிந்துரையுடன் முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பதவிகளை அங்கீகரித்த கடிதத்தின் பிரதி மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பாக தேசிய சம்பள ஆணைக் குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியுடன் தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
ஆட்சேர்ப்புத் திட்டமொன்றிற்கு சிபாரிசைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய ஆவணங்கள் யாவை?
- ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவி/பதவிகளின் பொருட்டு நி.பி. 71 கீழான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக் கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள் அல்லது அனுமதிக்கப்பட்ட அலுவலகக் குழாமின் உப பட்டியல்.
- ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவிகள்/பதவிகளின் பொருட்டு சம்பளத்தை சிபாரிசு செய்து தேசிய சம்பள மற்றும் ஊழியர் எண்ணிக்கை தொடர்பான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள்.
ஆட்சேர்ப்புத் திட்டமொன்று அனுமதியின் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் போது ஆட்சேர்ப்புத் திட்டத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய ஆவணங்கள் எவை?
- முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் நி.பி. 71 கீழான பதவி∕பதவிகள் அனுமதிக்கப்பட்ட கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள் அல்லது அனுமதிக்கப்பட்ட அலுவலகக் குழாமின் உப பட்டியலின் பிரதியொன்று
- ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு தற்போது அனுமதிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டமொன்று இருப்பின் அவற்றின் பிரதியொன்று
- தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் சிபாரிசு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியொன்று
- Copy of the letter by which the National Salaries and Cadres Commission has made recommendations
பொது நிர்வாகச் சுற்று நிருபம் 6/2006 இற்கு அணுகூலமாகஅனுமதிக்கபட்ட ஆட்சேர்ப்புத் திட்டமொன்றை திருத்தம் செய்வதற்குத் தேவையாயின் அதனை மேற்கொள்வது எவ்வாறு?
1589/30 என்னும் இலக்கமுடைய 2009.02.20 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிமுறைகளில் IV வது அத்தியாயத்தின் 36 மற்றும் 37 வது பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.
இலங்கை விஞ்ஞான சேவைகள் பிரமாணக் குறிப்பின் நியதிகளை கட்டுப்படும் இலங்கை விஞ்ஞான சேவைக்கும் இலங்கை தொழில்நுட்ப சேவைகள் பிரமாணக் குறிப்புக்கள் கட்டுப்படும் இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் பொருட்டு ஆட்சேர்ப்புத் திட்டங்களைத் தயாரிக்கப்படல் வேண்டுமா?
ஆம். இச்சேவைகளின் பொருட்டு சேவைகள் பிரமாணக் குறிப்புக்கள் இருப்பினும், அச்சேவைகள் பிரமாணக் குறிப்புக்களினால் கட்டுப்படும் பதவிகளின் பொருட்டு வெவ்வேறான ஆட்சேர்ப்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளது.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமா?
ஆம். தற்காலிக அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்புத் திட்டமும், ஒப்பந்த அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பும் திட்டமும் தயாரிக்கப்படல் வேண்டும்.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால், தற்போது பதவி வகிக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கு தனிப்பட்ட வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இற்கமைய ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமா?
இல்லை. இப்பதவியின் உத்தியோகத்தருக்கு தனிப்பட்ட வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தயாரிக்கப்பட வேண்டியது ஆட்சேர்ப்புத்திட்டம் அல்ல பதவி உயர்வு திட்டமாகும்.
சேவைகள் பிரமாணக் குறிப்பு
சேவைகள் பிரமாணக் குறிப்பினை அனுமதித்துக் கொள்ளும் முறையும், ஆட்சேர்ப்புத் திட்டமொன்று அனுமதிக்கும் முறையும் வேறுபடுவது எவ்வாறு?
