நிர்வாக சேவை பிரிவு
இலங்கை நிர்வாக சேவை தொடர்பாக அமைச்சரவை மற்றும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் விதிக்கப்படுகின்ற சகல கொள்கைகளையும் செயலாளரின் அங்கீகாரத்துடன், இலங்கை நிர்வாக சேவைகள் பிரிவு அமுல்படுத்துகின்றது.
பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள்
பெறுபேறுகளை உறுதி செய்து கொள்வதற்காக சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புதல்
- கல்விச் சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
இடமாற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு சிபார்சுகளை வழங்குதல்
- அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை ஒழுங்குவிதிக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் (VII மற்றும் XVIII ஆம் அத்தியாயங்கள்)
- இலங்கை நிர்வாக சேவையின் வருடாந்த இடமாற்ற ஒழுங்குமுறைக்கு அமைவாக
இலங்கை நிர்வாக சேவையின் பிரமாணக் குறிப்புக்கு அமைவான பாடங்கள் மற்றும் மொழிகள் தொடர்பான தேர்ச்சியை பெற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையிலிருந்து விடுவித்தல்
வினைத்திறன்காண் தடைப் பரீட்சைகள் தொடர்பான பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு சிபார்சுகளை சமர்ப்பித்தல். (அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 02/2011 இற்கமைவாக)
சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு சிபார்சுகளை சமர்ப்பித்தல்
- நடவடிக்கை ஒழுங்குவிதிக் கோவையின் 05 ஆம் பின்னிணைப்புக்கு அமைவான வருடாந்த மீளாய்வு அறிக்கைகளின் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகள்
- இல.அபி.நி.நி. சேவைசார் ஆரம்ப பயிற்சிச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகள்
- மருத்துவச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி (திறந்த ஆட்சேர்ப்புகளுக்கு மாத்திரம்)
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
- வினைத்திறன்காண் தடைப் பரீட்சைப் பெறுபேறுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்
- மொழிசார் தேவைப்பாடுகளில் தேர்ச்சியடைந்தமை அல்லது விடுவிக்கப்பட்டமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்
உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றல் தொடர்பான விபரங்களை அரசாங்க அச்சாளரிடம் சமர்ப்பித்தல்
- மூன்று மொழிகளிலுமான தகவல்கள் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
நாட்டுக்கு வெளியே செல்வதற்கான விடுமுறைகள் (தாபன விதிக் கோவையின் XII 23 ஆம் பிரிவுக்கு அமைவாக)
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பொது 126 ஆம் மாதிரிப் படிவம் (2 பிரதிகள்)
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத் துறைகளுக்காக வெளிநாட்டுக் கற்கைகளுக்கான விடுமுறைகளை வழங்குதல் (முழுச் சம்பளத்துடனானது) – (தாபன விதிக் கோவையின் XII 14 ஆம் பிரிவுக்கு அமைவாக)
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பொது 126 ஆம் மாதிரிப் படிவம் (2 பிரதிகள்)
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
- தாபன விதிக் கோவையின் 8 ஆம் பின்னிணைப்புக்கு அமைவான பிணையின் சான்றுப்படுத்திய பிரதி
- தாபன விதிக் கோவையின் 16 ஆம் பின்னிணைப்புக்கு அமைவான ஒப்பந்தத்தின் சான்றுப்படுத்திய பிரதி [அ.நி. சுற்றறிக்கை 21/2007, 21/2007(I) அமைய]
- பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான கடிதம்
- அரசாங்க நிர்வாக சுற்றிக்கை 21/2007 மூலம் திருத்தியமைக்கப்பட்ட தாபன விதிக் கோவையின் 12 ஆம் பந்தியின் 10.6 ஆம் பிரிவுக்கு அமைவாக மேன்மைதங்கிய சனாதிபதி / கௌரவ பிரதமர் / கௌரவ ஆளுநரின் முன் அங்கீகாரம்
சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை (கற்கை / தொழில் / கற்கையும் தொழிலும்) - தாபன விதிக் கோவையின் XII 16 ஆம் பிரிவுக்கு அமைவாக)
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பொது 126 ஆம் மாதிரிப் படிவம் (2 பிரதிகள்)
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
- உரிய பிணையானது,
- கற்கை நடவடிக்கைகளுக்காக – பின்னிணைப்பு 9
- தொழிலுக்காக - பின்னிணைப்பு 10