சேவைகள் பிரமாணக் குறிப்பினை அனுமதித்துக்கொள்ளும் போது பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் கொள்கை ரீதியான அனுமதி தேவையெனத் தீர்மானிக்கப்படும் விடயங்கள் தொடர்பாக கொள்கை ரீதியான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குறித்த அமைச்சின் செயலாளரினால் அவ்விடயங்களை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். ஏனைய நடவடிக்கைகள் ஆட்சேர்ப்புத் திட்டத்தை அனுமதிக்கும் போது கடைப்பிடித்த நடை முறையிலேயாகும்.
மொழிக் கொள்கைகள்
2007.07.01ஆந் திகதிக்கு முன் அரசாங்க சேவை/மாகாண அரசாங்க சேவையில் நிரந்தரப் பதவியில் பணியாற்றிய ஒரு உத்தியோகத்தர் 2007.07.01 ஆந் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட அல்லது தகுதியின் அடிப்படையில் புதிய பதவியில் நியமிக்கப்படும்போது, அவர் பணியில் சேர்ந்த அரச கரும மொழிக்கு மேலதிகமாக வேறு அரச கரும மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டுமா?
ஆம். 2014.01.21ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 01/2014 மற்றும் அதன் துணை சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகளுக்குப் பதிலாக 2020.10.16 அன்று வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் விதிமுறைகளுக்கு இணங்க, வேறு அரச கரும மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.
2007.07.01 ஆந் திகதிக்கு முன்னர் அரச சேவைக்கு ∕ மாகாண அரச சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் அவசியமா?
2007.07.01 ஆந் திகதிக்கு முன்னர் அரச சேவைக்கு∕மாகாண அரச சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 07/2007 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சி ஏற்பாடுகள் ஏற்புடையதற்றது எனினும் ஆட்சேர்ப்பின் போது ஏற்புடையதாக்கிக் கொண்ட சேவைகள் பிரமாணக் குறிப்பில்∕ஆட்சேர்ப்புத் திட்டத்தில் மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக ஏனைய ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டிருப்பின் அதற்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.
அங்கவீனமுற்றொருவரின் பொருட்டு தொழில் வழங்கல்
அங்கவீனமுற்ற நபர்களுக்குத் தொழில் வழங்குதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள, 18.08.1988 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/88 மேலும் தொடர்ந்து அமுலில் உள்ளதா? திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அதற்கமைய நடவடிக்கைகளை எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது?
இச்சுற்றறிக்கை மேலும் தொடர்ந்து அமுலில் உள்ளதுடன் 29.01.1999 ஆந் திகதியில் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 01/99 மூலம் மேற்படி சுற்றறிக்கையின் ஏற்பாடுகளை கடைப்பிடித்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர அச்சுற்று நிருபத்தில் வேறு எவ்வித திருத்தங்களும் இல்லை.
ஆட்சேர்ப்பின் போது அங்கவீனமுற்ற நிலை தொடர்பாக அரச வைத்தியர்கள் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் அடங்கிய பரிசீலனைகள் மூலம் அங்கவீனமுற்றதாக உறுதிப்படுத்தி அச்சபையின் சிபாரிசின் பேரில் ஆட்சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை அரசாங்க சேவை / மாகாண அரசாங்க சேவை / அரசாங்க கூட்டுத்தாபனங்கள் / நியதிச்சட்ட சபைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்புடைய விதிகள் எவை?
விண்ணப்பித்த பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை / சேவை பிரமாணக் குறிப்பின் படி தேவையான தகைமைகளைக் கொண்டுள்ள, அவர்களது இயலாமையானது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காத நிலையில், அரசாங்க சேவை / மாகாண அரசாங்க சேவை / அரசாங்க கூட்டுத்தாபனங்கள் / நியதிச்சட்ட சபைகளுக்கு உள்ள வெற்றிடங்களுக்கு திறந்த அடிப்படையில் நிரப்பும் போது 3% வெற்றிடங்களை மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்புவதற்கான ஏற்பாடுகள் பொது நிர்வாக சுற்றறிக்கைகள் 27/88 மற்றும் 01/99 ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ளன.
சம்பளக் கொள்கை மற்றும் சம்பள முரண்பாடு
பதவி உயர்வுத் திகதியும் சம்பள ஆண்டேற்றத் திகதியும் ஒரே திகதியில் இருப்பின், பதவி உயர்வின் போது சம்பள மாற்றியமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்?
அவ்உத்தியோகத்தருக்கு முன்னைய பதவியில்∕வகுப்பில்∕தரத்தில் அன்றைய தினத்திற்குரிய சம்பள ஆண்டேற்றத்தை வழங்கி, அதற்கமைய கிடைக்கப் பெறும் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தாபன விதிக்கோவையில் VII அத்தியாயத்தின் 05 பிரிவிற்கமைய பதவி உயர்வின் போது சம்பளத்தினைத் தயாரித்தல் வேண்டும்.
உத்தியோகத்தரொருவரது “அடிப்படைச் சம்பளம்” மற்றும் “இணைந்த சம்பளம்” எனக் கருதுவது என்ன?
“அடிப்படைச் சம்பளம்” மற்றும் “இணைந்த சம்பளம்” என இரண்டு வசனங்களினாலும் கருதப்படுவது உத்தியோகத்தருக்குரிய சம்பள அளவுத்திட்டத்திற்குரிய கொடுப்பனவுகள் அற்ற மாதாந்த சம்பளமாகும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 7/2000 இன் மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபனக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:3:1 வது உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “மிகக் கிட்டிய அடுத்த உயர்ந்த சம்பளப் படிநிலை” எனக் கருதப்படுவது யாது?
மிக அண்மித்த உயர் சம்பளப் படிநிலையாகும்
மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறமை போட்டிப்பரீட்சைகளினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களின் போது பதவி உயர்வினைக் கருத்திற் கொள்ளாது சம்பளத்தினைத் தயாரிக்க முடியுமா?
புதிய நியமனத்திற்குரிய சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தில், மட்டுப்படுத்தப்பட்ட அல்லது திறமை மூலமான ஆட்சேர்ப்பின் பொருட்டு தகைமைகள் பெற்ற பதவிகளாக காட்டப்பட்டுள்ள பதவியொன்றில் கடமையாற்றியிருப்பின், அவ்வாறான நியமனமொன்று பதவி உயர்வாகக் கருதி சம்பளத்தை தயாரிக்க முடியும்.
மத்திய மட்டத்திலான தொழில்நுட்ப சேவையின் I ஆம் வகுப்பிலிருந்த, 25.07.1994 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 27/94 இற்கமைய, இலங்கை தொழில்நுட்ப சேவையின் விசேட வகுப்பிற்கு உள்ளீர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 31.10.2011 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 07/2008 (II) இன் ஏற்பாடுகள் ஏற்புடையனவா?
இல்லை. அவ் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டியது இலங்கை தொழில்நுட்ப சேவை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விசேட வகுப்பிற்கு பதவி உயர்த்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மட்டுமே.
நாடளாவிய பரந்த சேவையொன்றில் அல்லது அதனொத்த சம்பளத்தினைக் கொண்ட பதவியொன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 01.01.2006 ஆந் திகதி I ஆம் வகுப்பிற்கு பதவியுயர்த்தப்பட்டால், அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 (VII) இற்கமைய சம்பள மாற்றியமைப்பினை மேற்கொள்வது எவ்வாறு?
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 (VII) இற்கமைய ஏனைய தகைமைகளைப் பெற்றிருப்பின், 31.12.2005 ஆந் திகதி நாடளாவிய பரந்த சேவையில் அல்லது அதனொத்த சம்பளத்தினைக் கொண்ட பதவியொன்றில் II ஆம் வகுப்பிற்குரிய பெற்றுக் கொண்ட சம்பளப் புள்ளிக்கு சம்பள ஆண்டேற்றங்கள் 3ஐ அச்சம்பளத் திட்டத்திற்கு வழங்கி அதன் பின்னர் I ஆம் வகுப்பின் பதவி உயர்விற்கமைய 01.01.2006 ஆந் திகதிக்கு சம்பள மாற்றியமைப்பினைச் செய்தல் வேண்டும்.