- கற்கை மற்றும் தொழிலுக்காக - பின்னிணைப்பு 11
- தாபன விதிக் கோவையின் 16 ஆம் அத்தியாயத்தின் 16.3 ஆம் பிரிவுக்கு அமைவாக ஏற்புடைய அமைச்சரின் முன் அங்கீகாரம்
- தொழில், கற்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடுகின்ற கடிதத்தின் சான்றுப்படுத்திய பிரதிகள்
கடமைகளுக்காக வெளிநாடொன்றிற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள, பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள அரசாங்க அலுவலர் ஒருவரின் வாழ்க்கைத் துணைக்கான சம்பளமற்ற விடுமுறை
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பொது 126 ஆம் மாதிரிப் படிவம் (2 பிரதிகள்)
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
- விவாகச் சான்றிதழ்
- கடமைக்காக வெளிநாட்டுக்கு இணைப்புச் செய்யப்படவுள்ள அலுவலரின் வாழ்க்கைத்துணையின் நியமனக் கடிதத்தின் சான்றுப்படுத்திய பிரதி
சேவைப் பிரமாணக் குறிப்பின் 12 (III) பந்திக்கு அமைவாக குறித்த சம்பளப் படிமுறையில் வைத்தல்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
யாதாயினுமொரு பதவியில் பதில் கடமையாற்றுவது தொடர்பில் உரிய சிபார்சை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தல்
- உரிய மாதிரிப்படிவம் மற்றும் அது தொடர்பான இணைப்புகள்
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
இரண்டாம் நிலையில் சேவையாற்றுவதற்காக விடுவிப்பது தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு சிபார்சுகளை சமர்ப்பித்தல் (நடவடிக்கை ஒழுங்குவிதிகளின் 143 இற்கு அமைய)
- நடவடிக்கை ஒழுங்குவிதிகளின் 10 ஆம் பின்னிணைப்புக்கு அமைவாக முறையாக பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிப் படிவம் (தமது விருப்பத்தின் பேரில் சேவையிலிருந்து விடுவிப்பதற்கான குறித்த அலுவலரின் கோரிக்கை)
- நடவடிக்கை ஒழுங்குவிதிகளின் 11 ஆம் பின்னிணைப்புக்கு அமைவாக முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (விடுவிப்பது அரசாங்கத்தின் தேவையின் அடிப்படையிலாயின்)
- அலுவலரை விடுவிக்க உத்தேசித்துள்ள அமைச்சுச் செயலாளரின் சிபார்சு
- அலுவலரை விடுவிக்க உத்தேசித்துள்ள நிறுவனத் தலைவரின் சிபார்சு
பதவி உயர்வுகள் தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு சிபார்சுகளை சமர்ப்பித்தல்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவம் மற்றும் அது சம்பந்தமான இணைப்புகள்
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
முதலாம் வகுப்பு மற்றும் விசேட தரத்தைச் சேர்ந்த அலுவலர்களின் வருடாந்த சம்பள ஏற்றங்களை அங்கீகரித்தல்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவம்
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
சேவை நீடிப்பு தொடர்பில் அங்கீகாரம் வழங்குதல்
- நடவடிக்கை ஒழுங்குவிதிகளின் 13 ஆம் பின்னிணைப்புக்கு அமைவாக முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
சேவையிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு சிபார்சுகளை சமர்ப்பித்தல்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- திணைக்களத் தலைவரின் சிபார்சு
- ஏற்புடைய செயலாளரின் சிபார்சு
இலங்கை நிர்வாக சேவையின் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழு மற்றும் அமைச்சரவைக்கு சிபார்சுகளை சமர்ப்பித்தல்
சேவை முதுமை தொடர்பான பட்டியலை முகாமைத்துவம் செய்தல்
திருத்தங்கள் ஏதாவது மேற்கொள்ளப்பட இருந்தால், தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும். 011-2698147, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- விசேட தரம்
- தரம் I
- தரம் II
- தரம் III
வெற்றிடங்களின் பட்டியலை முகாமைத்துவம் செய்தல்
திருத்தங்கள் ஏதாவது மேற்கொள்ளப்பட இருந்தால், தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும். 011-2698605, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- விசேட தரம்
- தரம் I
- தரம் II
- தரம் III
தொடர்பு விபரங்கள்
![]() பணிப்பாளர்
|
![]() உதவிப் பணிப்பாளர்
|
![]() உதவிப் பணிப்பாளர்
|
நிர்வாக அலுவலர்
![]() நிர்வாக அலுவலர்
|
|||||||||
நிர்வாக சேவை பிரிவு
|
|||||||||