ஏதாவது ஒரு பதவியின் பொருட்டு மிகை ஊழியர் அடிப்படையில் பதவி உயர்த்தப்படும் உத்தியோகத்தர் ஒருவர் பின்னர் அப் பதவியின் பொருட்டே நிரந்தரமாக நியமிக்கும் போது உரித்தாவது ஒரே சம்பள முறை என்பதால், சம்பள ஆண்டேற்ற திகதியை மாற்றி, மேலதிக சம்பள ஆண்டேற்றமொன்றினை வழங்குவதற்கு வாய்ப்புக்கள் உண்டா?
மிகை ஊழியர் அடிப்படையின் பேரில் நியமிக்கும் போது, பதவி உயர்வாக சம்பள மாற்றியமைப்பினை மேற்கொண்டிருப்பின், மீண்டும் மேலதிக ஆண்டேற்றம் ஒன்றை வழங்க முடியாது. அத்துடன் அதி ஊழியர் அடிப்படையின் பேரில் பதவி உயர்வினை மேற்கொண்ட திகதியே அடுத்து வரும் சம்பள ஆண்டேற்ற திகதிகளாகக் கருதி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
உத்தியோகத்தர் ஒருவர் சம்பள ஆண்டேற்ற திகதியிலேயே ஓய்வு பெறுவாராயின் அன்றைய தினத்திற்குரிய சம்பள ஆண்டேற்றத்தினை வழங்கி அவரின் ஓய்வூதியத்தினைத் தயாரிக்க முடியுமா?
உத்தியோகத்தர் சம்பள ஆண்டேற்றத்தினை உரிய முறையில் உழைத்திருப்பின் குறித்த சம்பள ஆண்டேற்றத்தை வழங்கி ஓய்வூதியத்தைத் தயாரித்தல் வேண்டும்.
முன் அறிவித்தல் எதுவுமின்றி விலகும் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய “மாதாந்தச் சம்பளம்” எனக் கருதப்படுவது என்ன?
அறிவிடப்பட வேண்டியது, கொடுப்பனவுகள் அற்ற மாதாந்த அடிப்படைச் சம்பளத்தை மட்டுமே.
பதவியொன்றின் இடைநடுவில் ஒரு வகுப்பொன்றில் பதவி உயர்வுகள் பெற்றிராத என்னும் நிரலின் கீழ் உச்சநிலைக்கு வரும் உத்தியோகத்தர் ஒருவரது அடுத்து வரும் பதவி உயர்வின் பொருட்டு கடமையாற்ற வேண்டிய குறிப்பிட்ட சேவைக்காலத்தினை நிறைவு செய்யாதவிடத்து அவன்∕அவள் இற்கு தொடர்ந்தும் சம்பள ஆண்டேற்றங்களை செலுத்த முடியுமா?
இடைநடுவில் ஒரு வகுப்பொன்றில் உச்ச நிலைக்கு வரும் எந்தவொரு பதவியிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு மேலும் தொடர்ந்து சம்பள ஆண்டேற்றங்களைச் செலுத்த முடியாது. அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இன் இணைப்பு II இன் 4:5 பந்தியின் பிரகாரம் ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக்குறிப்பின் ஏற்பாடுகளுக்கமைய, சேவைக்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு தடையற்ற பதவி உயர்வு முறைமையுள்ள சேவையொன்றில்∕பதவியொன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு, சம்பளத் திட்டத்தில் உச்சநிலையினை அண்மித்து அப்பதவி உயர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, கடமையாற்ற வேண்டிய “நிச்சயிக்கப்பட்ட சேவைக் காலம்” வரையில் மட்டும் சம்பள ஆண்டேற்றத்தினை உழைத்திருப்பின், மேலும் தொடர்ந்து சம்பள ஆண்டேற்றத்தை வழங்குவது தொடர்பாகக் கருத்திற் கொள்ளும் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு முன் வைத்தல் வேண்டும். (இவ்விடயத்தில் “நிச்சயிக்கப்பட்ட சேவைக்காலம்” எனக் கருதப்படுவது சாதாரண செயலாற்றுத் திறன் மதிப்பின் கீழ் சுயமான பதவி உயர்வொன்றினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏற்புடையதான கால எல்லையாகும்.)
கனிஷ்ட ஊழியர் சேவையில் I ஆம் வகுப்பில் கடமையாற்றும் போது பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையில் பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் புதிய பதவிக்குரிய சம்பள திட்டத்தின் உச்சநிலையினை அடைந்திருப்பின் அவன்∕அவள் அமைக்கப்படும் சம்பளப் புள்ளியைத் தீர்மானிப்பது எவ்வாறு?
பொது நிர்வாகச் சுற்று நிருப இலக்கம் 06/2006 இன் இணைப்பு 02 இன் 4:5 வது பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.
விசேட தரத்தில் இதுவரையிலும் அமுல்படுத்தப்படாத PL - 1, PL - 2, PL - 3 பிரிவுகளின் I வகுப்பில் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களுக்கு 12.06.2008 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006(V) இற்கமைய உச்ச சம்பளப் புள்ளியான 43 வது புள்ளியினை அண்மித்து சம்பள ஆண்டேற்றத்தினை வழங்க முடியுமா?
வழங்குதல் வேண்டும்.
ஏதாவதொரு பதவியொன்றின் ஆரம்ப தரத்தின் சம்பள ஆண்டேற்றத்தின் அளவை விட கூடிய சம்பள ஆண்டேற்றத்தை பெற்றுக் கொண்டிருந்த பதவியொன்றில் இருந்து (உதா: கனிஷ்ட சேவைகள் தரத்தின் I வகுப்பிலிருந்து பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் III வகுப்பிற்கு பதவி உயர்வு) வேறொரு பதவிக்கு பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு முன்னைய பதவியின் சம்பள ஆண்டேற்றத்தின் அளவிலேயே ஒப்பீட்டுக் கொடுப்பனவினை வழங்க முடியுமா?
முடியாது.
இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளச்சேவையில் ஈடுபடுத்தல்
இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்களை மீளச் சேவையில் ஈடுபடுத்தும் போது ஏற்புடையதான சுற்றறிக்கைகள் என்ன?
- 12.02.1997 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2007
- 16.11.2011 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 24/2011
பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி வகுப்பில் இளைப்பாறும் உத்தியோகத்தர் ஒருவர் 11.05.2007 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2007 இற்கமைய நிர்வாக உத்தியோகத்தர் பதவியில் மீளச் சேவையில் ஈடுபடுத்தும் போது உரித்தாகும் கொடுப்பனவு எவ்வளவு?
இளைப்பாறும் சந்தர்ப்பத்தில் இறுதியாகப் பெற்ற சம்பளத்தின் 50% அல்லது ரூபாய் 15,000 ஆகிய இரண்டில் அதிகமான தொகையாகும். (அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2007 இன் 02 (v) வது பந்தி)
சேவையிலுள்ள படையினர்களை அரச சேவையின் பதவியொன்றின் பொருட்டு நியமிக்கும் போது ஏற்புடையதான ஏற்பாடுகள் எவை?
1589/30 இலக்கமுடைய 20.02.2009 ஆந் திகதிய அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளின் 95 வது பிரிவு ஏற்புடையதாகும்.
ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் ஈடுபடுத்திய ஓய்வூதியகாரர்களுக்கு விடுமுறை உரித்து உண்டா?
19.05.1986 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 329 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை பெற்றுக் கொள்ளலாம்.
ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் ஈடுபடுத்திய ஓய்வூதியகாரர்களுக்கு சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு செலுத்தப்படும் கொடுப்பனவை கணக்கிடுவது எவ்வாறு?
மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை நாள் சம்பளத்தினைக் கணக்கிடல், மீளச் சேவையில் ஈடுபடுத்துதலின் பொருட்டு செலுத்தப்படும் ஊதியத்திற்கமைய மேற்கொள்ளல் வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்படும் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு மொழித் தேர்ச்சிக்கான கொடுப்பனவு, வருடாந்த சம்பள ஆண்டேற்றங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு உரித்துண்டா?
இல்லை.
இளைப்பாறிய உத்தியோகத்தர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பதவிக்கு மேலதிகமாக, தாபன விதிக்கோவையில் VII அத்தியாயத்தின் 12:2:5 இன் ஏற்பாடுகளுக்கமைய மேலும் ஒரு பதவியில் பதிற் கடமையின் பொருட்டு/கடமைகளை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருப்பின், பதிற் கடமை/கடமைகளைக் கவனித்தலின் பொருட்டு கொடுப்பனவுகளைச் செலுத்த முடியுமா?
பதிற் கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பின் பதிற் கடமையின் பதவிக்குரிய ஆரம்ப சம்பளத்தில் ¼ம், கடமைகளைக் கவனிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பின் கடமைகளைக் கவனிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள பதவியின் ஆரம்பச் சம்பளத்தில் 1/6 ம் கொடுப்பனவாகக் செலுத்த முடியும்.
கௌரவ அமைச்சரவைக்குரிய அமைச்சர்களினதும் மற்றும் பிரதி அமைச்சர்களினதும் தனிப்பட்ட அலுவலகக் குழாம்
கெளரவ அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகக் குழாமின் எண்ணிக்கையினர் எவ்வளவு?
ஜனாதிபதி செயலாளரின் CA1/17/1 என்னும் இலக்கமுடைய 14.05.2010 ஆந் திகதிய கடிதத்திற்கமைய எண்ணிக்கையினர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகும்.
|
|
கௌரவ அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் அலுவலக குழாமின் பதவியின் பொருட்டு 01.06.2007 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 6/2006 (IV) இற்கமைய செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் எவ்வளவு?
பதவி | மாதாந்தச் சம்பளம் (அனைத்தும் உட்படுத்தப்பட்ட நிலையான கொடுப்பனவாக) |
அந்தரங்க உதவியாளர் | ரூபா 13990.00 |
முகாமைத்துவ உதவியாளர் | ரூபா 13990.00 |
அலுவலக உதவியாளர் | ரூபா 12330.00 |
சாரதி | ரூபா 12990.00 |
இதற்கு மேலதிகமாக 12.12.2011 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 31/2011 மற்றும் 13.12.2012 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 18/2012 இற்கமைய விசேட கொடுப்பனவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் உரித்தாகும். இவ் உத்தியோகத்தர்களில் யாராவது ஒருவர் தற்போதைக்கும் அரச சேவையின் பதவியொன்றில் அல்லது சேவையொன்றில் அறிக்கையிட்டிருப்பின் அவ் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட வேண்டியது அவன்/அவளின் நிரந்தர பதவிக்குரிய சம்பளமாகும்.
கௌரவ அமைச்சர்களின் அலுவலக குழாமினரின் பொருட்டு மாற்றியமைப்புச் செய்யப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவைச் செலுத்த முடியுமா?
20.09.2005 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 16/2005 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் செலுத்த முடியும்.
அரச உத்தியோகத்தர்களை கௌரவ அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் அலுவலக ஆளணி குழாமிற்கு விடுவித்தல் தொடர்பான ஏற்பாடுகள் என்ன?
விசேட அனுமதி அவசியம் இல்லை என்பதுடன், நியமன அதிகாரிக்கு விடுவிக்க முடியும். (ஜனாதிபதி செயலாளரின் “அரச செலவு முகாமைத்துவம்” என்னும் தலைப்பிலான CA/1/17/1 இலக்கமுடைய 14.05.2010 ஆந் திகதிய கடிதத்திற்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என 19.12.2012 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.)